தியாகச் சுமை:

Spread the love

 

நகர

போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி

நகர

அனுமதிக்கும் விளக்கின்

பச்சைக்காகக் காத்திருக்கயில்…

 

பல

வேலை நிமித்தம்

சிலர்

சாலை கடந்தனர்!

 

கடந்தவர்களில்

ஆண்களோ

அலைபேசி அடிமைகளாய்

தலை சாய்த்து

முடங்கி நடக்க

 

பெண்களில்

பத்துக்கு எட்டுபேர்

எதையாவது

சுமந்துகொண்டே

நடந்து கடந்தனர்…

 

தோல்பை

கைப்பை

பணப்பை

வழவழ காகிதத்தில்

தடிநூல் பிடிகொண்டபை

மினுக்கும் அலைபேசிப்பை

ஒருமுறை பிரயோகத்திற்கான

பாலித்தீன் பை

என

எதையாவது சுமந்துகொண்டு…

 

எஞ்சிய

இருவரும்கூட

கர்ப்பினிப் பெண்டிர்!

 

Series Navigationஇரண்டு கவிதைகள்ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்