திரைவிமர்சனம் கோச்சடையான்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

 

சிறகுஇரவிச்சந்திரன்

இயக்கம்  : சவுந்தர்யாரஜினிகாந்த்அஸ்வின்

கதை, திரைக்கதை, வசனம் : கே.எஸ்.ரவிக்குமார்

இசை  : ஏ.ஆர். ரகுமான்.

பாடல்கள்  : அமரர்வாலி, கவிஞர்வைரமுத்து

நடிப்பு : ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, ஷோபனா, நாசர், சரத்குமார், ஜாக்கிஷ்ராஃப், ஆதி, ருக்குமணி, நாகேஷ்.

 

சுவையானஅம்புலிமாமாகதை. அசத்தலானதிரைக்கதை. அற்புதஇசை. கண்களைவிரியவைக்கும்தொழில்நுட்பம். ஆனால், ஓவியமலரைநிசமென்றுநம்பிஅமர்ந்தவண்டுபோலஏமாந்துபோகும்திரைரசிகன்.

சாதனாசர்கம், எஸ்.பி.பி. குரல்களில்ஒலிக்கும் “ மெதுவாகத்தான் “ வாலியின்வாலிபவரிகளோடு, இசைப்புயலின்இழையோடும்லயத்தோடுநெஞ்சில்சம்மணமிட்டுஉட்கார்ந்துகொள்கிறது. வெள்ளைத்தோகைவிரித்தமயிலோடுதீபிகாகாட்டும்அசைவுகள்கிராபிக்ஸின்உச்சம். சபாஷ்! படம்நெடுகஒலிக்கும்ரகுமானின்இசை, உலகத்தரத்தைதொடுகிறது. பலே!

உயர்ந்தமலைகள், பிராவாகமாகவிழும்அருவி, பரந்தகடற்பரப்பு, அதில்கிழித்துக்கொண்டுபாயும்பாய்மரக்கப்பல்கள், கோரைப்பற்களுடன்ஓநாய்கள், அவற்றைநாயகன்வேட்டையாடும்வேகக்காட்சிகள்என்றுதொழில்நுட்பத்தின்உச்சிக்குபோயிருக்கிறதுகோச்சடையான். பாராட்டுக்கள்.

அதிகநீளமில்லாதகாட்சிகள், நறுக்எடிட்டிங் ( ஆண்டனி ), வசனத்துக்குபொருத்தமானவாயசைவு, நளினமானநடனக்காட்சிகள்எனஎல்லாவிதமானதுறைகளிலும்முதல்மார்க்வாங்குகிறதுசவுந்தர்யாவின்கூட்டணி.

கோட்டைப்பட்டினத்தின்ராஜாரிஷிகோடகன் ( நாசர் ) அவனுடையதளபதிகோச்சடையான் ( ரஜினிகாந்த் ) மாபேரும்வீரன். அதனால், மக்கள்மத்தியில்ராஜாவைவிடஅவனுக்கேமதிப்பும்மரியாதையும்அதிகம். அதனால்பொறாமையுறும்ராஜா, சமயம்பார்த்துகோச்சடையானைஒழித்துக்கட்டநினைக்கிறான். கோச்சடையானுக்குமனைவியும் (ஷோபனா ), சேனா, ராணா ( ரஜினிகாந்த்) எனஇரண்டுபிள்ளைகளும்உண்டு. பாரசீகத்திலிருந்துஉயர்ந்தசாதிகுதிரைகளைவாங்கிவரும்வழியில், எதிரிநாடானகலிங்கத்துபடைவீர்ர்களால்தாக்கப்படுகிறான்கோச்சடையான். அவனுடையவீரத்துக்குமுன்நிற்கமுடியாமல்அவர்கள்தோற்றுப்போகிறார்கள். “ எதிரிக்குபெரியதண்டனைமன்னிப்பு “ என்றுசொல்லி, அவர்களைவிடுவித்துவிடுகிறான்கோச்சடையான். ஆனால்வஞ்சகஎண்ணம்கொண்டகலிங்கத்துராஜாராஜமகேந்திரன் (ஜாக்கிஷ்ராஃப்), கோச்சடையானின்கப்பல்உணவ்ய்களில்விஷம்கலந்துவிடுகிறான். இறக்கும்தருவாயிலிருக்கும்தன்வீர்ர்களைக்காப்பாற்றக்கூடியவிஷமுறிவுமூலிகைகலிங்கத்தில்தான்இருக்கிறதுஎன்பதைஅறியும்கோச்சடையான், வீர்ர்களின்உயிரைக்காக்க, அவர்களையேகலிங்கத்துக்குஅடிமைகளாக்கிவிடுகிறான். படைகளையும்குதிரைகளையும்இழந்துதனியேவரும்கோச்சடையானை, தேசத்துரோககுற்றம்சாட்டிராஜாரிஷிசெங்கோடன்கொன்றுவிடுகிறான்.

தப்பிச்சென்றுகலிங்கத்தில்அகதியாககுடியேறும்இளையமகன்ராணா, தன்வீரத்தின்மூலம்அந்நாட்டின்தளபதியாகபொறுப்பேற்கிறான். தந்திரமாகசெயல்பட்டு, அடிமைகளாகஇருக்கும்தன்நாட்டுவீர்ர்களைவிடுவித்துக்கொண்டுசொந்தநாடானகோட்டைப்பட்டினத்திற்குவருகிறான். அங்கேராஜாவின்மகள்வதனகுமாரி ( தீபிகா ), அவன்மேல்காதலோடுகாத்திருக்கிறாள். ராஜாவின்மகன் செங்கோடகன் ( சரத்குமார் ) ராணாவின்தங்கையமுனா (ருக்குமணி) மேல்காதலுடன்இருக்கிறான். தங்கையின்காதலையும், தன்காதலையும்வென்று, தந்தைகோச்சடையானின்ஆசைப்படி, ராஜாரிஷிகோடகனையும், ராஜமகேந்திரனையும், அவன்மகன் வீரமார்த்தாண்டனையும் ( ஆதி ) அழித்து, எப்படிராணாவெற்றிவாகைசூடுகிறான்என்பதுமொத்தபடம்.

இந்தியசினிமாவில்இதுபுதுமுயற்சிஎன்கிறவகையில், இதற்குபாராட்டும், விருதுகளும்கிடைக்கலாம். ஆனால்லயிப்புஏற்படுத்தும்விசயத்தில்சறுக்கிஇருக்கிறதுபடம். ரஜினியின்அச்சுஅசல்உருவத்தைப்பார்க்கப்போவதில்லைஎன்றுதெரிந்தாலும், பல  சமயங்களில்இதுரஜினிதானா? என்கிற  சந்தேகத்துக்குஉள்ளாகிறான்ரசிகன். கொஞ்சநேரமேவரும்கோச்சடையானின்தாடிமீசையும், ஜடைமுடியும், ருத்ரதாண்டவமும்ஈர்த்தஅளவிற்கு, ராணாவாகசூப்பர்ஸ்டாரின்உருவம்ஈர்க்கவில்லைஎன்பதேஉண்மை. கடைசிகாட்சியில்,பாட்சாகெட்டப்பில்வரும்சேனாஉருவம்சுவாரஸ்யம். தீபிகாவும், ஷோபனாவும்இயற்கைக்குமாறாகதோன்றுகிறார்கள். மாமாவாகவரும்நாகேஷைமீண்டும்திரைக்குகொண்டு  வந்ததற்கு, நிச்சயம்கைத்தட்டலாம். பின்னணிபேசியவருக்கும்அதில்பங்குண்டு.

இயக்குனர் கே. பாலச்சந்தரை ஈர்த்து, தமிழ் சினிமாவின் அபூர்வ ராகமாக நுழைந்த சூப்பர் ஸ்டாரின் கண்களில், காந்தம் மிஸ்ஸிங்! நிறைவில்லாதமனதுடன்வெளியேறுகிறான்ரசிகன்.

0

நச்கமெண்ட் : பச்!

 

“ லிங்காபடம்வந்துதான்எங்கஏமாற்றத்தைத்தீர்க்கமுடியும் “ என்பதுஒட்டுமொத்தரஜினிரசிகர்கள்மனதில்ஓடும்எண்ணம்.

0

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *