தாவி விழும் மனம் !

Spread the love

 

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 
கிடைத்தவற்றின் பட்டியல்
சிறியதாகவும்
கிடைக்காதவற்றின் பட்டியல்
பெரியதாகவும்
அருகருகே நின்று அவனைப்
பாடாய்ப் படுத்துகிறது
 
பெரிய பட்டியலின் வரிகளில்
அடிக்கடி அவன் மனம்
தாவித்தாவி விழுகிறது
 
அதில் புரண்டு புரண்டு
கடைசியில்.  சலித்துப்
பெருமூச்சில் கரைகிறது
 
சிறு பட்டியல்
அடிக்கடி ஏங்குகிறது
தாவும் மனத்தைச் சபித்தபடி …
 
நிகழ்காலப்புள்ளி. 
புறக்கணிக்கப்படுகிறது 
 
விதி எழுதிய
முதல் பட்டியலைவிட
மனம் எழுதிய 
இரண்டாம் பட்டியலில்
அவன் வாழ்கிறான் ! 
Series Navigationஅழகர்சாமியின்   குதிரை வண்டி !!தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]