துணைவியின் இறுதிப் பயணம் – 9

This entry is part 3 of 10 in the series 20 ஜனவரி 2019

 

சி. ஜெயபாரதன், கனடா

 

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

 

++++++++++++++

[32]

மானுடப் பிணைப்பு

[Human Bondage]

 

“மானுடம் பூத்தது

வாழ்வதற்கு !

மன்மத ராகங்கள்

காதலுக்கு !” என்று

கனடா கவிஞர் புகாரி

கவிதை

எழுதி வைத்தார்.

முன்புறம்

ஒரு கதவு மூடினால்

பின்புறம்

மறு கதவு திறக்கிறது !

இறுதியில்

பிரிந்து செல்லும் கை

பிடித்தது

என் இடது கையை !

உடனே அடுத்து நான் வாழப்

பிணைக்கும்

இருகரங்கள் பற்றி

இழுத்துக் கொள்ளும் என்னைத்

தன்வசம் !

இன்னும் ஆயுள் நீடிக்கும்

உனக்கு !

வாழ நினைப்பாய்.

உதவ முனைவாய்,

இன்னும் முடிக்க வேண்டிய  

வினைகள் பல

உள்ளன உனக்கு !

பயணம் முடிய வில்லை

உனக்கு !

 

+++++++++++++++++++++

[33]

சிலுவை

 

ஒவ்வோர் மனிதனும்

தன் முதுகிலே

தனது சிலுவைச்  

சுமந்து கொண்டு தான்

சுற்றி வருகிறான் உலகை

செக்கு மாடுபோல்,

தெரிந்தோ

தெரியாமலோ !

மதுபானம் சிலருக்கு!

மரிவானா சிலருக்கு !

மடிவெடி சிலருக்கு !

புற்று நோய் சிலருக்கு !

பட்டென வெடித்துக் கொல்லும்

இரத்தக் குழல் வீக்கம்

சிலருக்கு !

பயண முடிவிலே சிலுவையில்

யார் உன்னை அடிப்பது

ஆணியில் ?

ஊழிக் காலன் தான் !

 

++++++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்

Series Navigationபுதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதிகள்பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *