நம்பிக்கை

ப.பார்த்தசாரதி.

துரு பிடித்த
ஜாமெட்ரி பாக்ஸ்
ஒன்றை பல்லால்
கடித்து திறந்த
குழந்தை தினமும்
அரிசி போட்டாள்
என்றாவது ஒரு நாள்
மயிலிறகிலிருந்து மயில்
வருமென நம்பிக்கையில்.

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்பூபேன் ஹசாரிகா –