தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’

அன்புடையீர், வணக்கம்.
ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக  தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘அறிஞர் அண்ணா அறக்கட்டளை’ சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை அமைக்க விரும்புகிறோம்.
ஆகவே இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் சூழ்நிலையில், எந்த கட்சியின் தலையீடும் இல்லாத வகையில் இந்த இல்லத்தை உடனடியாக நாம் நல்ல நிலையில் இருக்கும்போதே நிறுவவேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். நமக்குப் பிறகு நம் சந்ததியினருக்கு இந்த சொத்தை சேர்த்துக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஒவ்வொரு தமிழனும் தமிழுக்காகவும் தமிழகத்திற்காகவும் அறும்பாடுபட்டு தன்னை அற்பணித்த அண்ணாவுக்கு ஏதாவது ஒரு வகையில் பணிசெய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். அண்ணாவைக் கொண்டாடினால் நாம் நல்ல மனிதனாக வாழ்வோம் என்ற எண்ணத்தால் இதை செய்ய விரும்புகிறோம்.
இப்படி ஒரு இல்லம் அமைப்பதாலே மக்களுக்கு என்ன நன்மை என்று தோன்றலாம்.
அண்ணாவைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த இடம் பயன்படும்.
அண்ணாவைப் பற்றிய உண்மைத் தகவல்களை ஒளிவு மறைவில்லாமல் மக்களுக்கு வழங்க இந்த இடம் பயன்படும்.
அண்ணாவை மக்களுக்குச் சொல்வதற்கு இந்த இடத்தை விட்டால் வேறு இல்லை என்ற நிலை இருக்கிறது.
அறிஞர் அண்ணா இல்லத்தின் கீழ் அறிஞர் அண்ணா அறக்கட்டளையின் சீரிய பணிகளைச் செய்யவிருக்கிறோம்.
1. அண்ணாவை மக்களுக்குப் பல்வேறு வழிகளில் தெரியப்படுத்துதல்
2. தமிழ் வளர்ச்சிப் பணிகள் செய்தல்
3. ஏழை எளிய மாணவர்களுக்கான பல்வேறு உதவிகள் செய்தல்
4. மக்கள் பணியில் பங்குகொள்ளுதல்
இன்னும் என்னென்ன நல்ல காரியங்கள் நிகழ்த்தவேண்டுமோ அதை ‘அறிஞர் அண்ணா’ என்ற பெயரின் வாயிலாக செய்ய இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ தேவைப்படுகிறது.
மேலும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை கீழ்க்கண்ட மூன்று இணையதளங்களைப் பராமரிக்கிறது.
http://www.arignaranna.net  (அறிஞர் அண்ணாவைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் அறிய)
http://www.annavinpadaippugal.info   (அறிஞர் அண்ணாவின் படைப்புகளை இலவசமாகப் படிக்க)
http://www.mahakavibharathiyar.info  (மகாககவி பாரதியைப் பயில)
மேலும் இக்கடிதத்துடன் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ தொடர்பான திட்டத்தை இரண்டு பக்கங்களில் இணைத்திருக்கிறோம்.
பார்க்க…
அன்பர்களே, தஞ்சாவூரில் அறிஞர் அண்ணா இல்லம் விரைவில் அமைய தங்களால் இயன்ற நிதியை எங்களுக்கு வழங்கி உதவுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் உதவியோடு, தங்கள் நண்பர்களிடம் இதுபற்றி எடுத்துச் சொல்லி அவர்களிடமிருந்தும் உதவிகள் கேட்டு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு உதவி செய்பவர்கள் அனைவரும் எந்நாளும் தமிழ்கூறும் நல்லுலகம் வாழ்த்தும் அளவுக்கு பதிவுசெய்யப்படுவார்கள்.
இணையதளம் மூலம் அல்லது காசோலை, வரைவோலையை அறிஞர் அண்ணா அறக்கட்டளை (ARIGNAR ANNA TRUST) என்ற பெயரில் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
BANK ACCOUNT DETAIL:
——————–
A/C Name: ARIGNAR ANNA TRUST
A/C No: 6163567210
Bank: INDIAN BANK
Branch: ESWARI NAGAR (1326), THANJAVUR
IFSC Code: IDIB000T095
நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்!
              – மகாகவி பாரதியார்
அன்புடன்,
இரா.செம்பியன்
செயலாளர்,
அறிஞர் அண்ணா அறக்கட்டளை,அண்ணா பேரவை,பாரதி சங்கம்,
தஞ்சாவூர்
போன்: 9003640220
Series Navigation