திலக பாமா ஒரு கவிஞர். இதோடு நான் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமீபகாலமாக இது சாத்தியமில்லாது போய்க்கொண்டு இருக்கிறது. நான் கவிஞர் என்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டாலும், பெயரைப் பார்த்து பெண் கவிஞர் என்றும் சேர்த்துப் படித்துக்கொண்டு, அதற்கான இன்றைய தமிழ்ச் சூழலின் அர்த்தங்களையும் தானே தந்து படித்துக்கொள்ளும் இன்றைய தமிழ் வாசக மனம். பெண் கவிஞர் என்றால் பெண்ணீயக் கவிஞர் என்று படிக்கப் படும். பெண்ணீயக் கவிஞர் என்றால் அதற்கான குண வரையரைகள் தரப்பட்டு தயாராக உள்ளன. அதற்கான பெண்ணிய மொழியும் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது, அந்த பெண்ணிய மொழியின் அகராதியை நான் இங்கு சொல்ல முடியாது. தெரிந்தவர் தெரிந்து கொள்வார்கள். இதெல்லாம் போக, பெண்ணிய கவிதைகளுக்கு இலக்கணம் வகுக்கும் ஒரு வழிகாட்டியாக தன்னை வரித்துக்கொண்டுள்ள ஒரு பத்திரிகாசிரியர், ”உங்க கவிதையிலே கொஞ்சம் பெண்ணிய மொழியும் தூவிக்கொண்டாங்க போட்டிரலாம்” என்று தன் பங்குக்கு உதவுவதாகவும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் ”சம்மதம் இல்லை என் கவிதையில் என் மொழியும் என் பார்வைகளும் அனுபவங்களும் தான் இருக்கும்”, என்றால், பெண்ணியம் பேசாத பெண் கவிஞர் கவிஞராகவே அங்கீகரிக்கப்படமாட்டார். சங்கப் பலகையில் இடம் கிடைக்காது தான்.
அப்படித் தனித்து விடப்பட்டதால் தனித்துக் காண்பவர் திலக பாமா. எனக்குத் தெரிந்து பத்து வருடங்களுக்கும் மேலாக எழுதிவருகிறார். இது காறும் இவரது கவிதைகள் எட்டு தொகுப்புக்களில் வெளிவந்துள்ளன. சமீப வருடங்களில் அவர் உரைநடையிலும் நாவல், பிரயாண இலக்கியம் என்றும் ஒரு சில எழுதியிருக்கிறார். இருப்பினும் அவரது பிரதான ஈடுபாடு கவிதைகளில் தான். இவரைக் கவிஞராக அங்கீகரிக்காத சக பெண்ணிய கவிஞர்களின் பிரக்ஞையிலும் இவர் கவிஞர் தான். அவர்கள் சொல்லும் எழுத்தும் தான் அதை மறுக்கும்.
பார்க்கப் போனால் இவர்கள் வரையரை செய்துள்ள பெண்ணிய மொழியும் பெண்ணிய மொழியல்ல.அது சாதாரண பேச்சு வழக்கில் இல்லாத வடமொழிச் சொற்கள். தமிழிலே உள்ள அந்தக் கொச்சை மொழிக்கு தாக்கு வலு அதிகம். ஆனால், தமிழிலே சொல்வதற்கு அவர்களுக்கே கூச்சமாக இருப்பதால் சமஸ்க்ருத வார்த்தைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். எப்போதோ படித்தது. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆண்டாள் திருப்பாவைக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார்,. அவை அன்றைய சுதேச மித்திரன் வாரப் பத்திரிகையில் வெளி வந்து கொண்டிருந்தன. அவற்றில் சில பாடல்களை விட்டு விடுவார். ஏன் என்று கேட்டதற்கு, ”அதிலே என்னென்னமோ வார்த்தைகள் எல்லாம் வந்திருக்கு. அதை எப்படி சபையிலே பாடமுடியும்?” என்றாராம். “ஏன் அஷ்டபதியெல்லாம் நீங்க பாடுவேள் தானே? அதைப் பாடறபோது ஆண்டாளைப் பாடறதிலே என்ன கஷ்டம்? என்று கேட்டார்களாம். அதற்கு அரியக்குடி சொன்ன பதில்.”அஷ்டபதி சமஸ்கிருதத்திலே இருக்கு ஸ்வாமி, பாடிடலாம். ரொம்பப் பேருக்கு புரியாது. ஆண்டாள் தமிழ்லேன்னா பாடியிருக்கா, அதான் கஷ்டம்,” என்றாராம். 1940 அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கும் 2000-தில் வாழும் இன்றைய இளம் பெண்ணிய கவிஞர்களுக்கும் சிந்தனை அலைவரிசை வெட்க அலை வரிசை இரண்டும் ஒன்றாக இருப்பது வேடிக்கை தான். . . .
பார்க்கப் போனால் பெண்கள் வதை படுவது இன்று நேற்று விவகாரமல்ல. ஆண்டவன் கூட மாதொரு பாகன், சரி, உமையொரு பாகன் என்று தான் சொல்லப் படுகிறானே தவிர ஆணொரு பாகி என்று தேவியாக வனங்கப்படுவதில்லை. சக்தியை ஒரு பாகமாகக் கொண்ட சிவன் அவன். ஜடாமுடியும் முறுக்கிய மீசையும் புலித்தோலை அரைக்கிசைத்த சிவன். அவன். சிவனை ஒரு பாகமாகக் கொண்ட சக்தி அல்லள். கதை அங்கேயே ஆரம்பித்தாயிற்று. ஆட ஆரம்பித்தாலோ ஒரு காலை மேலே தூக்க, சக்தியோ வெட்கித் தலைகுனிந்து தன் தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்து வெற்றி கொண்டதாக மந்தஹாஸம் புரியும் அழுகுணி ஆட்டமும் அப்போதே தொடங்கியாயிற்று. தெய்வமே கூட ஆண்டவனாகத் தான் கற்பிக்கப் பட்டுள்ளான். தனிமை வாட்டப் போகிறதே என்று அவனுக்கு ஒரு தேவியை உபரியாகத் தான் கற்பித்துக்கொண்டிருக்கிறது மனித ஜன்மம். என்னதான் வாதித்தாலும் தேவி உபரி தான். உபரிகள் ஒன்றிரண்டு கூடலாம் சில ஆண்டவர்களுக்கு.
ஆக, அற வாழ்க்கை என்னவென இலக்கணம் வகுக்க வந்த வள்ளுவனும் இதற்கு விதி விலக்கல்லன்.
தொண்டை ஈரம் உலர
வடக்கயிறு
விட்டு வருகின்ற வாழ்க்கை
இரண்டடி தந்த
வள்ளுவன் காலம் தொட்டு
அன்றீலிருந்து இன்று வரை
எப்போழுதும் தாகமொடு
நானிருக்க………..
என்று நீள்கிறது திலகபாமாவின் கவிதை. ஒன்று.
அந்த வள்ளுவன்,
தெய்வம் தொழாள், கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
என்று சொல்லாமல் வேறென்ன சொல்லுவான்? வாசுகிக்கே அந்த கதிதான். கூப்பிட்ட குரலுக்கு கிணற்று வடக் கயிற்றை பாதி iஇழுத்ததை “அம்போ” என்று தொங்க விட்டு ஓடி வரவேண்டும். சிவனும் சரி, வள்ளுவனும் சரி. ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் தாம். வள்ளுவர்க்கு சிலை எழுப்பிய நாம் இன்று வேறு எப்படி இருக்க முடியும்?
பெண்ணிய மொழியின் தேவையே இல்லை. பழகி வரும் மொழியே அதையெல்லாம் சொல்லி விடுகிறது.
நான் உணர்ந்ததும் உன் பெருமையாக
நீ உணராதது என் தோல்வியாக
இப்படி முளைச் ச்லவை செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒரு மரபு பேணப்பட்டுவருகிறது. அப்படி மரபு பேணுதலில் தான் “பெய் என்றால் மழை பெய்யும்.” அது தொழுநன் தொழுதெழுபவளுக்குத் தான் அந்த சக்தி உண்டு என்று பூச்சூட்டப்பட்டுள்ளது. இதைச் சொன்ன வள்ளுவனோ தொழுநனோ பெய் என்றால் மழை பெய்யாது. அப்பா! கூடை நிறைய மல்லிப்பூ சூட்டியாயிற்று.
நீ விரும்புவதை நான் உணர்ந்து கொள்வது நீ பெருமை பாராட்டிக்கொள்ளும் காரணமாகிறது. என்னை நீ உணராததோ, உனக்கு உணரவைக்காத என் தோல்வி யாக புரிந்து கொள்ளப் படுகிறது.
ஆக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் புரிய வைப்பதில் உள்ள மொழிப் பிரசினையாக வெளிப்பாட்டுப் பிரசினையாக இது முன் வைக்கப்படுகிறது. இதிலும் ஒரு சாமர்த்தியமும் விளையாடுகிறது.
ஆண்கள் எல்லாருக்குமே
பெண்களிடம் ஒளிக்க விஷயமிருக்கிறது.
அவளுக்குப் புரியாது
அவள் சாதாரண குடும்பப் பெண்
அவ்ள் அலுவலகம் தவிர
உலகம் தெரியாதவள்
அவள் என்னை விட்டுக் கொடுக்கமாட்டாள்
அவள் என்னைச் சிறை வைப்பவள்
அவளே ஆண்
அவளோடு
இன்னொரு ஆண் இருத்தலியலாது.
………………
…………..
உனது தவறுகளாயில்லாது
எனது பிழைகளாய்
மொழிபெயர்க்கும்
உன் முன்னால்
…………..
புரிந்து கொள்ள முடியாதவள்
என்ற உன் வாசிப்புக்கு
அப்பாலும்
என்று நீள்கிறது விலகிக் கொள்ளும் நட்பு என்று ஒரு கவிதை
சொல்லாமலே புரிந்துகொள்வது பென்ணுக்கு அழகாகக் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. சொல்லப்படாமல் புரிந்து கொள்ள வேண்டிய ஆணின் விருப்பங்கள் காலத்துக்குக் காலம் வேறுபட்டும் விரிவுபட்டும் வரும் நிலையில் புரிதல் என்பது ஒரு பிரசினையாகிப் போகிறது.
புரிதலின் வலிமை என்று ஒரு கவிதை அதன் வரிகள் சில:
எனக்கப்புறமாக
வாசிக்கப்படவேண்டிய
புரிதல்கள்
எழுத்தாகவில்லை
எழுத்தானாலும் அது
உன் வாசிப்புக்கான
கவிதையாவதில்லை
புருவ நெறிப்பின்
வரிகளுக்குள்ளே
புதைந்து கிடக்கின்றன
இதை எப்படி எப்படியெல்லாம் தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது? எவ்வளவு தடவை தான் சொன்னாலும்….
உன்னிடமிருக்கும்
“ஆம்” என்பதன் பொருள்
என்னிடமிருப்பதில்லை.
உனக்கான ”ஆம்-”-ஐ
நீ உச்சரித்த போது
எனக்கான “இல்லை” யாக
மாறிப் போனதை
உன் பக்கமிருந்து
எப்பவும் நீ தெரிந்து கொள்ள
நியாயமில்லை.
இது ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ளும் பிரசினையுமில்லை. காரணம் காலம் காலமாக ஒருவர் சொல்லாமல் இருப்பதே சொன்னதாகக் கொள்ளப்படும். மற்றவர் சொல்லாததை சொன்னதாகப் புரிந்து கொள்ளவேண்டும் என மரபும் தர்மமும் மூளைச் சலவை செய்துள்ளன
பேசிக்கொண்டிருந்த பொழுதுகளில்
ஒன்றுமில்லையெனச் சொல்லிவிட்டு
துண்டித்த தொடர்புகளின் பின்னால்
எப்பவும் தொடருகின்றன பேச்சுக்கள்
வெடிப்பு விழுந்து போன
செம்மண்
பதித்துக்கொள்ள மறுக்கிறது
புதிய பாதச் சுவடுகளை.
(அழைப்பு நெருக்கடிகள்)
இப;டி நிறையவே சொல்லிக்கொண்டு போக வேண்டியிருக்கிறது. இது அன்றாட நிகழ்வுகள், மௌன உத்தரவுகள் மௌன புரிதல்கள். பேசித் தீர்க்க உள் உறைந்த ஆதிக்க உணர்வுகள் இடம் கொடுப்பதில்லை. வீட்டுக்குள்ளேயே மௌன யுத்தம்.
நீ
மொன்னையாக்கிப் போட்ட
வார்த்தைகள்
கிடக்கின்றன
கூட்டித் தள்ளி விட முடியாதபடிக்கு
அதன் உடைவின் கூர்மைகள்
அடிக்கடி பதம் பார்த்து விட
பார்த்து நடக்கவும்
சரி வரக் கூட்டவும்
உத்தரவிடும் உன் அதிகாரத்தில்
மறைகிறது
அவற்றை
உடைசலாக்கியது
நீ எனும் நிஜம்.
இதை விட வலிமையாக மனித வரலாறு முழுதும் நீடித்துவரும் ஒரு உறவின் கொடுமையைச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.
இவையெல்லாம் என்னை அதிகம் சிரமப் படுத்தாது காணும் திலக பாமா. இது ஒரு பகுதி. இன்னொரு கணிசமான பகுதியில் திலகபாமாவின். கவிதை மொழி உருவகங்களாலும் குறியீடுகளாலும் ஆனது. பூடக மானது. அனேகம் புரிவனதான். ஆனால் சில , என் வாசிப்புக்கு அவை புரிவது போலும் இருக்கும். முழுதும் புரியாதது போலும் இருக்கும் மொழி கொண்டது. அவரது கவிதைகள் தாம் என்றில்லை நாவலும் அப்படித்தான். கதைகளும் அப்படித்தான்.
எல்லாருக்கும் எல்லாம் புரிந்து விடவேண்டும் என்று அவசியம் ஏதுமில்லை. சில கொஞ்சம் யோசித்தால் புரியும். தான். சில அப்படி யோசித்தாலும் புரிய மறுக்கும். ஆனால் அவை நம்மைப் படிக்க நிர்ப்பந்திக்கும். அவை இப்போது புரியாவிட்டாலும் உயிர்ப்புள்ளவை என்பதற்கு அது தான் அடையாளம். கவிஞரைக் கேட்டுப் பயனில்லை. எழுதி வெளியுலகில் உலவ விட்ட பிறகு, அவற்றுக்கும் வாசகனுக்குமான உறவு தனி. அதில் எழுதியவர் தலையிட முடியாது. அவரவர் கொள்ளும் அர்த்தம் தான் அதன் அர்த்தம்.
ராபர்ட் ப்ரௌனிங் சொன்னதாக ஒரு புகழ் பெற்ற வாசகம் உண்டு. ராபர்ட் ப்ரௌனிங்கிடம் ஒருவர் அவர் கவிதை ஒன்றிற்கு என்ன பொருள்? என்று கேட்டதற்கு, அவர் சொன்னது “இக்கவிதையை எழுதிய போது இதன் பொருள் என்னவென்று உலகில் இருவர்க்குத் தான் தெரிந்திருந்தது. அந்த இருவரில் நான் ஒருவன். மற்றவர் கடவுள். இப்போது கடவுள் ஒருவருக்குத் தான் இதன் பொருள் தெரியும். என்னைக் கேட்டுப் பயனில்லை”.
சரி திலகபாமாவுக்கு வருவோம் விதைகள், மண், ஈரம், பூக்கள், வேர் என உருவகங்கள் கொண்டது அவர் கவிதை மொழி
உன் மொட்டை மாடியில்
தொட்டிச் செடியாவதற்கென்று
அந்தி மந்தாரை விதைகளை
அனுப்பி வைக்கின்றேன்.
நாளெல்லாம் நீரூற்றியும்
முளைக்காத விதை
ஒரு நாள் அவன்
வீடில்லா போழ்தினில்
விழுந்த மழைச் சாரலில்
நனைந்த மறுநாள்
அரும்பு விட்டதாம்
இன்னொன்று:
மலையும்
பள்ளத்துக்குமிடையில்
வீழுகின்ற அருவியாய்
எனக்கும்
உனக்குமிடையில்
வாழ்க்கை
வீழ்ந்தபடியே வாழ்கின்றது.
இவையெல்லாம், கரையாத உப்புப் பெண் என்னும் எட்டாம் தொகுப்பிலிருந்து. முதல் தொகுப்பைப் பார்க்கலாமா? எந்த கவிதையையும் அதன் முழுமையில் நான் தரவேண்டியதில்லை.
ஒரு சில மாதிரிக்கென்று. பூடகமானவை தான். புரியாமலா இருக்கும்?
ஊரெங்கும் நெருப்புக் கோழிகள்
மண்ணுள் புதைந்து புதைந்து
கழுத்து நீண்டு போகும்
நெருப்புக் கோழிகள்.
பாரங்களின் சுகம் என்ற கவிதையிலிருந்து,
கனத்துக் கிடந்த தனிமை
நீ பேசிய நிமிடங்களை விட
அளவுக்கதிகமான நினைவுகளோடு
தொணதொணக்கும்.
…………
…….
தலைக்கடியில் தானென்றாலும்,
பாரமாகும் தலையணைகள்
நெருடல்களாவது தவிர்க்க
கட்டாந்தரையில் கால்கள்
பதிக்கும் தலைகள்.
(இதில் அளவுக்கதிகமான என்ற சொல் கொஞ்சம் அதிகமே நீட்டப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. “அதிக” என்றாலே போதும் என்று தோன்றுகிறது.
இன்னும் ஒன்றே ஒன்று. நிஜங்களின் நிழல்கள்- லிருந்து
விதை ஓடு தெறிக்க,
வெளிவந்த நாற்று
மண்ணுக்குள் வேராகத் தனைத்
திணிக்க மனமில்லாது
விடுத்த இலையைச் சிறகாக்கி,
நட்சத்திரக் கனவு காண
நினைவை மண்ணிட்டு
பின் மண்ணோடு பெயர்த்தெடுத்து
இடம் மாற்றி திசை மாற்றி இன்று மண்ணும் நானும்
இரண்டாக்க முடியாததாய் ……
என்று தொடங்கும் இந்நீண்ட கவிதை இப்படி முடிகிறது.
பறக்க ஆசைப்பட்ட மரம்
பூக்களின் கனிகளின் பாரங்களோடு
மண்ணோடு வாழும்
வாழ்வெது எனும் கேள்வி தாங்கி.
இனி எனக்குப் புரியாத உருவகத்தை உதாரணிக்க வேண்டாமா?”
அது இத்தொகுப்பின் தலைப்புக் கவிதை தான். கரையாத உப்புப் பெண்
கரையாள் என நம்பிய
உப்புப் பெண்ணாய்
அவள் உன்னருகில் வந்த போதும்
படித்திருந்த கிளியின்
இன்னுமொரு ரூபமென அறியாய்.
எட்டுத்தொகுதிகள். இவையெல்லாம் பெண்ணின் சுதந்திர இருப்பைத் தன் தனித்த குரலாய் பதிவு செய்பவை. கூட்டுக் குரல் அல்ல. கோஷங்கள் அல்ல. தனித்து ஒலிக்கும் குரலானாலும் பெண் இனம் அனைத்துக்குமான குரல். தன் பெண்மையை அதன் நளினத்தை, அழகை பென்ணியம் என்று சொல்லி மறுத்துக்கொள்ளாத குரல். பரந்து விரிந்து கிடக்கும் இயறகை அனைத்திலும், பூக்களில் விதைகளில், மரங்களில், இலைகளில், மண்ணில், காற்றில் தன்னைக் காணும் குரல்.
கரையாத உப்புப் பெண்: (கவிதைத் தொகுப்பு) திலக பாமா
வெளியீடு: காவ்யா, 16 இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம் சென்னை -24 ப். 156 ரூ 120
- நிலைத்தகவல்
- அவன் – அவள் – காலம்
- சீறுவோர்ச் சீறு
- அரிமா விருதுகள் 2012
- ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..
- உருக்கொண்டவை..
- சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி
- பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
- மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “
- ஊமைக் காயங்கள்…..!
- தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்
- நினைவுகளின் சுவட்டில் – 88
- திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
- இதுவேறு நந்தன் கதா..
- பாரதி
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- ருத்ராவின் குறும்பாக்கள்
- ருத்ராவின் குறும்பாக்கள்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29
- துருக்கி பயணம்-5
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16
- 2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
- ஜுமானா ஜுனைட் கவிதைகள்
- அன்பின் தீக்கொடி
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)
- முள்வெளி அத்தியாயம் -12
- தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
- திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
- ஒரு விவாகரத்து இப்படியாக…!
- வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்
- கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்
- பிரேதம்
- பஞ்சதந்திரம் தொடர் 47
- புதிய கட்டளைகளின் பட்டியல்..
- தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
- வருகை
- காசி யாத்திரை
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று
- கணையாழியின் கதை
///விதை ஓடு தெறிக்க,
வெளிவந்த நாற்று
மண்ணுக்குள் வேராகத் தனைத்
திணிக்க மனமில்லாது
விடுத்த இலையைச் சிறகாக்கி,
நட்சத்திரக் கனவு காண
நினைவை மண்ணிட்டு
பின் மண்ணோடு பெயர்த்தெடுத்து
இடம் மாற்றி திசை மாற்றி இன்று மண்ணும் நானும்
இரண்டாக்க முடியாததாய் ……///
இதன் அர்த்தம் என்ன ? அடுக்கு மேல் அடுக்கும் இந்தக் கற்பனைச் சம்பவங்கள் மனத்திரையில் ஒரு வடிவத்தைக் காட்ட வில்லையே !
திலகபாமாவின் நளினப் பெண்ணியக் கவிதைகள் பல எனக்குப் புரிவதில்லை. அவருக்கு மட்டும் புரியும் அவரது அரிய தமிழ்க் கவிதைகள் அவரால், அவருக்கு மட்டும் எழுதப்பட்டவை. பிறரும் அவற்றைச் சுவைக்க முடிய வில்லை புரியாததால்.
அவர் எழுதிய கவிதை வரிகள் எதுவும் ஏனோ மனதில் ஒட்ட வில்லை. அது அவரது தனி நடை.
சி. ஜெயபாரதன்.
மனதை லயித்து கொண்டு செல்லும் கவிதைகள். மேல்நாட்டு புரியாத குப்பைகள் பல மொழிபெயர்ப்பாய் வரும் தருணத்தில் தரமுடன் இந்த கவிதை சந்தோஷம் தருகிறது. கவிதை வரிகள் மனதில் வழுக்கி ஆழ்வரை செல்லுகிறது. கோதுமை பசையாய் ஒட்டாதது நன்றே…
அன்பின் திரு வெங்கட் சுவாமிநாதன்,
அழகானதொரு விமர்சனம்.. ஒரு படைப்பாளியின் பார்வையை ஊடுறுவி அதன் போக்கை சரியாக உள்வாங்கி அதற்கான ஒப்பீடுகளுடன், தம் சொந்த கருத்தையும் இணைத்து வழங்கக்கூடிய ஒரு உன்னதமான நடை தங்களுடையது என்பதை பலமுறை ஏற்கனவே வாசித்து அனுபவித்திருந்தாலும், கவிஞர் திலகபாமாவின் கவிதைகளின் பார்வை மேலும் மெருகூட்டி இனிமை சேர்க்கிறது. அற்புதமான தங்கள் பார்வையில் திலகபாமா மேலும் மிளிர்கிறார். பகிர்விற்கு நனிநன்றி.
அன்புடன்
பவள சங்கரி
பூனைப் பெயர் பூண்டவரே, ஒளிந்து கொண்டு சிறுவன் போல் இப்படிக் கல்லை விட்டெறியாமல், முதிர்ச்சி அறிவுள்ள ஒரு மனிதனாய் முதலில் நீவீர் யார் என்று உங்கள் வேடத்தை நீக்கித் திண்ணையில் பின்னூட்டம் இடுவீர்.
சி. ஜெயபாரதன்.
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
திண்ணை வெயீடுகளுக்குப் பின்னோட்டம் இடுவோரில் ஒருவர் மட்டும் புனை பெயரில் தொடர்ந்து மறைவாக இகழ்ந்து எழுதிக் கொண்டு தப்பி வருவதை நாகரீக வெளியீடுகள் எதுவும் இது போல் செய்ய மாட்டா. இவை மெய்யான பின்னோட்டம் அல்ல ! களவோட்டம்.
இப்படிக் கள்ள ஓட்டுப் போடுவதை ஏற்றுக் கொள்ளாமல் உடனே திண்ணை நிறுத்த வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன்.
சி. ஜெயபாரதன்
கரையாள் என நம்பிய
உப்புப் பெண்ணாய்
அவள் உன்னருகில் வந்த போதும்
படித்திருந்த கிளியின்
இன்னுமொரு ரூபமென அறியாய்.–> வெ.சா அய்யா அவர்களுக்கு என் ஒரு சந்தேகம்… இந்த வரிகளில் இருக்கும் “படித்திருந்த..” என்பது “பாடித்திரிந்த..” என்பதா…? என்பதை கொஞ்சம் சரிபார்த்துச் சொல்ல முடியுமா. சமீபகாலத்தில் எழுத வேண்டும் என்பதற்கன்றி எழுதப்பட்ட கவிதையாக நான் இதைப் பார்க்கிறேன். உணர்வுகள் வியாபித்துக் கிடக்கின்றன வரிகளில். நன்றி , இதை அறிமுகப்படுத்தியதற்கு…
அன்புள்ள நண்பர் புனை பெயரில்,
பாடித் திரிந்த என்பது தான் சரி. தவறு என்னது. வெகு காலம் ஆயிற்று. எழுதியதைத்திரும்பப் படிக்கும் பழக்கம் இருந்ததில்லை. இப்போது அது தவறு என்று படுகிறது. முன்னர் என்ன் தவறுகளை ஆசிரியரோ, கம்பாசிட்டரோ திருத்துவார்கள். இப்போது அந்த ஜீவன்கள் extinct species ஆகிவிட்டார்கள் இந்த கணிணி யுகத்தில். என் தவற்றுக்கு மற்றவர் மேல் பழி போடக்கூடாது. என்னைத் திருத்திக்கொண்டு வருகிறேன். திருப்பப் படித்துத் தான் அனுப்புகிறேன் இதையும்மீறி தவறுகள் தப்பிவிடுகின்றன். இனி இன்னமும் அதிக கவனமாக நான் இருக்கவேண்டும். பாடித்திரிந்த என்று படித்துக்கொள்ளுங்கள். திண்ணை ஆசிரியர் குழு, திலகபாமா வாசகர்கள் எல்லோரிடமும் மன்னிப்புக்க் கேட்க வேண்டும். திலகபாமாவைத் தப்பும் தவறுமாக முன்னிருத்தியதற்கு.
2. ஒரு irony பார்த்தீர்களா? ‘புனை பெயரில்” என்று உங்களுக்குப் புனை பெயர் சூட்டிக்கொண்டுள்ளீர்கள். இதற்கு அர்த்தம், ‘புனை பெயரற்று” என்றும் இருக்கும். புனை பெயரோடு என்றும் இருக்கக் கூடும். ஜெயபரதன் மிகவும் மரியாதைக்குரியவர். நிறைந்த அறிவாளி. இதுப்பினும் transliteration படுத்தும் பாட்டில் உங்களை பூணையாக்கிவிட்டார். அவர் கொஞ்சம் கோபத்தோடு இருக்கிறார்.
ஜெயபரதன்,
வெற்று வார்த்தையாடல், பூடகம் என்று சொல்லி வெற்று வார்த்தையாடலில் பயமுறுத்துவது, அல்லது, showing oneself off. அடுத்து obscurity- யில் obscurity of expression and expression of obscurity என்று இரண்டு வகைகள் உண்டு முன்னது வேண்டாதது. பின்னது தவிர்க்கமுடியாதது.
திலக பாமாவில் வெற்று வார்த்தையாடல் இல்லை. வீம்புக்காக வார்த்தைகளைக் கொட்டி தலையில் பூச்சூட்டிக் கொள்பவர் இல்லை. அப்படி நிறையப் பேர் இன்றைய தமிழ் எழுத்தில் உண்டு.
எனக்கும் ஒரு பகுதி திலகபாமாவின் கவிதைகள் உடன் அர்த்தப் படுவதில்லை. அதையும் நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் கவிதை நம்மைஅன்னிய படுத்துவதில்லை. ஏதோ நம்மைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கிறது. இன்னொரு முறை இன்னொரு மனநிலையில் படித்துப் பார்க்கவேண்டும், சாவகாசமாக, என்று மனம் சொல்கிறது. திரும்பப் படியுங்கள். தொடங்கிய போதே கவிதைகளிலிருந்து அன்னியப்பட்டு விட்டீர்கள் என்று தோன்றுகிறது.
திலக பாமா எளியவர். இயற்கையின் வெளிப்பாடு அத்தனையும், மரமும், மன்ணும், மலர்களும், தளிரும், எல்லாமே ஒரு ஒருங்கிணைந்த பார்வையில் பெண்ணினத்தைப் போல, அவர்கள் வாழ்வைப் போல, அடக்குதலும், மீறி எழுதலும், மலர்தலும், அல்லது மண்ணில் புதைந்து ஒன்றுமற்றுப்போதலுமான காட்சியாகவே அவருக்குத் திரும்பத் திரும்பத் தோன்றுகிறது. அனேகமாக எல்லாக் கவிதைகளிலும் இந்த metaphor திரும்பத் திரும்பக் காட்சி தருவதைக் காணலாம். திரும்பவும் அன்னியப் பட்டுப் போனால் விட்டு விடுங்கள். என்னத்துக்கு இந்த வேதனை.
அடிவயிறு எரிந்த போதும், மேல் மனது கிளர்ந்த போதும் உணர்வுகள் எனக்கு வரிகளாய் வந்ததுண்டு. பண்ணாடு இலக்கியங்களும், பன்மொழி தேர்ச்சியும் பெற்று வித்தகத்தன்மையில் எழுதப்படுவதை விட இம்மாதிரி மனநிலையில் வருபவையே மனதை கிளர்ந்து போடச் செய்கிறது. உலகின் பலபாகம் சுற்றியும், ஒரு நாளைக்கு 600டாலர் ரூம் வாடகையிலும், பின்னொருநாள் 20டாலர் ரூம் வாரகையிலும், ஒரு நாளையில் 1500டாலர் சம்பாதித்த போதும், சில நாட்கள் கையில் காசில்லாமல் கோவில் மடங்களில் சாதம் தின்னபோதும் என்று பல எதிர்நிலை வாழ்வு கண்டவன் நான். மிகப் பெரிய சமதர்மம் பேசும் ஒரு தலைவர், தனது சமைய்ல்காரனை வெளியில் சாப்பிடச் சொல்லும் சம்பவம், வில்லனாய் ஊர் நினைக்கு ஒரு மாபெரும் நடிகர் யோக்கியனாய் வாழும் நிலை என எல்லாமே எதிர் நிலை அனுபவங்கள் எனக்கு. எங்கோ தூரத்தில் இருந்து இந்தியாவை குறை சொல்லி மாற்றுவோம் என்று சொல்லும் மேதாவிகளை விட , இந்தியத் தெருக்களில் பாதள சாக்கடையில் இறங்கும் தொழிலாளியை அதிகம் மதிப்பவன். சோர்ந்து போகும் நேரமெல்லாம் என் முப்பாட்டன் பாரதி சொன்ன “தேடிச் சோறு நிதம்…” எனும் வரிகளே எனை இன்னும் வாழ வைக்கின்றன… கவிதையும் எழுதியதுண்டும்… கணையாழியிலும் எழுதியதுண்டு… ஆனால் எழுத வேண்டும் என்றல்ல… தோன்றிய போது எழுதியது… ரொம்ப ரொம்ப அதிசயமாய் ஏதாவது எனக்கு மனதில் தைக்கும்… அதில் திலகபாம பற்றி நீங்கள் எழுதியதும் ஒன்று… எனக்கு ஒரு நல்தருணம் தந்ததற்கு வெ.சா அவர்களுக்கு நன்றி…
நண்பர் வெங்கட் சாமிநாதன்,
எனக்குத் திலகபாமாவை பல்லாண்டுகளாக நன்றாகத் தெரியும். பலமுறை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டவர் நாங்கள். அவரது சில கவிதைகள், சிறு கதைகள் சில எனக்குப் புரியாமல் நானே நேராக அவரிடம் விளக்கும்படி கேட்டிருக்கிறேன்.
பெண்ணியம் பற்றி நுணுக்கமாக எழுதிவரும் கவிஞர் திலகபாமா சீரும், சிறப்புமாய், செல்வீகக் குடும்ப வாழ்வில் கணவரின் மருத்துவ மனையைச் சிவகாசியில் தானே நடத்தி வருபவர். மற்ற கவிஞர் போல் வறுமையில் துயர் அடையாதவர்.
அன்படன்,
சி. ஜெயபாரதன்
நல்லதொரு விமர்சனம்.
திலகபாமா இலங்கை வந்திருந்தபோது சந்தித்துப்பேசினேன். எந்தவித பந்தாவும் அற்றவராய் வெகு இயல்பாய் இருந்தார்.
அப்போது தெரிந்தது, அவரது கவிதைகளைப் போலவே அவரும் எளிமையும் இனிமையும் கொண்டவர் என்று.
அவரை திண்ணையூடே மீண்டும் தரிசிக்கச் செய்த வெ.சா. ஐயாவுக்கும் திண்ணைக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
இளையராஜாவிடம் அவரது இசை ஒன்று புரியவில்லை என்றொரு ரசிகர் கேட்டாராம். அதற்கு அவர், ”புரியலைன்னா நான் என்ன செய்ய…” என்றாராம். இசை அனுபவிக்க வேண்டிய மனநிலை ஒத்த போதே புரியும். இலக்கியம் என்ன (a+b)2 ஆ… என்ன… விளக்கி புரிய வைக்க… ஒரு ஃபார்முலாவில் புரிந்தால் அது இலக்கியமேயில்லை… அதனால் தான் இலக்கியவாதியாக எல்லா நிலை மனிதர்களிலும் பிறப்பு நடக்கிறது. கூனி கூறுகிய வாழ்வில் ஜனித்த இளையராஜா போன்றவர்கள் இசை சாம்ராஜ்யத்தின் மன்னராக முடிகிறது. விமர்சிக்கப்பட்ட குடி பிறந்த அம்மா எம்.எஸ் இசையின் அரசியாக முடிகிறது. டீ பாய் எம் எஸ் வி நம்மை இசையால் அடிமையாக்க முடிகிறது. குடிகாரனுக்கு நாமும் தாசனாக முடிகிறது -அவனது ஞானத்தால். சோத்து வழியில்லா நிலையிலிருந்த ஒருத்தர் நமது கலைத் தாகத்து பசியாற்றவில்லையா…? நடிகர்திலகமென்று நாம் அழைக்கவில்லையா…? கஷ்ட்ப்பட்டதால் புரிந்த அனுபவ நிலை இது…. புரியாவிடில், புரியும் வரை காத்திருப்போம்…
/////மேல்நாட்டு புரியாத குப்பைகள் பல மொழிபெயர்ப்பாய் வரும் தருணத்தில் தரமுடன் இந்த கவிதை சந்தோஷம் தருகிறது. கவிதை வரிகள் மனதில் வழுக்கி ஆழ்வரை செல்லுகிறது. கோதுமை பசையாய் ஒட்டாதது நன்றே…////
உலகப் புகழ்பெற்ற நாடக மேதை ஷேக்ஸ்பியர், நோபெல் பரிசு பெற்ற நாடகப் படைப்பாளி பெர்னாட்ஷா ஆகியோர் எழுதியவை எல்லாம் மேல்நாட்டு புரியாத குப்பைகளாம்.
சி. ஜெயபாரதன்.
நன்றி திண்ணைக்கும், வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும், உரையாடலில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும்