தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

வெகு நாட்க ளுக்கு முந்தி
இருண்ட பல
நடுநிசிகளில் முணுமுணுத்தேன்
நானுன் காதிலே
பல்வேறு சம்பவங்கள்;
பற்பல ரகசியப் பாடல்கள் நான்
படைத்து வைத்தவை !
“நினைவில் உள்ளதா அவை ?” யென்று
வினாவ மட்டும் தான் நான்
வந்துள்ளேன் மீண்டும் .
இந்த நள்ளிரவின் இதயத்திலே
இரண்டறப் பின்னி நிலைத் துள்ளன
எனது பாடல்கள் !

 

ஆதலால் காலை எழும் போது எனது
காதில் பாடலைக் கேட்கிறேன்
என் பலகணி வழியே !
அணைந்து போனது என் விளக்கு !
கனவுக் காட்சியில் ஈரக் காற்று என்னைக்
கலக்கி அடிக்குது இக்கணம் !
மீண்டும் புயல்களில் பாடல் கேட்கும் !
சரமாறிப் பொழியும் பேய்மழை
அரவத்தின் ஊடே கேட்கும் !
சதுப்பு நில வாடைப் பூத மரங்களின்
சல சலப்பில் கேட்கும் !
ஈர மண்ணின் வாசனையில் வெளிவரும் !
திடீரென அவை அனைத்தும்
ஓடிவரும் என் நினைவில் !

 

+++++++++++++++++++++++++
பாட்டு : 73 தாகூர் 61 வயதினராய் இருந்த போது 1922 நவம்பரில் அவரது மனைவி மிரினாளினி தேவி (1873-1902) மரித்து 20 ஆவது மரண நினைவாண்டு நிறைவில் எழுதியது.
+++++++++++++++++++++++++

Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] November 27 , 2012

Series Navigationமரண தண்டனை- நீதியின் கருநிழல்பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்