-தாரமங்கலம் வளவன் சென்னைக்கு வந்த கல்யாணியை பார்த்த லட்சுமி, தன் கணவரிடம், “ கல்யாணியை கண்டிப்பா மருமகளாக்கிக்க போறேன்…..”என்று சொல்ல, “ என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ…” என்றார் கிண்டலாய்… வெங்கட் தன் ரெகார்டிங் சம்மந்தமாக, பிஸியாக இருந்ததால், லட்சுமி அம்மா கல்யாணியின் குடும்பத்தை நல்ல படியாக கவனித்து கொண்டார்கள். ஒரு வீடு வாடகைக்கு அமர்த்த பட்டது. சந்தானம், கல்யாணியை தங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு வாய்ஸ் எக்ஸ்பர்ட்டின் வகுப்பில் சேர்த்து விட்டான். அவர் கல்யாணிக்கு அருமையான் குரல் […]
இந்த கட்டுரை எழுதத் தொடங்கும்போதே என் இலக்கிய நண்பர்களில் சிலருக்கு நான் தீண்டத் தகாதவனாகி விடுவேன் என்பதை நான் உணர்கிறேன். கமல் ஹாசனின் சினிமா பங்களிப்பு தமிழ் சினிமாவின் தளத்தில் மிக முக்கியமான ஒன்று என்று தான் கருதுகிறேன். தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” […]
இந்த ஆவணப்படத்தில் தமுமுக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. ஜவாஹிருல்லா பெண்கள் ஜமாத், பெண்களுக்கான பள்ளிவாசல் என்பது மாயையான தோற்றம் என சொல்லியிருப்பது ஒரு அசூயையான ஆண்திமிரின் பதிவாக இடம் பெற்றிருப்பது வருத்தத்திற்குரியது.. மும்பை இஸ்லாமிய அறிஞர் அஸ்கர் அலியின் பதிவுகள் இஸ்லாமியபெண்ணியத்திற்கான குரலை வலுவடையச் செய்வதாக அமைந்திருப்பது மகிழ்வுக்குரியது. ஸ்டெப்ஸ் ஷெரீபா என அறியப்பட்ட தாவூத் ஷெரீபா கானம் முயற்சியால் 1987 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான அமைப்பு இன்று தமிழ்நாடு முஸ்லிம் […]
இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள். முனைவர். கோ. கண்ணன் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, அரசு கலைக் கல்லூரி, தருமபுரி. *அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு புது டில்லி [aicb delhi all India confidaration for the blind] நடத்திய கட்டுரைப் போட்டியில் தமிழ் மொழியில் மூத்தோருக்கான நிலையில் முதல் பரிசு பெற்ற கட்டுரை. இருட்டில் படிக்கும் எமது விழிகள் விரல்கள்! இருட்டையும் அழிக்கும் ஈடில்லா விழிகள்! […]
பௌர்ணமி நாளின் முன்னிரவுப் பொழுதொன்றில் காற்று வரத் திறந்திருந்த யன்னல் பிடித்தமான மெல்லிசைப் பாடலொன்றினை ஏந்தி வந்து தனித்திருந்த அறையினை நிறைக்கத் தொடங்கிய இக்கணத்தில் உன்னை நினைத்துக் கொள்வது கூட மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. உன்னைக் காற்று ஏந்தி வருகிறதா? மெல்லிசையின் ராகங்களுக்குள் நீ மறைந்து வந்து குதிக்கிறாயா ? பௌர்ணமியின் ஒளிக் கீற்றுக்கள் உன் உருவம் தாங்கி வருகிறதா போன்ற மாயக் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடைகளில்லை. என்னைப் போல இவையெல்லாவற்றையும் ரசிக்கும் மனம் கொண்ட […]
இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School) காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா கே.எஸ்.சுதாகர் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சந்த்தித்துக் கலந்துரையாடும் – எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றது. 2005 வரையும் இதன் பிரதம அமைப்பாளராக திரு லெ.முருகபூபதி செயல்பட்டார். 2006 இலிருந்து […]
அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்து தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் சிதம்பர சுவாமிக்கு ஒரே மகன். அவன் பெயர் சாங்கபாணி. தந்தை முதலமைச்சராக இருந்த போது, பாணி ஏறக்குறைய நாட்டை ஆண்டு வந்தான். பிறகு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல், எதிர்கட்சித் தலைவர் பதவியில் திருப்தி அடைய வேண்டிவந்தது. முதலமைச்சர் அளவுக்கு அதிகாரம் இல்லா விட்டாலும், காரியங்களைச் சாத்தித்துக்கொள்ளும் அளவுக்கு சாமர்த்தியம் […]
நெடுங்கதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். பெண் பார்த்த படலம் முடிந்து இரண்டு நாளாகியும் வீட்டில் ஒரே மௌன போராட்டம் தான். ஏதோ கடமைக்கு சமைத்து வைத்துவிட்டு டைனிங் டேபிள் மீது “எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடவும்.”..என்று ஒரு பேப்பரில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்து விட்டு கோவிலுக்குப் போய் விடுவாள் சித்ரா. ஏன்மா…? ஏன் பேசமாட்டேங்கறே? கௌரி சத்தமாக அம்மாவின் முகத்தைத் திருப்பி நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்கிறாள். அவா வேண்டாம்னு சொல்லிட்டு போனதுக்கு உனக்கெதுக்கு என் […]
இரா.ஜெயானந்தன். இனிய நிலவே ! இன்று நீ, என் நிலா முற்றத்தில் மலர்ந்து விட்டாய் ! உன் வரவிற்காக காத்திருந்து – நான் மல்லிகை பந்தல் வளர்த்திருந்தேன். பூக்கள் மலர்ந்த, மணந்த போது உன்னை மணம் முடித்தேன்! அதோ பார் ! அந்த மொட்டுக்குள் எத்தனை வசந்தங்கள் ! – நீயோ உன் இதழ் மொட்டால் – என்னை உயிர்த்தெழ வைத்தாய் ! உன் சிரிப்பை பிரித்து – என் கவிதைக்குள் வைத்தேன் ! நீயோ ! […]
குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் _லதா ராமகிருஷ்ணன் [1] ஆரம்பக் கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் நிலைத்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கச்செய்ய வேண்டி […]