தாகூரின் கீதப் பாமாலை – 34 விடைபெறும் நேரத்தில் !

This entry is part 2 of 23 in the series 7 அக்டோபர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இல்லா விடில் அஞ்சு வேன் நான்,
இன்னிசை மறக்க வேண்டு மென்று !
இல்லா விடில் அஞ்சு வேன் நான்,
அறுந்த நாண்கள் சிறக்கு மென்று !
இல்லா விடில்
விழா கொண்டாடும்  தருணம்
உறங்கி விழும் !
வினை விளை யாட்டிலும்,
புறக்கணிப்பிலும்,
புனித வேளை வீணாகி விடும்  !
இல்லா விட்டால்
ஒரு கானமும் இல்லாமல்
இருவர் கூடிய இன்பப் பொழுது
இறுதியுற வேண்டும் !

அழிவுக் கால நேரத்தில்
அழைப்பு எனக்கு வரும் போது ,
புயலடிப்பில் என்னிலை
தடுமாறும் என்கால் தட வைப்பில்  !
இல்லா விடில்
மங்கலப் பாராட்டு பாடி முடிவில்
மரணம் வரும் போது
வாயில்  வர என் ஆத்மாவுக் கெந்த
வார்த்தை யும் இராது !
இல்லா விட்டால்
விடைபெறும் நேரம் முடிய வேண்டும்
எந்தக் கீதமு மின்றி !

+++++++++++++++++++++++++
பாட்டு : 27  தாகூர்  60 வயதினராய் இருந்த போது  சாந்தி நிகேதனத்தில்  1921 நவம்பரில் எழுதியது.  பின்னால் அது ஸப்மோச்சன் (Shapmochan) என்னும் ஒரு புது பாட்டு நாடகத்தோடு இணைக்கப் பட்டது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  October 2 , 2012

Series Navigationசாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி – 1மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *