தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர்

This entry is part 27 of 30 in the series 20 ஜனவரி 2013

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நிரம்பி இருக்கட்டும் பிரிவுக் கிண்ணம்

அமுதம் போல்

நினைவுகள்  பொங்கி !

திருப்பிக் கொடு கிண்ணத்தை எனக்கு

சோகக் கண் ணீருடன்

மௌனமாய்க் கூடி இணைந்த

கோலா கலத்தில் !

அதன் பலாபலன் அந்தரங்க மாய்

உதிக்கட்டும்

இதயத்தின் புதுக் குரலாய் !

 

இனிப் போகும் பாதையில் நீ

தனித்து விடப் படுவாய் !

கண்ணெதிரில் இருள் மயமாய்

இருக்கும்

பிரதிபலிக்கும் ஒளிக் கீற்றுகள் !

இரகசிய மாய் நாள் முழுதும்

ஆத்மாவின்

தாமரைத் தடாகத்தில்

வீணை மீட்டிடும் கலைத் தெய்வம்

தேனமுதைப் பொழிவாள்

பிரிவுத்  துயரில் !

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 239   ஏப்ரல் 13, 1923 இல்  தாகூர்  62 வயதினராய் இருந்த போது  சாந்திநிகேதனத்தில்  “விடை பெறுகிறேன்”  என்னும் கவிதையாய் எழுதப் பட்டது.  பிறகு அக்கவிதை “சப்மோட்சன்” என்னும் பாட்டு நாடகத்தில் பயன்படுத்தப் பட்டது.

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com]  January 14, 2013

 

Series Navigationவால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)சொல்லித் தீராத சங்கிலி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *