திசையறிவிக்கும் மரம்

Spread the love

மரம்

முற்றிவிட்டது

துளிர்விட்டுக்கொண்டும்..

******************************

மொட்டை மரங்களும்

அழகிய நிர்வாணத்தோடு

திசையறிவித்தபடி.

******************************

வீழ்த்தப்பட்டபின்னும்

மரக்கிளைகள் வேர்பிடித்து

வேறொருவம்ச ஆணிவேராய்..

**********************************

மரக்குளத்தில்

அலையெழுப்புகின்றன

பறவைக் குரல்கள்..

*********************************

நீர் கிடைத்த கிளைகள்

விரிகின்றன பசுந்தோகையாய்..

கிடைக்காதவை கிண்ணிக் கோழியாய்.

Series Navigation