தீபாவளி


பூங்காவனமானது

புக்கித்தீமா ஆறு

 

பூங்காவனம் பாட

புள்ளிமயில்கள் ஆட

வண்ண மயில்கள் வணங்க

அழகு மயில்கள் ஆரத்தி சுற்ற

கொள்ளை அழகாய் விரிகிறது – நம்

மரபுகளின் திறவுகோலாம் தேக்கா

 

நகைக்கடை பூக்கடை

பலகாரம் பட்டாசு

துணிகள் தோரணங்களாய்

தேனடைகள் தேக்காவில்

தேனீக்கள் மக்கள்

 

‘போன தீவாளி மசக்கையோட

இந்தத் தீவாளி மகனோட’

கூட்டத்தில் ஒரு மாதின் குரல்

 

மாங்கன்னு பூத்திருச்சா’

தொலைபேசியில் பூக்கிறார்

இன்னொருவர்

 

உள்ளமெல்லாம் ஹீலியம்

உற்சாக வானில் மக்கள்

 

முகப்புத்தகங்களின்

முகப்பூக்களாய் தேக்கா

அலங்கார அரங்கேற்றம் அதிபர்

 

பரமபத வாழ்க்கையில்

ஏணிகள் தீபாவளிகள்

 

அமீதாம்மாள்

 

Series Navigationதொடுவானம் 142. தடுமாற்றம்”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”