தழுவுதல்

Spread the love

 

 

வளவ. துரையன்

 

தழுவுதல்

என்பது அந்தத்

தருணத்திற்கு மட்டுமன்று

 

தவமாக நினைத்து

அதை எப்பொழுதும்

நான் மட்டும் சுகித்திருப்பது

 

அது வந்துவிட்டுப்

பின் தணலை

ஊதிப் பெரிதாக்குவது

 

அடுத்தது

எப்போதென்று

அகத்தை அலைக்கழித்து

அல்லலுறச் செய்வது

 

அவனுக்கும் அவளுக்கும்

அன்புப் பரிமாற்றத்திற்கு

அஸ்திவாரம் தோற்றுவிப்பது

 

காற்று கூடப்புகாமல்

கட்டி அணைப்பதால்

காமமென்று மொழியாதீர்

 

 அதுதான்

காதலின் ஒருவகை

 

யாரின்பம் அதிகம்

பெற்றாரென ஒரு

போட்டி வைத்துப்

போரிட்டுக் களத்தில்

 

இருவருமே வெற்றி பெறுவது

 

Series Navigationவெண்பூப் பகரும் -சங்கநடைச்செய்யுட் கவிதைகருப்பன்