தீபாவளியின் முகம்

Spread the love

 

நீலம் புயலால்

தரை தட்டியிருக்கிறது

வாழ்க்கைக் கப்பல்

 

கொஞ்சம்

படுத்துக் கொள்ள

பாய் தேடுகிறது

உலகப் பொருளியல்

 

வலிகள்

இவைகளுக் கிடையேதான்

சுகப் பிரவேசமாய்த்

தீபாவளி

 

ஒரு சிரிப்பை

எழுதத்தான்

மையாகிறது கண்ணீர்

 

‘சுபம்’ சொல்லத்தான்

முளைக்கிறது

பிரச்சினை

 

ஒரு

குழந்தையை

எழுதிவிட்டுத்தான்

எடுக்கிறது இடுப்புவலி

 

‘அமைதி’ யை

எழுதிவிட்டுத் தான்

புறப்படுகிறது

புயல்

 

ஆக

சேருமிடம் என்றும் சுபம்

அதுதான் தீபாவளியின் முகம்

 

அமீதாம்மாள்

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -2அகாலம்