தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்

author
3 minutes, 45 seconds Read
This entry is part 4 of 4 in the series 23 ஜூன் 2019
Image result for Minjur Desalination Plant near Chennai in India

மீள்நுழை ஆஸ்மாசிஸ் முறையில் உப்பு நீக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம்.[ Kattupalli, Tiruvallur Dt, Tamil Nadu ] ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 2 ]

Image result for Minjur Desalination Plant near Chennai in India

Minjur Desalination PlantTamil Nadu

[Click to Enlarge]   +++++++++++++++++++++ 1. https://www.slideshare.net/DrMuhammadNawaz/desalination-importance-challenges-opportunities.2.  https://www.aquatechtrade.com/news/aquatech-news/worlds-largest-desalination-plants/3. https://youtu.be/F8HcoXAuavk4. https://www.advisian.com/en-us/global-perspectives/the-cost-of-desalination#++++++++++++++++++++++++

Image result for Minjur Desalination Plant near Chennai in India

நெம்மேலி, சென்னை உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையம்[ Nemmeli Desalination Plant, Chennai, Tamil Nadu ]

+++++++++++++++++++++++++++++++++

சூரிய வெப்ப சக்தி நிலையம்,
சீரிய முறையில் 
கடல்நீரைக் குடிநீராக்கும் !
தமிழகக் கடற்கரை  
குமரி முதல் சென்னை வரை 
நானூர் மைல் நீண்டது !
மாநிலத் துக்கு தேவை நீர் வெள்ளம் 
பரிதி  வெப்பம் பயன்படும்  
பெரு முயற்சி அரசிடம் வேண்டும். 
ஊராட்சி, நகராட்சி மாநில அரசு 
பாராளும் மன்றத் திட்ட நிபுணர் 
வேர்வை சிந்தி, நிதி திரட்டி  
போர் வினைபோல் புரியக் கிளம்புவீர்.  
பேரு ழைப்பே  பெரும்பயன் அளிக்கும்.
புவிக்கடல் சூடேறி 
புரட்சி துவங்கி விட்டது.
தவிக்கும் மக்கள் இன்று கேட்பது :   
தண்ணீர் !  தண்ணீர் ! தண்ணீர் !
கடல் நீரைக் குடிநீர் ஆக்க
மீள்நுழை ஆஸ்மா சிஸ் முறை உள்ளது.

+++++++++++++++++++++++

 +++++++++++++++++++  

1.  https://youtu.be/4BYXlvnJ9wo2.  https://youtu.be/NgXPooc7KmI3.  https://youtu.be/-ZenuOGTohk4.  https://youtu.be/hJbqafB4POA ++++++++++++++++++ 

1.  https://www.hitachizosen.co.jp/english/pickup/pickup003.html2.https://www.hitachizosen.co.jp/english/products/products011.html3. https://www.hbfreshwater.com/desalination-worldwide.html4. https://www.solarpaces.org/csp-power-water-namibia-study/5.https://en.wikipedia.org/wiki/Concentrated_solar_power6. https://www.unenvironment.org/news-and-stories/story/towards-sustainable-desalination7.https://solarthermalmagazine.com/solar-thermal-power-technology/8. https://en.wikipedia.org/wiki/Desalination  [May 10, 2019] ++++++++++++++++++++++ 

Reverse Osmosis Desalination Plant in Spainமீள்நுழை ஆஸ்மாசிஸ் உப்புநீக்கி நிலையம்[ ஸ்பெயின் ] ++++++++++++++

தமிழகத்தில்  கடல்நீரைக் குடிநீராக்கும்  மாபெரும்  மிஞ்சூர் உப்பு நீக்கி நிலையம்சென்னை நகருக்கு  வடக்கே இருக்கும் மிஞ்சூர் உப்பு நீக்கி  நிலையம் காட்டுப்பள்ளி கிராமத்தில் 2010 ஜூலை முதல் மீள்நுழை ஆஸ்மாசிஸ் [ Reverse Osmosis Process ] முறையில்  இயங்கி வருகிறது.  இது வங்கக் கடல் நீரை வடிகட்டி,த் தட்டு [Membrane]  மூலம் உப்பை நீக்கிக் குடிநீர் ஆக்கி வருகிறது.  இந்தியாவிலே மிகப்பெரும் நிலைய மாகக் கருதப்படும்  இந்த மிஞ்சூர் உப்புநீக்கி நிலை யத்தைக் கட்டிய இருபெரும் நிறுவகங்கள் : Indian Company IVCRL & Spanish  Company Abengoa.  இதன் உற்பத்தித் தகுமை : நாள் ஒன்றுக்கு 100 மெகா லிட்டர் [10 கோடி லிட்டர்].  2010 ஜூலை 25 முதல் இது இயங்கி வருகிறது. இது ஒரு மில்லியன் [10 லட்சம்] சென்னை வாசிகளுக்கு உப்பு நீக்கிய நீர் அளிக்கக் கூடியது.  இந்த ஒரு நிலையத்தைக் கட்டி இயக்க 5.15 பில்லியன் ரூபாய் [ 515 கோடி] செலவாகி உள்ளது.  இந்த நிலையம் பயன்படுத்தும் முறை எளியது, சிக்கன மானது. எந்த வித  வெப்பசக்தி இல்லாமல் இயங்குவது.  இது கடல்நீரில் உப்பை வடிகட்ட மிக நுண்ணிய துளைகள் உள்ள 8600 மீள்நுழை ஆஸ்மாசிஸ் தட்டுகள் [Reverse Osmosis Membranes] கொண்டது.  மிக அழுத்த முறையில் வடிகட்ட, 248 அழுத்த கலன்களும், [Pressure Vessels] 23 அழுத்த மாற்றிகளும், [Pressure Exchangers] 5 பேரழுத்த பம்புகளும் [High Pressure Pumps], 16  அழுத்த வடிகட்டிகள் [Pressure Filters] உள்ளன.   மிஞ்சூரிலிருந்து குடிநீர் ரெட் ஹில் சென்றடைய 20 மைல் [33 கி.மீ]  நீள நீண்ட குழல்கள் இணைக்கப் பட்டுள்ளன. சென்னை நகர் நீர் பரிமாற்ற நிறுவகம்  ஒரு கிலோ லிட்டருக்கு ரூபாய் 48.66 சென்னை உப்பு நீக்கி நிறுவகத்துக்குக் கட்டுகிறது.
நீர் வெள்ளத் தேவைக் கம்பேனிகளுக்கு கிலோ லிட்டர் ரூபாய் 60  விற்கிறது.  அடுத்து ஓர் உப்பு நீக்கி நிலையம், நாள் ஒன்றுக்கு 200 மில்லிய கிலோ லிட்டர் உற்பத்தித் தகுமை உடையது பட்டி புலத்தில்  கட்டுவதாகத் திட்டம் உள்ளது. இரண்டாவது உப்பு நீக்கி நிலையம்  சென்னைக்கு அருகில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் [10 கோடி] குடிநீர் அளிக்கும்  தகுதி உடைய நெம்மேலி எனப்படும்.  இது  5 .3 பில்லியன்  [5.33 கோடி] ரூபாய்ச் செலவில் கட்டப் பட்டது. 2013 பிப்ரவரி 22  முதல் இயங்கி வருகிறது.  உப்பு நீக்கச் செலவு : ஒரு கிலோ லிட்டர் ரூபாய் 30.  அடுத்து ஓர் உப்பு நீக்கி நிலையம் அதன் அருகில்  150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் தகுமை கொண்டது, 1000 கோடி ரூபாயில்  கட்டப் போவதாய்த் திட்டம் உள்ளது.

Related image

“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன் படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோ கித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

Schematic of a multistage flash desalinator

A – steam in       B – seawater in       C – potable water out
D – brine out (waste)       E – condensate out       F – heat exchange
G – condensation collection (desalinated water)       H – brine heater
The pressure vessel acts as a countercurrent heat exchanger. A vacuum pump lowers the pressure in the vessel to facilitate the evaporation of the heated sea water (brine) which enters the vessel from the right side (darker shades indicate lower temperature). The steam condensates on the pipes on top of the vessel in which the fresh sea water moves from the left to the right.

++++++++++++++++++++

Related image
Image result for solar thermal power plants pros and cons

நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக் குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்கனலைப் பயன் படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக் கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.

+++++++++++++++++++++++++++

DESALINATION PROCESSESBENEFITS
MULTI-STAGE FLASH
(MSF)
– Used in many desalination plants, suitable for large-scale installations
– Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity)
MULTIPLE EFFECT DISTILLATION
(MED)
– Good heat transfer efficiency; uses 40% less energy than reverse osmosis membrane method
– Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity)
REVERSE OSMOSIS
(RO)
– The most energy-efficient process
– Simple configuration can be installed relatively quickly

Starting with the first desalination plant in 1971, Hitachi Zosen has installed 42 plants to date, mainly in Japan and the Middle East, with a combined output of 1.2 million cubic meters per day.

+++++++++++++++++++++++++

நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.

கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 16,000 இப்போது [2018] இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

+++++++++++++++++

Latest technology: trials of solar heat power generation and desalination system

A trial will be conducted of a new type of solar-powered desalination system that uses solar heat power generation technology. Solar-powered desalination uses sunlight as the heat source for distilling seawater.

The trial is due to run from November 2012 to October 2013 in Saudi Arabia, with a view to commercialization of the system from FY 2014.

+++++++++++++++

இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்படாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்பு நீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனிமம் நீத்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப் படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன் படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராம நாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

WATER DESALINATION
METHODS
DistillationMulti-stage flash distillation (MSF)Multiple-effect distillation (MED)Vapor-compression (VC)Ion exchangeMembrane processesElectrodialysis reversal (EDR)Reverse osmosis (RO)Nanofiltration (NF)Membrane distillation (MD)Forward osmosis (FO)Freezing desalinationGeothermal desalinationSolar desalinationSolar humidification–dehumidification (HDH)Multiple-effect humidification (MEH)Seawater greenhouseMethane hydrate crystallizationHigh grade water recyclingWave-powered desalination

+++++++++++++ 2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெரு நிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”  https://en.wikipedia.org/wiki/Solar_powerhttps://en.wikipedia.org/wiki/Solar_powerhttps://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power1.  https://youtu.be/luN91njPlLM2.  https://youtu.be/RmkCdhW0re8 ++++++++++++++++++ 

கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளி வரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளள வாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.

2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்!  +++++++++++++++++ Attachments areaPreview YouTube video 2015 Fujairah 2 Reverse osmosis plantPreview YouTube video Mojave Solar Project- The Future of solar projectPreview YouTube video Solution: Hitachi solar-powered desalination plants, Abu Dhabi – HitachiPreview YouTube video Making Desalination More SustainablePreview YouTube video Desalination Myths and MisconceptionsPreview YouTube video Solar Power, panels, charge regulator controller, battery…

Series Navigationஒற்றன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *