தால் தர்கா ( பருப்பு )


தேவையான பொருட்கள்
1 கோப்பை பயத்தம்பருப்பு
3 கோப்பை தண்ணீர்
1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி
கொஞ்சம் உப்பு

தாளிக்க
2 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய்
1 தேக்கரண்டி ஜீரகம்
1 சின்ன வெங்காயம். பொடியாக நறுக்கியது
1 அல்லது 2 காய்ந்த சிவப்பு மிளகாய்கள்
கொத்தமல்லி கொஞ்சம்
எலுமிச்சை இரண்டு துண்டுகள்

செய்முறை
ஒரு பெரிய வாணலியில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக கழுவிவிட்டு அதனை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மேலே வரும் நுரையை நீக்கிவிடவும். மெது தீக்கு மாற்றவும்
மஞ்சள் பொடியை சேர்த்து 45 அல்லது 60 நிமிடம் மெதுவான தீயில் மைய ஆகும்வரைக்கும் வேகவிடவும். அடிபிடிக்க விடவேண்டாம்.
கெட்டியாக ஆகும்படி தெரியும்போது நிறுத்திவிட்டு உப்பு சேர்த்து வைக்கவும்.
பருப்பு வெந்து முடிக்கும் முன்னால், தாளிக்க தயார் செய்யலாம்
இன்னொரு வாணலியில் நெய் ஊற்றி அதில் ஜீரகத்தை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
வாசம் வந்த பின்னால், அதில் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு வதக்கவும். இதனை வேகவைத்த பருப்பு மீது ஊற்றவும்.
இதனை நான், ரொட்டி, அல்லது சாதத்துடன் சாப்பிடலாம். கூடவே இரண்டு எலுமிச்சை துண்டுகளையும் வைக்கலாம்

தக்காளி தால் தர்கா செய்யும் முறை

3 மேஜைக்கரண்டி நெய்யை உருக்கி அதில் 1/2 தேக்கரண்டி ஜீரகம், 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்து வதக்கவும். இதில் வெட்டிய வெங்காயத்தையும் மூன்று பூண்டு பல் (பொடியாக நறுக்கியது) சேர்த்து 10 நிமிடம் மெது தீயில் வதக்கவும். ஒரு தேக்கரண்டி இஞ்சி நசுக்கியது சேர்த்து இன்னும் கொஞ்சம் நேரம் வதக்கவும். இதில் 2 சிறிய தக்காளி துண்டுகளாக நறுக்கியதை சேர்த்து வதக்கவும். தக்காளி சிதைந்த பின்னால், இன்னும் 5 அல்லது 7 நிமிடம் வதக்கி அதனை வேகவைத்த பருப்புடன் சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும்/
இதன் மீது கொத்தமல்லி போட்டு பறிமாறலாம்.

Series Navigationவாழ்க நீ எம்மான் வையத்து நாட்டில் எல்லாம்