தப்பிப்பு

ஏரி நீர்ப்பரப்பில்
மீன் கொத்தி
லாகவமாக
இறங்கி மேலெழும்பிய போது
அதன் அலகில் மீன்
இருந்ததா
என அவதானிக்கவில்லை

வரப்பு வளையில் பதுங்கும்
நண்டு
வேட்டையிலிருந்து தப்பித்த
ஒன்று தான்

முட்டையிலிருந்து வெளி வந்த
சில மணி நேரத்தில்
வல்லூறுக்கு அகப்படாதவையே
கடலுள் உயிர்க்கும்
ஆமைகள்

தராசுத் தட்டுக்கோ
செண்டுக்கோ சரத்துக்கோ
போகாமல்
செடியிலுருந்த மலர்கள்
விழும்முன் சருகாய்

மனவெளிக்கும் சொற்களுக்கும்
பிடிபடாத ஒரு கவிதை
எரிகல்லாய்

யதார்த்தத்திலிருந்து தப்பிப்பு
உண்டு
விடுதலை இல்லை என்றது
கீறி
காலைச் சவரம்
காட்டிய ரத்தம்

Series Navigationதிரைப்படம்: ஹாலிவுட்டின் கதைச்சுரங்கம்