தீர்ந்துபோகும் உலகம்:

Spread the love


 

துணி மாட்டும் கவ்விகளில்

முனைப்பாய் தன் நேரத்தை

விதைக்கிறது அந்தக்குழந்தை

ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து

வீடு கட்டி மகிழுந்து ஓட்டி

அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி

எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து

தம்பிப்பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து

பறவைக்கு இறக்கை பொருத்தியென….

 

நிமிடங்களுக்கு நிமிடம்

மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது

அதற்கானதொரு அழகிய உலகத்தில்…

 

அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு

விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும்

உலரும் துணி உதிராமல் இருக்க

அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்

Series Navigationபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறதுஎங்கே போகிறோம்