நதிக்கு அணையின் மீது கோபம்..

 

பச்சைப் போர்வை உடுத்தி கம்பீரமாய்

நிற்கும் மலை ராஜனை

மற்றுமொரு போர்வையாய்

கார்வண்ண முகில்கள் ஒட்டிக் கொள்ள,

மகிழ்ந்து போன மலைராஜன் பரிசு கொடுக்கிறான்

அது தான் மழை..

 

மழை நதியாகிறது..

நதியாகிய மழைக்கு அவசரம்,

சமுத்திர ராஜனுடன் கலக்க..

 

அணை தடுக்கிறது..

என்னை தடுக்காதே என்று

நதி

அணையோடு

கோபித்துக் கொள்கிறது..

 

அணை சொல்கிறது நதியிடம்..

நதியே..

என் மீதான உன் கோபம்

நியாயமானதல்ல..

 

வெறியுடன் சமுத்திர ராஜனுடன்

கலக்க பாய்ந்து ஓடும் உன் வேகம்

விவேகமானதல்ல..

 

நீயோ பெண்மகள்.

நாணம், வெட்கம்தான் உன் கவசங்கள்..

 

 

பொறு.. அவசரப்படாதே..

உனக்கு நிறைய கடைமைகள்

காத்துக் கிடக்கின்றன..

 

வறட்சியில் பாளம் பாளமாய்

வெடித்துக் கிடக்கும் வயல்கள்

நீ வந்து பாய வேண்டும் என்று

ஏங்கிக் கிடக்கின்றன.

 

உன் பயணத்தை

பயனுள்ளதாக்கிக் கொள்.

 

மேளதாளத்துடன் உன்னை

அனுப்பி வைக்கும்

என் மீது நீ கோபம் கொள்ளாதே..

 

உன்னை வாயார வாழ்த்தி அனுப்பும்

வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்.

 

Series Navigationநான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1நானும் நீயும் பொய் சொன்னோம்..