தேன் குடித்த சொற்கள் ! 

Spread the love
 
       ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
அங்காயம்
ஆத்தப்பம்
றுகாய்
ருக்கு
மொக்காடி
தலா என்ற பாங்கில் திரிந்தன
முறையே
வெங்காயம்
ஊத்தப்பம்
ஊறுகாய்
ஊருக்கு
மிளகாய்ப்பொடி
லதா போன்ற சொற்கள்
 
பற்கள் தெரியாமல்
புன்னகைக்கும் குழந்தை
மூன்று வயது பார்க்கில் மழலையில் …
—–குழந்தை பேசும் மட்டும்
எல்லா மொழிச் சொற்களும்
தேன் குடிக்கின்றன ! 
 
              +++++++
Series Navigationஇது போதும்..முடிவை நோக்கி !