தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.

Spread the love
தயவு செய்து இந்தச் செய்தியை பத்திரிகையில் பிரசுரித்து உதவி செய்யவும்.


2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை, மாலை 4.30 மணிக்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், இல 58, தர்மராம வீதி, கொழும்பு – 06 இல் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது. டொக்டர் எம்.கே. முருகானந்தனின் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த விழாவுக்கு புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை வகித்து, முதற்பிரதியையும் பெற்றுக்கொள்வார். திருமதி அன்னலட்சுமி இராஜதுரை, ஜனாப் திக்வல்லை கமால், திருமதி வசந்தி தயாபரன் ஆகியோரின் சிறப்புரைகளும்; இடம் பெறும். ஏற்புரையை தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா வழங்கவுள்ளார் என ஏற்பாட்டாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தெரிவித்துள்ளார்.
காலம்:- 2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை
நேரம்:- மாலை 4.30 மணி
இடம்:-  பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன  கேட்போர் கூடம், 58, தர்மராம வீதி, கொழும்பு – 06.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
தலைமை:- டொக்டர் எம்.கே. முருகானந்தன்
முன்னிலையும், முதற்பிரதியும்:-
புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர்
உரைஞர்கள்:-
01. திருமதி அன்னலட்சுமி இராஜதுரை
02. ஜனாப் திக்வல்லை கமால்
03. திருமதி வசந்தி தயாபரன்
ஏற்புரை:- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
உங்கள் வருகையே
எங்கள் வளர்ச்சியின் முலதனம்
நூலின் ஆகக் குறைந்த விலை 300 ரூபாய்
ஏற்பாட்டாளர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்  (தொலைபேசி – 0775009222)

Inline images 1
Series Navigationஅக்னிப்பிரவேசம் – 6உண்மையின் உருவம்