தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்

Spread the love

இந்த ஆவணப்படத்தில் தமுமுக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. ஜவாஹிருல்லா பெண்கள் ஜமாத், பெண்களுக்கான பள்ளிவாசல் என்பது மாயையான தோற்றம் என சொல்லியிருப்பது ஒரு அசூயையான ஆண்திமிரின் பதிவாக இடம் பெற்றிருப்பது வருத்தத்திற்குரியது..

மும்பை இஸ்லாமிய அறிஞர் அஸ்கர் அலியின் பதிவுகள் இஸ்லாமியபெண்ணியத்திற்கான குரலை வலுவடையச் செய்வதாக அமைந்திருப்பது மகிழ்வுக்குரியது.

ஸ்டெப்ஸ் ஷெரீபா என அறியப்பட்ட தாவூத் ஷெரீபா கானம் முயற்சியால் 1987 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான அமைப்பு இன்று தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் ஆக இயங்கிவருகிறது. இவ்வியக்கம் பற்றிய ஆவணப்ப்படத்தை இந்திய தூர்தர்ஷன் தயாரித்து ஒளிபரப்பி உள்ளது.

முஸ்லிம் பெண்களுக்கான சம உரிமைகளை இஸ்லாமிய பிரதிகளின் வாயிலாக கண்டடையும் குரானை அர்த்தப்படுத்திப் பார்க்கும் இஸ்லாமிய பெண்ணிய நோக்கு விரிவடைந்து வரும் காலம் இது. பெண்களுக்கான தனி ஜமாத்,பெண்களுக்கான தனி பள்ளிவாசல் என்பதான லட்சியங்களை கடந்த 24 ஆண்டுகளின் உழைப்பால் கண்டடைந்துள்ளது இந்த பெண்கள் ஜமாத்.
ஏன் பெண்களுக்கான ஜமாத் தேவை என்பதை விளக்கும் இந்த பெண்ணிய செயல்பாட்டாள்ர்கள் அனைத்து ஜமாத்களிலும் அதிகாரம் படைத்தவர்களாக ஆண்களே இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்தும் ஆண்களுக்கு சார்பாகவே ஜமாத்துகளில் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.ஏனெனில் ஜமாத்துகளில் பெண்கள் உறுப்பினர்களாக இருக்கமுடியாததால் அவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது.

முத்தலாக்,வரன் கொடுமை,குழந்தை திருமணம்,குடும்பவன்முறை,கணவனின்வன்முறை, சொத்துரிமை மறுப்பு என்பதான பிரச்சினைகளின் முஸ்லிம் பெண்களின் உரிமையை நிலைநாட்டுவதின் நோக்கமாகவே இது செயல்பாட்டளவில் பரந்து செல்கிறது.

இந்த ஆவணப்படத்தில் ஸ்டெப்ஸ் ஷெரீபா, பேரா. நஸ்னீன்பரக்கத்,வழக்கறிஞர் பதர் ஸ்யித்,மும்பை பேரா. ஸீனத் பெண்ணிய செயல்பாட்டாளர் வ. கீதா உள்ளிட்ட பென்ணிய சிந்தனையாளர்களும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்பெண்களின் நேர்முகங்களும் பதிவாகி உள்ளன.

Series Navigationஇந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள்.விஸ்வரூபம் – விமர்சனங்களில் அரசியல் தொடர்ச்சி