நம்மாழ்வார் காட்டும் பரமபத தரிசனம்

       

                               இன்று பல இடங்களுக்கும் சென்றுவர பலவகையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சந்திரமண்டலம்

சென்றுவரக்கூட போக்குவரத்து வசதி வந்துவிட்டது! ககன்யான் செல்லப் பயணிகளுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார் கள்! இந்நிலையில் உலகவாழ்வை நீத்தபின் பரமபதம் சென்று அனுபவிக்கக்கூடிய எம்பெருமானின் வடிவழகையும் மேன்மை யையும்  விமானம், பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமல் தரி சனம் செய்ய வழிகாட்டியிருக்கிறார் நம்மாழ்வார். அவர் கூறு வதைக் கேட்போம் அவர் காட்டும் காட்சியைத் தரிசனம் செய் வோம் வாருங்கள்.

பாம்பணையில் தரிசனம்

      பெருமான், பாற்கடல் அலைமேலே பம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறான். பச்சைவண்ணனான

அவன் பள்ளி கொண்டிருப்பது, மரகதமலை ஒன்று கடலின் மேல் சயனித்திருப்பதுபோல் காட்சியளிக்கிறது.பொன்னாடையில் மிளி ரும் பெருமான் திருமுடி, மலை சூரியனைத் தலையில் சூடியிருக் கிறதோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. அழகிய கண்களும் திருவாயும் சிவந்து விளங்க மேனியின் பசுமை நிறம் மேலோங்கி விளங்குகிறது ஐயனின் சயன கோலத்தை சிவன் பிரமன் முதலிய முப்பத்துமுக்கோடி தேவர்களும் கைதொழுத வண்ணம் நிற்கிறார் கள். மூவுலகங்களையும் அளந்த சர்வேச்வரனே என்று தேவர் களும் தன்னை வணங்கும்படி தனிப்பெரும் நாயகனாக விளங்கு கிறான்

           “ செக்கர் மாமுகிலுடுத்து, மிக்க செஞ்சுடர்ப்

பரிதிசூடி அஞ்சுடர் மதியம் பூண்டு

பலசுடர் புனைந்து பவளச்செவ்வாய்

திகழ்பசுஞ்சோதி மரகதக் குன்றம்

கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல்

பீதக ஆடைமுடி பூண் முதலா

மேதகு பல்கலன் அணிந்து சோதி

வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்

பச்சைமேனி மிகப் பகைப்ப

அரவின் அமளியேறி

எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து

சிவன், அயன், இந்திரன், இவர் முதல் அனைத்தோர்

தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த

தாமரை உந்தித் தனிப்பெரு நாயக!

என்று பெருமானின் மேனிஅழகையும் சயனக்கோலத்தையும் காட்டுகிறார்’

இச்சுவை, அச்சுவை

  தனிப்பெரும் நாயகனாக விளங்கும் பெருமான் ஊழிக்காலத்தில் தந்னந்தனியனாக நின்று உலகங்களை விழுங் கித் தன் வயிற்றில் வைத்துக் காத்தான்.அதனால் அவனுடைய திருவடிகளைத் தம் தலையில் சூடுவதையே ஞானிகள் விரும்பு கிறார்கள். பகவத் பக்தியில் ஆழ்ந்து இன்பமடையாமல் உலக வாழ்க்கையில் ஈடுபட்டு அழியும் பொருளைத் தேடுவோர் தேடட் டும். பக்தியில் திளைக்கும் ஞானிகள் அழியும் அற்ப சுகபோகங் களில் மனதாலும் ஈடுபடமாட்டார்கள். அவர்களுடைய குறிக் கோளெல்லாம் பகவத் பக்தியில் இன்பம் அடைவதேயாகும். இதையே

     ”இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்”     

என்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும்.

               உலகுபடைத்(து) உண்ட எந்தை அறைகழல்

  சுடர்ப்பூந்தாமரை சூடுதற்கு அவாவு

  ஆருயிர் உருகு உக்க நேரிய காதல்

  அன்பில் இன்பீன் தேறல் அமுத

  வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்டு

  அசைவோர் அசைக, நல்வீடு பெறினும்

  கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

பிரமன், சிவன் இவர்களுக்குள் அந்தர் யாமியாகவும், பரம் பொருளாகவும் விளங்கும் இப்பெருமான் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் மந்தரமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தான். அப்பெருமானின் அடியார் களுக்கு நாம் எல்லாக் காலங்களிலும் தொண்டு செய்வோமோ?

மெய்பெற நடாய தெய்வம் மூவரில்

முதல்வனாகி சுடர் விளங்கு அகலத்து

வரை புரை திரை பொர வருவரை வருவர

உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர

அரகடல் தடவரை சுழற்றிய தனிமாத்

தெய்வத்(து) அடியவர்க்(கு) இனி நாம் ஆளாகவே

இசையுங்கொல் ஊழிதோர் ஊழி ஓவாதே?

என்று வினவுகிறார். பெருமான் எப்படி மூவுலகங்களையும் படைத் தான் என்பதை விவரிக்கிறார்.

  மகாப் பிரளய காலத்தில் எம்பெரு மான் தான் ஒருவனாகவே நின்று உலகைப் படைக்க எண்ணி னான். தன் உந்தித் தடத்தில் பிரமனை உண்டாக்கி, அவன் மூல மாகச் சிவன் மற்றும் பல தேவர்களைப் படைத்தான், இப்படியே மூன்று உலகங்களையும் உருவாக்கினான். உலகைத் தோற்று வித்த பெருமானின் திருவடிகளைப்பற்றி இடைவிடாமல் வணங்கு வோம்,

யாவகை உலகமும் யாவரும் இல்லா

மேல்வரும் பெரும் பாழ்க் காலத்து இரும்பொருட்

கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதான்

ஆகித் தெய்வநான்முகன் கொழுமுளை

ஈன்று முக்கண் ஈசனொடு தேவுபல

நுதலி மூவுலகம் விளைத்த உந்தி

மாயக் கடவுள் மாமுதலடியே

மாமுதலடியே என்று சொன்னதுமே ஆழ்வாருக்கு அவ்வடிகளின் மகிமையைப் பாடவேண்டும் என்று தோன்றியது போலும். எனவே

பெருமானே! உன் திருவடிகளில் ஒரு அடியால் அளந்தபோது பூமி முழுவதையும் அதனுள் அடக்கி விட்டாய். இரண்டாம் அடியால் வானத்தை அளந்தபோது பிரம லோகம் வரை வந்த அடியைக் கண்டு பிரமலோகம் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தது. உடனே தேவர்கள் ஆயிரம் சூரியர்கள் ஒன்று சேர்ந்தது போல் ஒளிமயமாக விளங்கிய உன்னுடைய திரு வடியை வணங்கி வழிபட்டனர். உன் ஆயிரம் தோள்களும் கற்பகச் சோலைகள் போல் காட்சியளித்தன! இப்படி நெடியோனாக விளங்கிய உனக்கு எந்த உலகம் தான் அடிமைப்படாது? எல்லா உலகங்களும் மீளா அடிமையாய் உனக்கே ஆட்பட்டது என்ன வியப்பு?

மாமுதல் அடிப்போதொன்று கவிழ்த்(து) அலர்த்தி

மண்முழுதும் அகப்படுத்தி ஒண்சுடர் அடிப்போது

ஒன்று விண் செலீஇ நான்முகப் புத்தேள்

நாடு வியந்துவப்ப வானவர் முறை முறை

வழிபட நெறீஇ தாமரைக்காடு

மலர்க்கண்ணோடு கனிவாயுடையது

மாய், இருஞாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன

கற்பகக்காவு பற்பல அன்ன

முடி தோள் ஆயிரம் தழைத்த

நெடியோய்க்(கு) அல்லதும் அடியதே உலகே?

என்று வியந்து நிற்கிறார்.

இவ்வளவு பெருமையுடைய எம் பெரு மான் இருக்க, வீணே பலிகவர் சிறு தெய்வங்கள்பால் சென்று மிக்க அன்பு பூணும் மனிதர்களுக்காக வருந்துகிறார் ஆழ்வார்.

ஒரு உதாரணத்தின் மூலம் இதை விளக்குகிறார். பெற்ற தாயை 

வணங்காமல் புறக்கணித்துவிட்டு ஒரு மணைப்பலகையை நீராட்டிக் கொண்டாடினால் அது எப்படி நகைப்புக்கிடமாகுமோ அது போல பெருமையுடைய எம்பெருமானைப் போற்றி வழி படாமல் சிறு தெய்வங்களை வழிபடும் அறியாமையை எள்ளி நகையாடுகிறார். மேலும் இம்மக்கள் ஜீவ இம்சை செய்வதையும் கண்டிக்கிறார். இம்மக்கள் இப்படி அறிவழிந்து போகிறார்களே என்று மனம் நொந்துபோகிறார், இதுதான் உலக இயற்கையோ என்று வியக்கிறார்.

ஓ! ஓ! உலகினதியல்பே

ஈன்றோளிருக்க மணை நீராட்டி, படைத்து, இடந்து,

உண்டு, உமிழ்ந்து, அளந்து, தேர்ந்து உலகளிக்கும்

முதற் பெருங்கடவுள் நிற்ப, புடைப்பல

தானறி தெய்வம் பேணுதல் தனாது

புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி

கொல்வன முதலா அல்லன முயலும்

             இனைய செய்கை; இன்பு துன்பனி

தொன்மா மாயப்பிறவியுள் நீங்கா

பன்மா மாயத்(து) அழுந்துமாம் நளிர்ந்தே

என்று உலக இயல்பை எண்ணி மனம் நொந்து பேசுகிறார்.

    உலகமக்கள் எப்படி எப்படியோ

இருந்த போதிலும் தான் திருமாலுக்கு ஆட்பட்டதை எண்ணி மகிழ்ந்த ஆழ்வார், திருமாலே மேலான தெய்வம் என்று அறுதி

யிட்டுக் கூறுகிறார். பிரமன், சிவன், இந்திரன் மட்டுமல்லாமல்

மூவுலகங்களுமே அவனுக்குட்பட்டவைதாம். பஞ்ச பூதங்களான நிலம் , நீர், தீ, காற்று,, வானம் இபற்றோடு சூரிய சந்திரர்களையும்

பெருமான் வயிற்றில் அடக்கியபின் ஊழிக்காலத்தில் ஓர் சிறிய ஆலிலைமேல் பாலனாய்க்கண் வளர்ந்தான். என்ன விந்தை! இம் மாயப்பிரானையன்றி வேறு எவரையும் வணங்குவோமோ? [ஒருக்காலும் இல்லை]

    நளிர்மதிச்சடையனும் நான்முகக் கடவுளும் 

    தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா

    யாவகை உலகமும் யாவரும் அகப்பட

    நில, நீர், தீ, கால், சுடர், இருவிசும்பும்

    மண் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க

    ஒருபொருள் புறப்பாடின்றி முழுவதும்

    அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்

    பெருமா மாயனை அல்லது

    ஒருமா தெய்வம் மற்றுடையமே யாமே?

திருவாசிரியம் என்னும் பிரபந்தத்தில் நம்மாழ்வார்பரமபத தரிசனம் பற்றியும் திருமாலுடைய பரத்து வத்தையும் விவரிக்கிறார். ஸ்ரீமன் நாராயணனையன்றி வேறு எந்தத் தெய்வத்தையும் வணங்காத அவர் மன உறுதியையும் காணலாம்.

========================================================================

Series Navigationவாங்க, ராணியம்மா!தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15