தாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !

This entry is part 17 of 33 in the series 19 மே 2013

 

 

Tagore 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

விடுமுறை யாகப் பொழுது போக்க

விளித் தென்னை  வரவேற்க நீ

அழைப்பு விடுத்தாய்  !

அப்போது

வெகு தூரத்தில் நான் இருந்தேன்

எதையோ தேடிக் கொண்டு !

மறுபடி நான் கடற்கரைக்கு

வரும் போது

அத்தமனம் ஆனது குன்றின் உச்சியில் !

கதிரோன் கடைசி யாய்ப்

பொன்னிறச் செவ்வல்லிக் கொத்தை

கண்ணோக்குவான்.

மனத் தடுமாற் றத்தில்

எனக்குத் தெரிய வில்லையே

விடுமுறை எப்போது

முடிந்த தென்று !

 

 

இலையுதிர் காலத்தில் பூத்துக் குலுங்கும்

பாரிஜாத மலர்களை

நாரற்றுக் கோர்த்த பூமாலை

உன் தூது வார்த்தைகள்.

புலர்ந்த காலை இளம் பரிதியின்

பொன்சுடர்க் கதிர்களில்

புதைந்து போயின உன் மொழிகள் !

களைத்த என் கரங்களில்

மொட்டுகளை

சீவிடும் கூரிய குளிரடிப்பு

பட்டு விடும் !

மூடுபனி சூழ்ந்த வேலிக்குள்

முடங்கி விடும் மௌனத் தென்றல் !

மனத் தடுமாற் றத்தில்

எனக்குத் தெரிய வில்லையே

விடுமுறை எப்போது

முடிந்த தென்று !

+++++++++++++++++++++++++

பாட்டு : 288   தாகூர்  தன் 66 ஆம் வயதில் [நவம்பர் 8, 1927]  சாந்திநிகேதனத்தில் இருந்த போது எழுதியது.

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 14, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    அரு.நலவேந்தன் says:

    மிகவும் அருமையான மொழியாக்கம்.தமிழின் இனிமைச் சுவைக்கச் செய்த தங்களுக்கு எனது நன்றி.தாகூரின் வரிக்கு உலக இலக்கியமே தலை வணங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *