நவீன செப்பேடு

குணா


கேட்டு பார்த்ததுண்டு

அகழ்ந்ததையும் கேட்டதுண்டு

மூதாதோர் எழுதியதை

பானையின் சில்லுகளை

செங்கற் செதிலுகளை

தாழி கூட்டங்களை

தடுமாற்ற எழுத்துகளை

சிக்கி முக்கி தேடி நின்றார்

பத்திரமாய் மூலம் கண்டார்

அற்புதங்கள் சொல்லி நின்றார்

கதைகள் பலவும் சொன்னார்

அடுத்து வந்தவரோ

காகிதக் குவியல்களை

காணாமல் செய்திட்டார்

அத்தனையும் மரமென்றார்

நானெழுத தலைப்பட்டேன்

பதிப்பதற்கு கல்லும் இல்லை

எழுதி வைக்க ஓலையில்லை

மரம் தந்த காகிதமில்லை

சில்லுப் புரட்சியின் சிப்பென்றார்

கையடக்க செப்பேடு

நூலகத்தை கொள்வதோடு

வரலாறும் உள்ளடக்கும்

இன்று

மண்ணினில் ஒன்றாத ஈ வேஸ்ட் டென்றார்

நாளை என் எழுத்து என்னாகும்

மண்ணால் உருவான கூகுள் கோப்பா

வலைதளத்தில் சுற்றிவரும் வரையறை கோடா

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationசெவல்குளம் செல்வராசு கவிதைகள்பேச்சுப் பிழைகள்