கணையாழியின் கதை

This entry is part 41 of 41 in the series 10 ஜூன் 2012

  இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான ‘கணையாழி’ யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு ‘திரும்பிப் பார்த்தல்’. ‘புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று

This entry is part 40 of 41 in the series 10 ஜூன் 2012

  1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை   உன்னாண்ட ஒரு தண்ணிச் சொம்பும் கன்னடத்திலே எவனோ எங்கேயோ எழுதிக் கொடுத்த கோர்ட் காயிதமும் ஒரு தபா கொடுத்தேனே, ஞாபகம் இருக்கா? கோர்ட்டுலே குப்பை செத்தையா அடஞ்சு வச்சிருந்த ஜாமானுங்க.   நாயுடு சாயும் சூரிய வெளிச்சம் முகத்தைப் பாதிக்கு வெளிச்சம் போட, மீதம் மசங்கல் இருட்டில் இருந்தபடி நீலகண்டனைக் கேட்டான்.   நினைவு இருக்கிறது. அவன் கொடுத்தது. முக்கியமாக அந்த செம்பு. கங்கா […]

காசி யாத்திரை

This entry is part 39 of 41 in the series 10 ஜூன் 2012

  காசி ,   எஸ்.எஸ்.எல்.ஸி எனப்படும் பள்ளியின் கடைசி வருடமான பதினோறாம் வகுப்பில் ஏன் எங்கள் ரயில்வே ஸ்கூலில் வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை. எங்களின் ஆங்கில ஆசிரியர் நடராஜன் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பள்ளியின் சீனியர் ப்யூன் ராஜன்தான் காசியை அழைத்துக்கொண்டுவந்து, ” சார்! ஹெட்மாஸ்டர் இந்தப் பையனை ஒங்க க்ளாசில ஒக்காரவக்கச் சொன்னாரு ” என்று காசியின் முதுகில் கையைவைத்து மெதுவாகத் தள்ளிவிட்டான். தயங்கியபடியே காசி வகுப்பில் நுழைந்துகொண்டிருந்த பொழுது, நடராஜன் சார், பியூன் ராஜனைப் […]

வருகை

This entry is part 38 of 41 in the series 10 ஜூன் 2012

குருசு.சாக்ரடீஸ் பேருந்தில் நெருக்கியடிக்கும் கூட்டமிருந்தது. யாவோவை தவிர அனைவரும் போப் இரண்டாம் ஜாண்பாலை காணவந்த புனித யாத்ரீகர்கள். விமான நிலையத்தின் சில அடி தூரங்களில் பேருந்து நிறுத்தபட்டது. அதற்கு மேல் பேருந்தை நகர்த்த ரோட்டை அடைத்துகொண்ட திருவிழா தனம் சம்மதிக்கவில்லை. யாவோவின் உடமைகளையும் பேருந்திலிருந்து இறங்கிய யாத்ரீகர்கள் கால்களால் உதைத்து தள்ளினார்கள். ஒரு தகர டிரங்கு பெட்டியும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்த இரண்டு அட்டைபெட்டிகளும் ரோட்டில் உருண்டன. ரோட்டு ஓரமாக அவைகளை எடுத்து வைக்க கூட அவகாசம் தராத […]

புதிய கட்டளைகளின் பட்டியல்..

This entry is part 36 of 41 in the series 10 ஜூன் 2012

ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய் நினைவுப் படுத்திக் கொள்ளவோ அல்லது ஞாபகத்தில் இருத்திக் கொள்ளவோ புதிய கட்டளைகளின் பட்டியலொன்றை வாசலில் நின்றபடி சத்தமிட்டு வாசித்துச் செல்கிறாய் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நானும் பின்னிக் கொண்டிருந்த வலையை நிறுத்திவிட்டு சிலந்தியும் வாய் மூடிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ******* –இளங்கோ

பஞ்சதந்திரம் தொடர் 47

This entry is part 35 of 41 in the series 10 ஜூன் 2012

  மூடத் தச்சன் ஒரு ஊரில் ஒரு தச்சன் இருந்தான். அவன் மனைவி ஒரு வேசி என்பது ஊரறிந்த சங்கதி. அவள் நடத்தையைச் சோதிக்க நினைத்தான் தச்சன் ‘’இவளை எப்படிச் சோதிப்பது? பெண்களின் கற்பின் முன்னே நெருப்பு குளுமையடையும், நிலா நெருப்பாகிவிடும், கெட்டவன் நல்லவனாவான். என்றொரு பழமொழி உண்டு. ஊர் ஜனங்கள் பேசிக்கொள்வதிலிருந்து இவள் ஒரு வேசி என்று எனக்குத் தெரியும். வேதத்திலோ சாஸ்திரத்திலோ காணாததையும் கேளாததையும், பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள சகல விஷயங்களையும், ஜனங்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். […]

பிரேதம்

This entry is part 34 of 41 in the series 10 ஜூன் 2012

  புத்தகம் மூடியே கிடந்தது மேஜையில் காபி ஆறிப்போயிருந்தது ஆஸ்ட்ரேவில் சாம்பல் இல்லை இன்னும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது அவளுக்கு உற்ற துணையாய் இருப்பேன் என்றேன் ஆனால் இதற்கு துணை வர முடியவில்லை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள மருத்துவரை அழைக்கலாமா என்று யோசனை எழுந்தது நான் இன்னும் உயிருடன் இருப்பது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது எனது ஆன்மா பாதாள அறையில் சிறைபட்டுவிட்டது மீண்டும் அறை கதவை திறந்து உள்ளே சென்றேன் இத்தனை நாட்களாக வியாதி […]

கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்

This entry is part 33 of 41 in the series 10 ஜூன் 2012

குருசு.சாக்ரடீஸ் பிரார்த்தனைகூடத்தின் பாடல் அலையில் போன்சாய்களாய் உருமாறும் கன்னியாஸ்திரிகள் ரோமபுரியின் கனவில் வார்த்தெடுக்கப்பட்ட போன்சாய்களின் பாடல் திணறும் சுவாசத்தில் உயிர்க்கின்றன பறவைகள் போன்சாய்கள் முணுமுணுக்கும் வெதுவெதுப்பான காலையை வரவேற்க காத்திருக்கின்றன போக்கிடமற்ற பறவைகள் பிரார்த்தனைக்கான பாடல்கள் கை தவறிய நாணயத்தைப் போல கூடத்தில் உருள்கின்றன வெளியேறும் வழியற்ற உலகத்தின் அறைக்குள் தண்ணீர் சிற்பங்களை செதுக்கும் போன்சாய்கள் திராட்சை ரசத்தில் கரைக்கின்றன ஹிருதயங்களை பெருமூச்சில் கருத்தரிக்கின்றன பூக்கின்றன வண்ணத்துபூச்சிகள் அமர இலை விரிக்கின்றன கனவுகளை குவளையில் பருக தருகின்றன […]

வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்

This entry is part 32 of 41 in the series 10 ஜூன் 2012

மதியழகன் சுப்பையா காஞ்சிபுரம் இலக்கியக்களம் அமைப்பு சார்பாக வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து. இதில் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் அ. வெண்ணிலா தலைமை தாங்க நான், அஜயன் பாலா மற்றும் பகலவன் ஆகியோர் வழக்கு எண் 18/9 திரைப்படம் குறித்த எங்கள் மதிப்பீடுகளை வைத்தோம். ஏற்புரையின் போது பாலாஜி சக்திவேல் குறைகளை கண்டிப்பாக திருத்திக் கொள்வதாகச் சொன்னார் மற்றும் […]

ஒரு விவாகரத்து இப்படியாக…!

This entry is part 31 of 41 in the series 10 ஜூன் 2012

  எழுதியவர்: ’கோமதி’   காலை முதல் பக்கத்து போர்ஷனில் ஏதோ தகராறு. விவரம் சரியாகப் புரியவில்லை. ஆனால், காரசாரமான விவகாரம். நான் அலுவலகம் புறப்படும் வரை தொடர்ந்ததால் எனக்குப் புறப்படவே முடியவில்லை. எப்படியாவது விவரம் அறியவேண்டும். என் மனைவியோ அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருப்பவள். எதையும் காதில் வாங்க அவளால் முடியாது.   நான் வாசலில் வண்டியை புறப்படவைக்க முயன்றுகொண்டி ருந்த போது ஜகன் இரைந்துகொண்டிருந்தான்.  ”ஒன்று, நீ போகணும், இல்லை, நான் […]