தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்

Spread the love

மனிதனாக பிறந்த ஒவ்வொருவறுக்கும் பல அடையாளங்கள் வாழ்கையில் தேவைப்படுகிறது. இந்த அடையாளங்களே அவனது வாழ்கையின் பல பரிமாணங்களையும் நிர்மாணிக்கிறது. பல அடையாளங்கள் காலப்போக்கில் ஒருவரது வெற்றி தோல்விகளை வைத்து மாறும் தன்மை கொண்டது. ஆனால் சில அடையாளங்கள் என்றுமே மாறாது நிலைத்துதிருப்பவை. (அவை பரம்பரை பரம்பரையாக தொன்றுதொட்டு வரும் பண்பாடுகளான மொழி, இனம், மதம், தாய்நாடு, கலாசாரம், ஆண்மிகம் பாரம்பரியங்கள் ஆகும். மேலும் இவை ஒரு தாய்மையின் அடையாளங்களாகவே போற்றப்பட்டு வந்தன. எனவே இப்படிப்பட்ட அடையாளங்களை ஒருவன் மாற்றினால் அவனை சமுதாயம் மதிப்பதில்லை. இப்படிமாற்றமுடியாத மாற்றக்கூடாத அடையாளங்களை மாற்றி மாற்றி கூறிக்கொண்டு வீண் பேச்சு பேசி ஊரையும் தன்னையும் ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர் பெரும்பாலான பகுத்தறிவு தமிழர்கள்.
பாரத்ததில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நான் ஒரு இந்தியன் என்ற அடையாளம் எல்லாவற்றிலும் முதன்மையானது. இந்த அடையாளம் தேவையில்லை என்றுகூறிகொண்டு இங்கேயே ஜிவனம் செய்பவர்கள் தேசதுரோகிகளே. இந்த குறை பெரும்பாலான சிறுபான்மையயிரிடமும் போலிமதசார்பின்மை பேசுபவரிடமும் பகுத்தறிவு வியாதிகளிடமும் கண்கூடாக காணமுடிகிறது. இவர்கள் நம்நாட்டை கூறுபோட்டு அன்னியர்க்கு விற்ககூட தயங்காத கேவலமான மிருக ஜென்மங்கள்.
இரண்டாவது அடையாளம் ஒருவறது தாய்மதம். தாய் மதத்தை மாற்றுபவன் தன் தாயையே விலைபேச துணிந்தவன் ஆவான். ஒருவன் தன் முன்னோர்களை பற்றி அவமானபடுவான் ஆனால் அவனுக்கு அழிவுகாலம் வந்துவிட்டது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இவ்வாறுமாறுபவன் தன்மானம் இழுந்து அடைகலம் புகுந்த மதத்தில் சிறுமைபடுகிறான். பல்லாயிரம் வருடங்களாக பாரதத்தில் வேதமரபை ஒட்டிய வாழ்கை நெறிமுறைகளையே மக்கள் பின்பற்றி வந்தார்கள். உலக நாகரிகங்களிலேயே வேதகால நாகரிகம்தான் மிகபழைமையானதும் முதன்மையானதும் ஆகும். உலகின் மற்ற நாகரிகவளர்சியின் முன்னோடி வேத நாகரிகமே. இதன் தாக்கத்தை எல்லா நாகரிகத்திலும் கண்கூட காணலாம். இடையே இங்கேயே வேதமதத்ததை ஒட்டி சில சில மாற்றங்களுடன் தோன்றிய புத்த, ஜைன மதங்களால் வேதமதத்தை வெற்றிகொள்ளமுடியவில்லை. பின் நாட்களில் படைஎடுத்து வந்த மிலேச மதங்களாலும் வெற்றி கொள்ள முடியவில்லை. காரணம் வேதமத்தின் உன்னதமான மனிதநேய கொள்கைகளும் சுதந்திரமான இறைகொள்கையுமே ஆகும்.
எல்லாம்வல்ல இறைவன் என்பவன் ஒருவனே அவன் உயிர் உள்ள ஆறறிவு படைத்தமனிதன் ஐந்தறிவு படைத்த விலங்கு உயிர் இல்லாத ஜட, திரவ, வாயு போன்ற எல்லா உலகபடைப்புகளிலும் வாசம் செய்கின்றான். அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. கடவுளின் படைப்பை உருமாற்றம் செய்யலாம் அன்றி ஒருவராலும் அழிக்கவும் ஆக்கவும் முடியாது. எந்த நல்ல கெட்ட செய்கையின் எதிர்வினை பலனை இப்பிறவியிலேயே அனுபவிப்பான். எஞ்சியவை அவன் சந்ததியையும் அவனது மறுபிறவியிலும் அவனை தொடர்ந்து தாக்கவோ பலன் அளிக்கவோ செய்யும்.
நான் கடவுளை நம்புகிறேன் ! கடவுள் என்னும் ஆன்மா என்னிடம் வாசம் செய்கிறார் !! நான்தான் கடவுள் !!! இப்படி நம்முள் வாசம் செய்யும் கடவுள் என்ற ஆன்மாவை உணர்வதே இந்து ஆன்மிகம். இந்த உணர்வை பெற இந்துமதம் பல வழிகளை சுட்டிகாட்டியுள்ளது. இந்த உணர்வை பெற்று முக்தி அடைந்தவர்கள் மிகமிக குறைவு. எப்படி காற்றை நாம் உணரலாமே அன்றி கண்ணால் கானமுடியாதோ கடவுளையும் ஒருவன் உணரலாமே அன்றி காணமுடியாது. அப்படி ஆண்மாவை உணர்ந்தவர்களின் சக்தி அபரிமிதமானது.
கடவுள் இருப்பிடத்தை விஞ்ஞானம் மென்ஞானம் ழூலம் நீருப்பிக்கலாம் என்றால் அவர் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கமுடியாது. மாதா ,பிதா, குரு, தெய்வம் என்று கடவுளை நான்காம் இடத்தில் வைக்கிறதது இந்து மதம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு தூண்களை அஸ்திவாரமாக கொண்டள்ளது இந்து மதம். ஆய கலைகள் 64 கையும் அலசி ஆராய்ந்து ஒரு வழிமுறை வகுத்துள்ளது இந்து மதம். மென்ஞாகமே விஞ்ஞானம் என்று இன்று வரை நிரூபித்துவருவது இந்து மதம்.
தொல்காப்பியர் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த எந்த புலவர்களும் இந்துமதம்வேறு தமிழர்மதம்வேறு என்று கூறவில்லை. பெரியாரின்வழிவந்த பிதற்றல் கூட்டத்தின் வழிநடப்பவர் என்றால் உண்மையை நம்ப மறுக்கும் உங்களை தெளியவைக்க யாராலும்முடியாது ? குமரிக் கண்டம் லூமுரியா என்று எந்த கடல் ஆராய்சியில் இறங்கினாலும் உலகின் எந்த எந்தெந்த இடங்களை தோண்டி ஆராய்தாலும் வெளிவருவது இந்துமத அடையாள சின்னங்களே தான் என்பது திண்ணம். பின் எங்கிருந்து வரும் தனி தமிழர் மதம் ?
ஆனால் மிலேச மதங்கள் இருப்பதோ ஒரு பிறவிதான் எனவே உலக சன்லாபங்களை இப்பொழுதே அனுபவிக்கவேண்டும். அதற்கான எல்லா அத்துமீறல்களையும் அடுத்தவர் நலத்தை கெடுக்கும் வகையில் செய்ய புனித நூலில் வழி செய்யப்பட்டுள்ளது. அப்படி செய்தால்தான் மேலும் சொர்கத்தில் சன்லாபத்துடன் சயன வாழ்கை அனுபவிக்கலாம். இவை இறைதூதுவர்களால் போதிக்கப்பட்டது என எழுதிவைத்து அதன்படி நடக்கிறார்கள். இதை நிறைவேற்றுவது எப்படி என்று இந்த துற்போதனைகள்தான் முக்கால் பங்கு புனித நூலில் கூறப்பட்டுள்ளது. எஞ்சி சில நல்ல போதனைகள் எல்லாம் இந்திய மதங்களின் போதனைகளை காப்பியடித்தும் சரியாக புரிந்து கொள்ளாமலும் சில மாற்றங்களுடன் எழுதிவைத்துள்ளார்கள் என்பதே எதார்த உண்மை. இந்த குழம்பிய குட்டையில் குளிக்க பணம் பதவி பட்டம் என்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பல அப்பாவி இந்துக்கள் மதம் மாறி சுய அடையாளங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள். இந்து பெண்களின் அடையாளங்களான கழுத்தில் தாலி, சக்திவாய்ந்த குங்குமம் பொட்டு, தலைநிறைய பூ, காலில் மெட்டி இவற்றுடன் சுமங்கலிகளை எதிர்கொண்டு சென்றால் காரியசித்தி நிச்சயம் என்பது இந்துகளின் நம்பிக்கை. ஆனால் மதமாறிய இந்து பெண்களை கூட்டமாக ஞாயிறுகிழமைகளில் இந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல் பார்கையில் வேதனையாக உள்ளது. இவற்றை துறந்தவர்கள் ஏன் புடவையை மாற்றி கவுன் மிடி போன்ற அன்னிய மத ஆடைகளை அணியவில்லை ? ஏதாவது துரத்தும் அல்லது எதையாவது எரிவார்கள் என்ற பயமா ? பிறந்தநாளின் பொழுது பெரியவர்களை வணங்கி கோவிலுக்கு சென்று அவர்கள் நட்சத்திரத்தின் பேரில் அர்சனை செய்வது இந்து வழக்கம். ஆனால் இன்று தன் பெயரையே கேக்கில் எழுதி அதை கத்தியால் வெட்டி ஏற்றிய மெழுகுவத்தியை ஊதி அணைப்பது எவ்வளவு அபசகுனமானது என்பதை உணராமலே விழா கொண்டாடுகிறார்கள். அம்மா அப்பாவை மம்மி தாடி என்று பெருமையாக அழைக்கிறார்கள். மம்மி என்றால் செத்த பிணத்தை போட்டுமுடும் ஒரு ngllfவழக்கம். டாடி என்றால் பல அர்தங்களை அகராதி சொல்கிறது. மறைமுகமாக இது ஒரு மாமாபயல் என்றே அர்தம் கொள்ளவேண்டியுள்ளது.
முன்றாவது தமிழன் என்ற இன அடையாளம் தமிழர்களின் ரத்தத்தில் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் இது தமிழர்களின் கலை, இலக்கியம், கலாசாரம், ஆண்மிகம், நாட்டியகலை, சிற்ப்பக்கலை, சங்கீதம், இந்துமத பண்பாடு, கடல்கடந்து வாணிபம், தேசிய ஒருமைபாடு என்ற எண்ணற்ற பொக்க்ஷியங்களின் பங்களிப்பை பரைசாற்றியது. ஆனால் காலப்போக்கில் தமிழன் என்ற இன உணர்வு சிதைந்து திராவிடன் என்ற அடையாளத்தை ஏற்றதால் அது தேசியத்தை பிரிக்கும் சக்தியாக உரு பெற்று இந்துமத எதிர்ப்பு , கடவுள் மறுப்பு , வடமொழி வெறுப்பு , பார்பன கசப்பு , அன்னியமத காதல் என்ற பிரிவினை உணர்வுளின் வெளிபாடான ஒரு ஈர்ப்பு சக்தியாக மாறிவிட்டது.
தமிழரின் இந்துமத பங்களிப்பு, தமிழரின் பக்திமார்கம் என்று இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் நாகரீகசெழுமைக்கும், ஆண்மிகஎழுச்சிக்கும் பெரும்பங்கு அளித்த நாடு தமிழ்நாடு என்பதை மறந்து மறைத்து தம் முன்னோர்களின் பங்களிப்பையும் பெருமையையும் உருதெரியாமல் குழிவெட்டிக்கொள்ளும் போலி திராவிடம் கண்டிப்பாக பூண்டோடு ஒழிக்கப்படவேண்டும். பாமரனாய் விலங்குகளாய் பான்மைகெட்ட போலி திராவிடபேய் ஒடுக்கப்படவேண்டும். தமிழர்தம் பெருமையை உணர்ந்து தலைநிமிர்ந்து நிற்வேண்டும். பெரியார் புராணம் மிகைபடுத்தி பாடுவதை உடனேநிறுத்தவேண்டும். அவர் 10 பேரூடன் சேர்ந்த 11வது சழூக சீர்திருத்தவாதி என்பதுடன் நிறுத்தப்படவேண்டும்.
பிராமிணனை பிடிக்கவில்லை , பிராமிண புலவர்கள் இயற்றிய இலக்கியங்கள் பிடிக்கவில்லை சரி !! ஆண்மிகம் பிடிக்கவில்லை , சமஸ்கிரதம் பிடிக்கவில்லை , இந்துமதம் பிடிக்கவில்லை இவற்றின் தாக்கம் இல்லாத இலக்கியங்களே எதுவுமே இல்லை என்பதுதான் யதார்த உண்மை. பின்எதற்க்கு இந்த செம்மொழிமாநாடு ? இன்று கடவுள் மறுப்பவர்கள் இந்து எதிர்பவர்கள் ஏழைபங்காளனான அரசியல் தலைவர்களின் வீடுகளில் உள்ள பெண்கள் தலையில் ஒருகட்டு பூவுடன் ஒரு ரூபாய் அளவில் குங்குமம் வைத்து ஊரில் உள்ள கோவில்களை சுற்றிகொண்டிரு்க்கிறார்கள். உயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்ட ஒன்றை எத்தனைகாலம்தான் மாயை என்று அவதூறு சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பது. தாயையும் சேயையும் படைத்த கடவுளாலும் பிரிக்கமுடியாது. சத்தியம் நிச்சயம் ஓர்நாள் வெல்லும்.
பெரியார் துதி பாடவா செயின்ட்தாமஸ் துதி பாடவா ஜி.யூ.போப் துதிபாடவா சோனியா துதி பாடவா ஆதிகிருஸ்துவம் துதி பாடவா லுமுரியா கண்டம் துதி பாடவா முகஸ்துதி பாடி கேட்கவா ஆண்டவா !!!!
நான்காவதாக தாய்மொழி அடையாள பற்று. ” யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கம் கானேன்” என்றான் பாரதி ஆனால் பச்சை தமிழன் என்று போலியாக திரியும் கூட்டத்தின் தலைவன் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர். எல்லாம் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தன்வீட்டு பிள்ளைகளு்க்கு ஆங்கிலபெயர் வைத்து ஆங்கிலபள்ளியில் படிக்கவைக்கிறார்கள். ஒற்றைவரி ஒளவையின் ஆத்திசூடியும் கொன்றன்வேந்தனும் வள்ளுவனின் இரட்டைவரி திருகுறளும் சொல்லியுள்ள ஒழுக்கநெறிகளை குறைத்து குறைத்து இவற்றை பாடபுத்தகங்களில் இல்லாமலே எடுத்துவிட துடிக்கின்றனர். jopOதமிழும் சமஸ்கிரதமும் தமிழர்களுக்கு தாயும் தந்தையும் ஆகும். தாயை விட சிறந்த கோவில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற எதார்தம் புரியாமல் தனி தமிழ் என்று தமிழ் உச்சரிப்பைகூட சரியாக சொல்லத் தெரியாத ஒரு கூட்டம் தமிழ் மொழியை கொன்று கொண்டு இருக்கிறார்கள். இதைவிட கொடுமை தெய்வ புலவர் திரு வள்ளுவருக்கு கிருஸ்துவ பாதரிதான் பாடம் நடத்தினார் என்ற சரடையும் மானம் ரோஷம் இல்லாமல் கேட்டுக்கொண்டு பகுத்தறிவாளிகள் மௌனம் சாதிக்கின்றனர். தமிழையும் சரியாக கற்காமல் அண்டை மாநிலங்களில் வேலைவாய்பை பெறக்கூடிய இந்திய பொது மொழியான இந்தியையும் கற்காமல் ஆங்கிலத்தையும் அரைகுறையாக கற்று ஒரு தலைமுறையை வீண் அடித்த பெருமை இந்த திராவிட புகுத்தறிவு ஜீவிகளையே சாரும்.
பல மிலேசர்களின் ஆக்ரமிப்பாலும் காலணி ஆதிக்கத்தாலும் ஜாதி தீண்டாமை போன்ற கொடிய சமூக வழக்கங்கள் ஏற்ப்பட்டதோடு இந்து மதத்தை பற்றியும் இந்து இலக்கியஙகளைப் பற்றியும் மொழியை சரியாக தெரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே பிரிவினை செய்து தாறுமாறாக சரித்திர சான்றுகளை எழுதிவைத்து சென்றுள்ளார்கள். இப்படிபட்ட ஆதாரம் இல்லா ஆதாரங்கள் தான் இன்று நாட்டில் மலிந்துகிடக்கிறது. இதை தான் திராவிட பகுத்தறிவு வியாதிகள் உண்மை என்று நம்பி தமிழர் மதம் வேறு இந்து மதம் வேறு இது ஆரிய சூழ்ச்சி என்றெல்லாம் அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்கள்..
நமது பாரதபாரம்பரிய எழில்மிகு கோவில்களின் பரிதாபநிலை epidjநினைத்தால் நெஞ்சம் பதைக்கிறது. Archeological Survey of India & States HR department துணையுடன் வெளிநாட்டிலிருந்து வந்த கிருஸ்துவ பெண் சோனியா மெய்னோ தலைமையில் நடக்கும் அட்டூழியங்கள் செல்லி மாளாது.

நமது இந்திய அரசாங்கமும் சுதந்திரத்திற்க்கு பின் பாரதத்தின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதில் ஒரு மெத்தன போக்கையே கடைபிடித்து கொண்டிருக்கிறது. பாரம்பரிய சின்னங்களான கோவில் சிலைகள் வண்ண ஓவியங்கள் புகழ்வாய்ந்த கட்டிடங்கள் என்று எதையுமே பொருட்படுத்துவதில்லை. (ASI) உள்ளவர்கள் எப்படி திட்டம்தீட்டி பொதுமக்கள் கண்ணில் மண்ணைதூவி புரன்நுதாரணம் செய்வதாக சொல்லிக்கொண்டு இடிப்பது சேதப்படத்துவது சுவடு தெரியாமல் அப்புறப்படுத்துவது போன்ற பாதக செயல்களை செய்துவருகிறார்கள் என்பதற்க்கு பல நிகழ்வுகளை குறிப்பிடலாம்.
2007 ஆம் ஆண்டுதொட்டு (ASI+Regional Endowment Board ) நமது பாரம்பரிய சின்னங்களை புதுபிப்பதாக சொல்லிக்கொண்டு கலைநயத்துடன் இருந்தவற்றை பொலிவிழக்க செய்துவிடுகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால் நன்கு அலங்கரிக்கப்பட்ட லஷ்மிகரமான மணபெண்ணிற்க்கு அமங்கலமான விதவை வேஷம்போடுவது போல்தான்.
இப்படி தமிழனின் அடையாளங்களை அழிப்பதற்கு ஆதரவுதரும் பகுத்தறிவு கூட்டம் ஒருநாள் தமிழனை நாகரிகம் இல்லாத பரதேசிகள் என்று உலகிற்க்கு அடையாளப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Series Navigationபூபேன் ஹசாரிகா –