தந்தைசொல் தட்டினால்…

 

 

 

(ஒரு கதை கவிதையாக)

 

மகன், மருமகள்

பேரன் பேத்தியுடன் அம்மா

 

‘பிள்ளைகளுக்காக அம்மா

தொல்லையின்றி நாம்’  

என்பது மகனின் கொள்கை  

 

பணிப்பெண்ணாய் அம்மா

எப்போதும் அடுக்களையில்

அனைவரும் தனி அறையில்

 

ஒரு நாள்

அம்மாவுக்கு சளி, இருமல்

உறுதியானது கொவிட்

 

அடுக்களையில் அம்மா

ஏழுநாள் தனிவாசம்

ஏழாம் நாள் தந்தையர் தினம்

 

அம்மாவின் அப்பா

அடிக்கடி சொல்வார்

மாமனாரும் கணவரும் கூட

அதையே சொல்வார்கள்

 

‘உனக்கான வீட்டிலேயே

உயிருள்ளவரை இரு’

 

கேட்டாரா அம்மா

வீட்டை மகனுக்குத் தந்ததால்

முகவரி தொலைத்துவிட்டார்

 

இருக்கும்போது

அப்பா சொன்னது

இறந்தபின்தான் புரிகிறது

 

தந்தை சொல் தட்டினால்

தரம் தாழ்ந்துபோவாய்

 

அனைவர்க்கும்  

தந்தையர்தின வாழ்த்துகள்

 

அமீதாம்மாள்

Series Navigationஞாயிற்றுக்கிழமை