இன்னிக்காச்சும் மருந்து வாங்கீட்டு வந்தியாடா சின்ராசு ? ஜுரத்தில் கிடந்த ஆத்தா ஈனமான குரலில், இத்தனை நேரம் மகனின் வரவுக்காகவே காத்திருந்தவளாக , மகன் வீட்டுக்குள்ளே நுழைந்து செருப்பைக் கழட்டும் சத்தம் காதில் கேட்டதும், கேட்கிறாள்.
அடச்சே….என்ன மோசமான தலஎளுத்து என்னுது…ஒரு சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து மாத்திரை வாங்கியாரக் கூட துட்டு இல்லாத சென்மம்…மானங்கெட்ட பொளப்பு பாக்கறேன்..பேரு பெத்த பேரு தாக நீலு லேதுன்னு….பேரு தான் வீட்டு புரோக்கர்.. தெருத் தெருவா அலைஞ்சு வீடு பாத்துத் தர வரைக்கும் தான் நூறு தடவை ஃபோனைப் போட்டுக் கூப்பிடுவாங்க. வீட்டுக்குள்ளாற நொளஞ்சதும்..இவன் யாருன்னு பாப்பாய்ங்க பன்னாடைங்க …! .கொஞ்சம் கூட நன்றி கெட்ட சனங்க, ஏமாத்தற சனங்க, இதுங்களுக்குச் செஞ்சு இனியும் கூலி கெடைக்கும்னு நிச்சயமில்லை..தனக்குத் தானேப் புலம்பிய சின்ராசு…..இந்த புரோக்கர் பொளப்ப தூரக் கெடாசிட்டு இனிமேட்டு……!
என்னா செய்யப்போறே…? பெரிய கேள்வி தலையில் குட்டியது..
காலில் சொம்புத் தண்ணீரை மொண்டு விட்டுக்கொண்டிருந்த சின்ராசு…பாயில் சுருண்டு கெடந்த தன் ஆத்தா பாக்கியலட்சுமியைப் பார்க்கிறான்.
என்னடா…பேச்சு மூச்சைக் காணோம்…..அப்பிடியே போய் சேருன்னு சொல்லுதியா? போறேண்டா…போறேன்…நான் போனாத்தான் தெரியும்…உனக்கும் நாதி இருக்காது. அப்போப் புரியும் இந்த ஆத்தாளின் அருமை..
அழுக்குப் பாயில் படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து விட்டாள்….மகனைத் திட்டி திட்டியே உயிரை வளர்த்துக் கொள்ளப் பழக்கிக் கொண்டவளாச்சே.
சின்ன வயசுலேர்ந்து தலையா அடிச்சுக்கிட்டேன்….கூலி வேலை செய்யுற பொம்பள வவுத்துல வந்து பொறந்துபுட்டே…பள்ளியோடம் போயி படி…நீ படிச்சாத்தேன் நாளிக்கு கஞ்சிக்கு யாரு கையையும் பார்க்க வேணாம்னு…கேட்டியா… ? படிக்கிறதத் தவுத்து தெருவுல மேயுற கூத்தாடிக்கெல்லாம் கொடி கட்டி பறக்க விட்டே….இப்பென்னாச்சு…?..
ஆத்தா…நானா…நீ வேணாம்னு நினைக்குதேன்..அதான் அந்தாளு….ஓம் புருசன்…ஓங் கூட வாளப் பிடிக்காமதேன் கரித்துண்டுல கிறிக்கிப்புட்டு வேறொரு சிறுக்கிய இளுத்துக்கினு ஓடிப் போச்சே…அப்பவே நானும் களண்டிருக்கணும் செஞ்சனா….நீயே சொல்லு செஞ்சனா…பெத்த கடைமையின்னு, ஆத்தாளாச்சேன்ன்னு இன்ன வரிக்கும் உம் மவனா நிக்கல..! எகிறிக் கொண்டு வந்தான் சின்ராசு. நீ ஒரு வாட்டியாச்சும் நான் நல்லா இருக்கணுமுன்னு.நெனச்சாத்தேன்.
ஹக்….ஹக்….ஹக்….ஹக்….சொ
செருமலோட…”உன் உதாருக்கேல்லாம் வேற ஆளப் பாரு…என்கிட்டே எகிறாதல…நான் நெனக்காமதேன் இம்புட்டு வளந்து நிக்குறியாக்கும்”..வெட்டிப் பய உனக்கே வாயி பொடனி வரிக்கும் நீளுதே….! உன்ன வளத்து ஆளாக்கின எனக்கு எம்புட்டு இருக்கும் ?
தோபாரு..ஆத்தா .இன்னொரு வாட்டி இப்பிடில்லாம் சொன்னீன்னா, பொறவு இந்த வீட்டுப் பக்கமே தலையைக் காட்ட மாட்டேன் ஆமா….சொல்லிட்டேன்..
அடப் போடா….சீமான்…கை நிறையக் கொண்டுட்டு வந்து கொட்டுற …வைக்க எடம் இல்லாம நான் தவிக்கிறேன் பாரு…..நீ வரலையின்னு நான் மூக்கைச் சீந்தவா? எக்கேடோ… கெட்டுத் தொலை..மருந்த வாங்கியாந்தியாடான்னு கேட்டா…அதுக்கு இம்புட்டு வியாக்கியானமா? வெளங்காத பய….நீ வரதும் ஒண்ணுதேன்…தொலையிறதும் ஒண்ணுதேன்..! அனாதப் பொணத்துக்க்கும் நாலு பேருதேன்..போ..!
முனகியபடியே பாயில் படுத்துக் கொள்கிறாள்..படுத்தும் சும்மா இருக்காமல்….”நான் புள்ளேன்னு….நெனச்சு…இவனுக்
த்தா….நிறுத்து உன் பிலாக்கணத்த….இப்ப இன்னா இங்கன எளவா விழுந்து கெடக்கு.?..நானும் நாயா அலைஞ்சு தான வீடு பார்த்து, பிடிச்சுக் கொடுத்து பிரோக்கர் கமிஷன் வாங்கியாறேன்.இப்போ ஆடி மாசம் என் பிசினெஸ் கொஞ்சம் டல்லு…அதும் போன மாசம் வீடு பிடிச்சிக் கொடுத்த கமிசன் பணம் முள்ளங்கிப் பத்தையா பத்தாயிரம் தரோணும்…இதோ தரேன்..இப்பப் தாரேன் ன்னு சொல்லி சொல்லியே என் செருப்பைத் தேச்சுப்புட்டான்..நானும் நெதம் நாயா அலைஞ்சு தான் கேக்குறேன்….! இன்னும் ஒத்தப் பைசா தரல. அது கண்டிப்பா கெடைக்கும். அம்புட்டையும் கொண்டாந்து ஒன்கிட்ட தாரேன்..போதுமா?
அம்புட்டுப் பெரிய ஊடு…நான் சொல்லும்போது வாயெல்லாம் பல்லா வந்து நின்னாங்க…அந்த ஐயிரும்,மாமியும்.!..பேசி முடிச்சி கொடுத்து குடி வந்து மூணு மாசம் ஆவப் போவுது….பிறவு தாரேன் கொஞ்சம் பொறுன்னு சொல்லிப்புட்டு,…. இப்போ கேட்டா…நீ என்னா….எனக்குக் கடனாக் கொடுத்தியா ?ன்னு வாய் கூசாமே அந்த மாமி கேட்குறா…கேவலம்…ஒரு நூறு ரூபாத் தாள் கூட கையில கொடுக்காமே ஏமாத்திருச்சுங்க,.இவிங்கல்லாம் பெரிய மனுசனுங்க. இத்தனைக்கும் பெரிய பணக்காரங்கன்னு பேரு,
நா என்ன அதுங்க கிட்ட என் மானத்தை உட்டு பிச்சையாக் கேக்க முடியும்..உதார் உட்டா…ஆனதைப் பாருங்குது, பெருசு..!.
…………………..
என்னாங்கரே, இப்போ நீ? நான் இம்புட்டு சொல்லுறேன்…நீ வாயத் தெறந்து பதில் சொல்லு….!
இம்புட்டுப் பெரிய உலகத்துல ஒனக்குன்னு ஒரு சின்ன வேலை கூடவா கெடைக்க மாட்டேங்குது..சின்ராசு…? புரோக்கராம்…புரோக்கர்….! உழைச்சு பாருடா….காசு கனக்கும்..கையில .தங்கும்..! சொல்லிக் கொண்டே குவளைத் தண்ணீரை எடுத்து மடக் மடக் கென்று குடித்தவள் மறுபடியும் பாயில் சுருண்டு கொண்டாள்.
இதைப் பார்த்ததும் ….ஏனோ சின்ராசுக்கு நம்ம அம்மாவின் இந்த நிலைக்கு தானே தான் காரணம்..முதலில் ஒரு வேலையைத் தேடு என்று மனசாட்சி நெஞ்சில் அறைந்து சொன்னது போலிருந்தது.அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து அவனை உசுப்பியது.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் சின்ராசு சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.
கால்கள் தானாக ,அந்த ஊரின் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு சென்று நின்றது. .அங்கே “காலணிகளை இங்கே வைக்கவும்..” அந்தப் பலகை அவனைத் தட்டி எழுப்பியது. “கேளுடா சின்ராசு ” என்றது.
ஏதோ லாட்டரி அடித்தது போல் உணர்ந்தான் சின்ராசு…முதல் முறையாக அந்தக் கோவிலின் கோபுரத்தைத் கையெடுத்து கும்பிட்டு…தொளிலக் கத்துக் குடுண்ணே….பிறகு பாரு.. பாட்டா ஷோரூம் ஒண்ணு வெச்சிபுடலாம் …என்று சந்தோஷமாக…சொல்கிறான். ஒரு விதத்தில் ஆசை தான் ஆளை உயர்த்தும்.
கதவைத் திறந்த நடராஜன்…”வாப்பா…சின்ராசு..
ம்ம்…ஆமாங்கய்யா…..வீடு நல்லா இருக்கா….எந்தப் பிரச்சனையும் இல்லல….தண்ணி நல்லா வருதா?…அதோட எனக்குத் தர வேண்டிய கமிஷன் பணம் இன்னும் வரலை….அத்தக் கொடுத்தீங்கன்னா…..சீக்காளி ஆத்தாளுக்கு மருந்து வாங்கோணம்..பவ்யமாகக் கேட்கிறான் சின்ராசு.
ஒ…அந்தக் கமிஷனா? இரு வரேன் என்பதற்குள்…!
ஏன்னா…தோ ….பாருங்கோ……உங்களுக்கு போன் வந்துருக்கு…ஆஃபீஸ்காரா யாரோ…உங்ககிட்டப் பேசணுமாம்…முக்கியமா….என்று கோகிலா கைபேசியைத் தூக்கி காண்பித்து, அழைக்கிறாள்.
தோ..இருப்பா…என்னன்னு பேசிட்டு வரேன்….என்று வேஷ்டியை..காலால் லேசாக மேலே உந்தித் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டே உள்ளே போகிறார் நடராஜன்.
ஐந்து நிமிஷத்தில் திரும்ப வந்து…ம்ம்..இந்தா..அம்மாவுக்
என்னங்க இது..வெறும் அஞ்சு நூறு தாரீங்க …, ஐயா..இது ..ரொம்ப அநியாயம்….இதெல்லாம் பேசித் தானே…என்று இழுக்க.
இதுவே ரொம்ப ஜாஸ்தி.ன்னு மாமி சொல்றா…ஏதோ நானும் கேட்டேன். நீயும் சொன்னே. மேற்கொண்டு என்ன…? அட்வான்ஸ் தான் குறைச்சலா? இல்லை வாடகை தான் கம்மியா? நீ வீட்டுக் காரன்ட்ட போயி என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ…இனிமேல் என்னைத் தொல்லை பண்ணாதே. மாமி கோவிலுக்குப் போகணுங்கறா…நேரமாறது எங்களுக்கு..சொல்லிக் கொண்டே போற போக்கில் கதவை லேசாக சார்த்தித் தள்ளிவிட்டபடியே.திரும்பி நடக்கிறார்
தூரத்தில் மாமி..தன் பட்டுப் புடவையால் மூக்குத்தியின் வைரத்தை துடைத்துக் கொண்டு…அப்படியே காதில் டாலடிக்கும்வைரக் கம்மலையும் துடைக்கும் பணியில் இறங்க…அவளின் கண்கள் சின்ராசு போயிட்டானா…?.என்பது போல் எட்டிப் பார்க்கிறது..
நிலைப்படியில் நின்றிருந்த சின்ராசு, அய்யா கொடுத்திருப்பாங்க…அந்தம்மா தான்…ஈறு வந்திருக்கு…பேனு வந்திருக்குன்னு போனைக் காட்டி சும்மானாச்சுக்கும் கூப்பிட்டு…கெடுத்துச்சு .ஏமாத்தறதுக்கு இப்படி எல்லாம் கூட வளி கண்டு பிடிச்சு வெச்சுருக்கு…பாரு..! மாமி சாமர்த்தியமான மாமி..எத்தனை ஏழைங்க வவுத்துல அடிச்சுதோ….இப்போ என் வவுறு எரியுது..இந்த எரிச்சலுக்கு பதில் சொல்லித் தான ஆவோணம்…இனி இங்கன நின்னு ஒரு பிரயோசனமும் இல்லை என்று வாசற்படி இறங்கி…மருந்துக் கடையை நோக்கி போகிறான்.
போகும்போது…டாக்டர் சீட்டு இருக்கா என்று சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொள்ள, சீட்டு வியர்வை பட்டு நைந்து நாலாக மடிந்து பத்திரமாக அவனது பாக்கெட்டில் இருந்தது., ஐயர் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டையும் சேர்த்து உள்ளே செருகிக் கொண்டு..பரவால்ல.இப்ப ஆத்தாளோட .மருந்து பிரச்சன தீந்துச்சு…! என்று நெஞ்சைத் தட்டிக் கொள்கிறான்.
நடக்கிறான்……நடக்கிறான்….
“அண்ணே……சின்ராசண்ணே…நம்ப இளைய தளபதி தீபாவளி புது ரிலீசு “துப்பாக்கி” க்கு புதுசா ஒரு ….கட் அவுட் நிக்க வெக்கிறோம் அதுக்கு ஆயிரத்தி எட்டு துப்பாக்கி வெச்சு மாலை ஒண்ணு கட்டிப் போடப் போறோம்….அதுக்கு கட்ட ஆள் கை குறையுது…கை குடுக்கிறதில்லையா?….வாண்ணே..
இதே…மற்ற நேரமா இருந்திருந்தால் கை வேலையை அப்படியே போட்டபடி……அட..அப்பிடியாடா கோவிந்து .நம்ம இளைய தளபதிக்கா …நூறு துப்பாக்கியால மாலையா ? என்று வாயப் பிளந்தபடிக்கி …ஓட்டமா…. ஓடியிருப்பான்…மாலை கட்ட.
ஆனால்…இப்போ!…”போடா…டேய்.
காதருகில் ஆத்தாவின் குரல் “இப்பத் தாண்டா நீ என் மவன்..சபாசு சின்ராசு .” அசரீரியாகக் கேட்டது.
திடுக்கிட்டு ஓட்டமும் நடையுமாக மருந்துக் கடையில் மருந்தை வாங்கிக் கொண்டு அப்படியே கிருஷ்ணபவனில் இட்டிலி பொட்டலமும் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி விரைகிறான் சின்ராசு….எங்கிருந்தோ ஒரு பாசம் வந்து அவனைக் கவ்விக் கொண்டது.
ஆத்தா…ஆத்தா ..இந்தா, எந்திரி…உனக்கு மருந்து வாங்கியாந்துட்டேன்….இந்தா இந்த இட்டிலிய தின்னுப்புட்டு மாத்திரைய சாப்பிடு..சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைகிறான்.
அட…சின்ராசு….என் மவனே…வந்தியாடா என் ராசா…நீ எப்பிடியும் வருவேன்னு நல்லாத் தெரியும்….என்று சொல்லிக்கொண்டே எழுந்தவள்….நா
ஏன் ஆத்தா….நீ ஒண்ணு…நீ கடுமையா சொன்னதாலத் தான்…எனக்கு..புத்தி வந்துச்சு,,, அத்த விடுத்தா…இன்னிலேர்ந்து கோயில் வாசல்ல செருப்பப் பார்த்துக்கற உத்தியோகம்…..போகட்டா….? உன்கிட்ட சொல்லிப்புட்டு இன்னிலேர்ந்து வேலக்கிப் போறேன். அனேகமா சொந்தமாத்தேன்….இது..! சொல்லும்போதே அவனுக்குள் ஒரு பெருமை.
மவராசனா போயிட்டு வா சின்ராசு…அதுங்கூடப் புண்ணியந்தேன்..! நெதம் கோயில் வாசல்ல கெடக்க புண்ணியம் பண்ணியிருக்கோணம். உனக்கு இனிமேட்டு நல்ல காலம்தேன்…என்று மனசார அவனை வாழ்த்துகிறாள் அவள்.
சின்ராசு அவனது ஆத்தாளின் போக்கு மாறியிருப்பதைப் பார்த்து வியந்தபடி….அடப் பார்ரா ..சினிமாவுல தான் இப்படி காமிப்பாய்ங்க, நம்மூட்லயும் நடக்குதே..எல்லாம் என் நல்ல நேரம் தான்.
சந்தோஷமா….குளிச்சு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி கோயில் வாசலில் போய் கவுன்டர் பக்கத்தில் டோக்கனை எண்ணிக் கொண்டு நிற்கிறான்.
யார் யாரோ வருகிறார்கள்…..குனித்து நிமிர்ந்து செருப்பை எடுத்து வைத்து டோக்கன் கொடுத்து மும்முரமாக இருந்தவனை….என்னப்பா…சின்ரா
நடராசன் ஐயரும்…மாமியும்….மனதில் நிறைந்த அருவெறுப்பு முகத்தில் மின்னலென ஓட….!
ஆமாஞ்சாமி…..யாரும் ஏமாத்த முடியாதுல்ல…என்று வார்த்தை சாட்டையை வீசி விட்டு..அங்க பாருங்க..என்று சைகை காமிக்கிறான்.
பதிலே சொல்லாமல் செருப்பைக் கழட்டி போட்டுவிட்டு “எல்லாம் நேரம்..” என்றபடி சென்றவர்களின் செருப்பை எடுத்து ஸ்டாண்டில் வைத்தவனின் மனசு…நினைத்தது. “இறைவன் ஒரு வாசலை மூடினால் ஒரு ஜன்னலைத் திறக்கிறான்” இவர் பத்தாயிரத்தை ஏமாற்றினால் என்ன…கடவுள் நிரந்தரமா ஒரு வருமானத்தை என் உழைப்புக்கு அள்ளிக் கொடுத்திருக்கானே….எண்ணியபடி
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…..வெறும் ரெண்டு ரூபா கொடுங்க போதும்.,..என்றதும்…!
இந்தத் திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…இது மாமி.
கடைக்கு வெளியே வந்து நின்ற சின்ராசுவின் காலில் ஏதோ நெருட, கீழே பார்த்தவனுக்கு பகீரென்றது.!..பள பள வென்று வைரங்கள் மின்னி டாலடித்துக் கொண்டிருந்தது.. அது ஒரு .ஒத்தைக் கம்மல்….!
அதைக் கையில் எடுத்ததும் புரிந்து போனது…..”அடடா…இது அந்த மாமியோட வைரக் கம்மல் போல் இருக்குதே..” கீழே கழண்டு விழுந்துடுச்சா? அடப் பாவமே…..இது தங்கமா…? வைரமா? கண்ணப் பறிக்குதே ….!அவங்கதா..இல்லை வேற யாருதாச்சுமா…? யோசனையோடு கடையைக் கட்டிவிட்டு ஒரு சிறிய துண்டுக் காகிதத்தில் கம்மலை மடித்து சட்டை பையில் போட்டு பத்திரப் படுத்திக் கொண்டான்.
அது வேற ஒண்ணுமில்லடீ…ஒரு ஏழையின் உழைப்பில் கமிஷன் தராமல் ரொம்ப புத்திசாலி மாதிரி ஐடியா சொல்லி அவன் வயித்தில் அடிச்சோமில்லையா…? அதான் இப்போ கைமேல் பலன்…..! கலி காலமடி…! எதுக்கும் காத்துண்ட்ருக்க வேண்டாம்.கார்த்தால பண்ணினா சாயந்தரமே….பலன் .கெடச்சுடும்
போதும்…போதும்.நிறுத்துங்கோ ….நேரங்காலம் தெரியாமல் எதுக்கும்…. எதுக்கும் முடிச்சுப் போடறேள்…? நான் இங்க தவிக்கிறேன்….உங்களுக்கு நக்கலும் நையாண்டியும் எங்கேர்ந்து தான் வருமோ? கொஞ்சமாவது வருத்தம் இருக்கா..? தொலஞ்சது என்னோட தோடு தானே..? எப்படி வரும்…வருத்தம்…!
வாசலில் சின்ராசு. அவன் பார்வை நேராக மாமியின் காதைப் பார்த்தது. அங்கே அவளது இருண்ட மனம் தெரிந்தது.
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36
- க. நா. சுவும் நானும்(2)
- சுரேஷின் ‘வவ்வால் பசங்க’
- எங்கள் ஊர்
- ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’
- ரகசியத்தின் நாக்குகள்!!!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2
- தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்
- நினைப்பு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.
- எனது குடும்பம்
- ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்
- கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி
- குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்
- நன்னயம்
- நம்பிக்கை ஒளி! (7)
- அக்னிப்பிரவேசம் -10
- வதம்
- கவிதைகள்
- மணலும், நுரையும்! (4)
- ஒரு கண்ணீர் அஞ்சலி!
- ரசமோ ரசம்
- மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்
- கையெழுத்து
- வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்
- வெளி ரங்கராஜன் ஊழிக் கூத்து நூல் விமர்சனக் கூட்டம் – நவம்பர் 25, 2012
- “நீள நாக்கு…!”
அருமையான கதை
அன்பின் தேமொழி,,
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ
என்னமோ தெரியல.. இப்பல்லாம் எதைப் படிச்சாலும், முன்னமே படிச்ச மாதிரு இருக்கு.. டாக்டரைப் பாக்கணும்..
டாக்டரைப் பார்த்தாலும், அவர் சொல்வதும் ஏற்கனவே கேட்டதைப் போலவேதான் இருக்கும்
முகம் மலர் சிரிக்க வைத்தீர்கள், சிவகாமி….
History repeats. All the stories have appeared and repeated in some form or other.
We are re-born or life recycles, Day and night repeat day after day. All the annual seasons [Winter, Spring, Summer and Autumn] repeat.
S. Jayabarathan
அபத்தமான இடுகை டாக்டர் ஜெயபரதன். பருவகாலங்கள் திரும்ப வருவது, இயற்கை தன் படைப்பைத் தானே மீண்டும் எழுதிக்கொள்வது. ஏற்கனவே வந்த கதைகளைத் தன் மொழியில் மாற்றி எழுதுவதோடு அதை ஒப்பீடு செய்யக்கூடாது. உங்கள் ஆராய்ச்சிக் கட்டுரையை கொஞ்ச காலம் சென்று யாராவது மொழியில் லேசான மாற்றம் செய்து எழுதிக் கொடுத்தால் அதை உங்களின் பார்வையில் என்னவென்று சொல்வீர்கள்? அதைத்தான் இளங்கோ நாசுக்காகச் சொல்லியிருக்கிறார்.
அன்பின் திரு.இளங்கோ அவர்களுக்கும் திருமதி.ஹரிணி அவர்களுக்கும்..
வணக்கங்கள்.
நீங்கள் எழுதிய பின்னூட்டங்களை இன்று தான் படித்தேன் .
ஹரிணி நீங்கள் சொல்வதைப் போல இன்னொருவரின் கதையை மாற்றம் செய்து எழுதி அனுப்பியிருந்தால்…அதைக் கதைத் திருட்டு என்று தான் நானும் சொல்வேன். இதில் மாற்றுக் கருத்து என்னிடம் இல்லை.
இளங்கோ அவர்கள் நாசூக்காகக் சொல்லியதைப் படித்ததும்…
தோன்றியது…”இவரிடம் ஆதாரம் கேட்டால் இவரால் கொடுக்க இயலாது….” அப்படி இருக்கையில் எதை வைத்து இப்படி எழுதி இருக்கிறார் என்று.
அதற்கும் ஒரு படி மேலே சென்று நீங்கள் எழுதியதைப் படித்ததும் பதில் எழுதத் தோன்றியது.
இந்தக் கதை முழுக்க முழுக்க எனது சொந்தக் கற்பனையில் எழுதியது தான். இதற்க்கு முன்பு வைர நெஞ்சம் என்ற பெயரில் வல்லமைக்கு கதை போட்டிக்கு சில மாதங்கள் முன்பு எழுதி அனுப்பியிருந்தேன். திரு.இளங்கோ அவர்கள் வல்லமையில் ஒரு சப் எடிட்டர் . அதனால் படித்திருக்க வாய்ப்பு உண்டு மேலும் அந்தக் கதை போட்டியில் தேர்ந்தெடுக்கப் படவில்லை . மேலும் சில திருத்தங்கள் செய்து எழுதி தலைப்பை மாற்றி நன்னயம் என்று வைத்து திண்ணைக்கு அனுப்பினேன்.
எனது கதையை நானே மாற்றி., திருத்தி, சேர்த்து, கோர்த்து, தலைப்பை மாற்றி வைக்கும் சுதந்திரம் எனக்கு உண்டு.
இது எனக்கும் என் எழுத்துக்குமான உறவு. மனதுக்கு நிறைவு வரும் வரை எழுதலாம் .
இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. நிரூபிக்க முடியுமா?
யாரோ எழுதிய கதையிலிருந்து காலைக் கையாய் மாற்றி எழுதும் ……………………. என்னிடம் இல்லை.
எழுதுவது என்பது ஒரு ஆத்மார்த்தமான விஷயம்.
அது தானாக கற்பனையில் உருவாகி கருவாகி கதையாகி வருவது.
எத்தனையோ இடையூறுகளின் நடுவில் எழுதும்
சொந்தப் படைப்புக்கு வரும் இது போன்ற பின்னூட்டங்களைப் படிக்கும் போது தான் மனிதர்களைப் புரிகிறது.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
நன்றி ஜெயஸ்ரீ, நீண்ட நெடிய விளக்கத்துக்கு,
தங்கள் கதை வல்லமை மின்னிதழில் வெளிவந்ததை யார் வேண்டுமானாலும் படித்திருக்கலாம், இன்றும் படிக்கலாம். அதுவும் இரு இணையப் பத்திரிக்கை என்பதால் இன்றும் பொது வெளியில்தான் உள்ளது. நான் வல்லமையில் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கும் அதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
தாங்கள் பிறர் படைப்பை உங்கள் படைப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. அப்படியொரு புரிதலை என் பின்னூட்டம் ஏற்படுத்தியிருந்தால் அதைக் களையவே, இந்த விளக்கம்.
வல்லமையில் இந்தக் கதை வெளிவந்த தகவலையும், ஏற்கனவே வெளிவந்த சுட்டியையும் கொடுத்து விட்டால், வாசகர் உலகம் இன்னும் பலன் பெறுமல்லவா?
இளங்கோ
Respected Jayashree Madam,
I intended to record my comments only on the views of Dr. Jayabarathan. I did not try to post my views on your story. Dr. Jayabarathan has stated in his comments on the views of Mr.Ilango that ” all the stories have appeared and repeated in some form or other.And he has likened this to the changing seasons which reappear again. That only prompted me to differentiate the two objects he has taken for comparison. I did not have any intention whatsoever to denigrate your originality in writing stories. I am sure that your contributions regularly appearing in Thinnai will speak volumes of your ability. So I would like to clarify that whatever I have posted is not to cast aspersions on anybody. Thank You for your gentle rebuttal. — Harini
Harini,
Thanks for awarding me the title Doctor. But I am not a Ph.D. Doctor.
I do not understand what you did mean upon my examples. All my science writings are not originals. I have given my sources. Any one can add or remove mine or other scientific facts, as and when they change.
S. Jayabarathan
இந்த கீட்ஸ், கம்பன், பாரதி, கல்கி, செக்ஸ்பியர், தாகூர், கண்ணதாசன், தாஸ்கோவஸ்கி, லியோ டால்ஸ்டாய் – இவர்கள் எல்லாம் இணைய உலகில் இணைய பத்திரிக்கையில் எழுதியிருந்தால்…. சும்மா கிழி கிழின்னு கிழிக்கப்பட்டிருபானுக….