திருப்பூர் இலக்கிய விருது 2022

 

 

ஞாயிறு அன்று திருப்பூர் சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் நடந்த இலக்கிய விழாவில் தமிழகத்தைச் சார்ந்த 66 எழுத்தாளர்களுக்கு திருப்பூர் இலக்கிய விருது 2022 வழங்கப்பட்டது.

 

“ இன்றைய கணினி மற்றும் தொழில்நுட்ப உலகத்தில் தமிழின் தொன்மையும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம் அதைச் செய்கிற பணியில் எழுத்தாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.அதை தங்களின் சமூகப்பணியாக்க் கொண்டு எழுத்தாளர்கள் செயல் பட வேண்டும் “ என்று திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயர் பாலசுப்ரமணியம் அவர்கள் திருப்பூர் இலக்கிய விருது 2022

எழுத்தாளர்களுக்கு வழங்கிப் பேசுகையில் குறிப்பிட்டார்,

 

விழாவுக்கு திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கேபி கே செல்வராஜ் தலைமை தாங்கினார்.மூத்த எழுத்தாளர் நாமக்கல் நாதன் துவக்க உரையாற்றினார். அதைத் தொடர்ந்து விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்களின் படைப்பு அனுபவங்களைப் பகிரிந்து கொண்டார்கள் . முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கேபி கே பாலசுப்ரமணியம் நன்றி உரை வழங்கினார்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், வழக்கறிஞர் ரவி ஆகியோர் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். கல்வியாளர் முத்துச்சாமி வரவேற்புரை வாழ்ங்கினார்.

முத்தமிழ்ச் சங்கமும் கனவு இலக்கிய அமைப்பும் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன

 

Series Navigationவட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்