தொலைந்த கவிதை

Spread the love

நேற்று எழுதிய
கவிதையைத் தொலைத்துவிட்டுத்
தேடிக் கொண்டிருக்கிறேன்

அது வேறு வடிவங்கள் எடுத்து
மன ஆழத்தை
வெகுவாய் ஆக்கிரமித்திருந்தது

நான் எவ்வளவு அழைத்தும்
வர மறுத்து
அங்கேயே அதன் எண்ணப்படி
சஞ்சாரமிட்டுக்கொண்டிருந்தது

மற்றெல்லாவற்றையும் தவிர்த்து
அதன் உள்ளிருப்பில் என்னை
ஒப்படைத்ததால்
ஒருநாள் வந்துவிடும்
என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்
வேறு வார்த்தைகளைத் தவிர்த்து

Series Navigationநெய்தல்-கிழவற்கு உரைத்த பத்துநான் நானாகத்தான்