This entry is part 11 of 16 in the series 6 மே 2018

 

என் முன்னால் கிடக்கும் பரப்பு
சிறியதாகவே இருக்கிறது

பின்னால் திரும்பிப் பார்க்கையில்
நான் நடந்து வந்த பாதையில்
முட்கள் அப்படியே இருக்கின்றன
என் அழுகையொலி
எங்கோ
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது

என்னைப் பிரிந்து போனவர்களின்
காலடிச் சுவடுகள்
தெளிவாகத் தெரிகின்றன

என் இழப்புகள்
இன்னும் மக்கிப்போகவில்லை

என் முன்னாலுள்ள
ஒளி எல்லைக்கு அப்பால்
இருண்மையின்
இழைப்பின்னல்கள்
வலுவாக இருக்குமோ ?

— அதை மறந்து என் கோப்பையில்
நம்பிக்கையை மட்டும்
நிரப்பிக்கொண்டிருக்கிறேன் !

Series Navigationஅந்திசமையலும் பெண்களும்