தாகூரின் கீதப் பாமாலை – 22 எவளோ ஒருத்தி ?

This entry is part 17 of 32 in the series 15 ஜூலை 2012


மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மீண்டும் யாரென் கதவைத் தட்டுவது ?
நேரம் கடந்த வேளையில்
யார் வந்து நிற்பது ?
யாரைத் தேடி வந்திருப்பது ?
நெடு நாட்களுக்கு முன்பு ஒருநாள்
வசந்த காலத்தில்
வாலிப மங்கை ஒருத்தி
வந்தாள் என்னருகில்.
வருத்திய வாழ்வைப் பொங்க வைத்தாள்
வரை யில்லாக் களிப்புகளில் !

இன்றிரவு மழை பெய்கிறது
இருள் அடர்ந்த
இந்தப் பகுதியில்
இரைச்ச லான மழை !
பாழடைந்த குடிசை !
நீர் நனைந்த பேய்க் காற்றில்
விளக்கு அணைந்தது !
விழித்துக் கிடந்தேன் தனிமையில்.

இன்னிசைக் கானம் பாடும் நீ
எவளோ ஒருத்தி !
அந்தக் குரலின்
இனிமைப் பயங்கரம்
எனது செவியில் விழுகிறது !
பழக்க மில்லாத
காரிருள் போர்த்திய
சூழ்வெளியில்
உன்னுடன் போய் விடுவேன் என்று
மனதில் எனக்கும் தெரியுது !

+++++++++++++++++++
பாட்டு : 154 தாகூர் தன் 34 ஆம் வயதில் விஜய தசமியன்று எழுதியது (அக்டோபர் 1895).
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] July 9, 2012

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 28) இரவிலும், பகலிலும்அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *