நாகூர் புறா.

Spread the love


இரா ஜெயானந்தன்

 
மன்னர் அச்சுதப்பா நாய்க்கர் வயிற்று வலியால் அவதிப்படும் செய்தி, தஞ்சை மாநாகரெங்கும் ஒரே செய்தியாகப் பேசப்பட்டது. மக்களும் துயரத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். ராஜ வைத்தியர்கள், பல்வேறு மூலிகைச் சாறுகளால். தினமும் வெவ்வேறு வகையான வைத்தியங்களை செய்து வந்தனர்.

தஞ்சையின் அனைத்துக் கோவில்களில் இருந்தும், பிரசாதங்கள் வந்த வண்ணம் இருந்தன். முக்கியமாக பெரியக் கோவில் , புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசாதங்கள், மன்னனுக்கு அளிக்கப்பட்டது.

அரசாங்க கோப்புகள் முடங்கி கிடந்தன. வேற்று நாட்டு அரசர்களும், மன்னனின் உடல் நலத்தைப்பற்றி, ஒற்றர்கள் மூலமாக் அறிந்து வந்தனர்.

ஒரு பக்கம், சரசுவதி மகாலில் புரோகிதர்கள், ஓலைச் சுவடிகளில் , மன்னனின் ஜாதகத்தை ஆராந்துக் கொண்டிருந்தனர். ஜீவ நாடிகளில் குறை ஒன்றுமில்லையென்றுதான் தெரிய வந்தது. வான நட்சத்திரங்களயும் ஆராய்ந்து வந்தனர்.

மகா ராணிகள் பாலும்-தெனும் அருந்தாமல், அந்தப்புரம் வெறிச்சோடிக்கிடந்தது. பட்டாடை உடுத்தாமல், வாசனை திரவியங்கள் பூசாம்ல், ராணிகளின் தேகமெல்லாம், மெலிந்துக் காணப்ப்ட்டது. மன்னனைச் சுற்றி, அவர்கள் கவலயேடு அமர்ந்து இருந்தனர்.

சதிர் ஆட்டக்காரிகளும், ஆடமுடியாமல், தேவடியா தெருவில் ஆடி வந்தனர். மாலை நேரத்து மைனர்களும், மிட்டு-மிராசுகளும்தான், அவர்களுக்கு சோறுப் போட்டனர்.

மலையாள பகவதிகளும் வந்து, வைத்தியம் செய்து பார்த்தன்ர்.

இரட்டை மஸ்தான் சாயிபு வழியாக, அரன்மணைக்கு ஒரு செய்தி வந்தது.

நாகூரிலுள்ள, கலீபா ஷாகூல் வரவழைக்கப்பட்டால், நாகூர் ஆண்டவர் அருள் கிடைக்கலாம் என்ற செய்தியும், மன்னர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

கடைசியாக, நாகூரிலிருந்து, கலீபா ஷாகுல் அமீதும், அவரது சகாக்களும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டன்ர். கலீபா, மன்னனின் நாடியை சோதித்தார். பிறகு, நாகூர் ஆண்டவருக்கு, அரண்மனையில் பாத்தியா ஓதப்பட்டது. அரண்மனையைச் சுற்றி, மூஸஸீம்- நாய்யக்கர்களும் கூடி விட்டனர். நாகூர் முஸ்ஸீம் மக்களுக்கு, மன்னனின் மேல், வாஞ்சை இருந்தது.  மன்னனை, அவர்கள், தெய்வாமாகவே வணங்கினர்.

கல்ப் மன்னனின், கையை பிடித்து, நாடி பார்த்தார். பின், ரேகையை பார்த்தார்.
பிறகு, ஒரு வெற்றிலையை எடுத்து, மை போட்டார். பின், ஏதோ அதன்மேல்,
மயிற் பீலியை வைத்து ஓதினார். ஐந்து, நிமிடங்கள் கழித்து, அவருடைய வேலை ஆட்களை அழைத்து, அரண்மனையின், நாலாப் பக்கமும் போய் மாடங்களில் ஆராயச் சொன்னார். ஒரு மணி நேரம் கழித்து, ஒருவன், ஒரு புறாவேடு வந்தான். அந்தப்புறா பறக்க முடியாம்ல்,  முனுகிக் கொண்டிருந்தது.
அதன் சிறகுகளை, கலீப் ஆராய்ந்து பார்த்தார். அதன் சிறகுகளிலிருந்து,

சில முட்களை எடுத்து, மந்திரிகளிடம் காண்பித்தார். இது, யாரோ , மன்னனுக்கு எதிரான சதி செயலென கூறினார். அந்த முட்களை எடுத்தவுடன், மன்னனின் வழி குறைய ஆரம்பித்தது.ம்

மாமன்னர் வாழ்க ! வாழ்க ! வென்று மக்கள் வாழ்த்தினர்.

உடனே, மன்னர் அச்சுத்தப்ப நாய்க்கர் 400 ஏக்கர் நிலங்களை , நாகூர் தர்காவிற்கு இனமாகக் கொடுத்தார்.

நாயக்கர் காலத்திற்கு  பிறகு, தஞ்சையை ஆண்ட மன்னர்களும், நாகூர் தர்காவிற்கு , நிறையவே செய்துள்ளனர்.

மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739- 63) கட்டிய , 131 அடி உயரமுள்ள மினார்தான், நாகூரிலுள்ள மினார்களில் உயரமானது.

அவருடைய வாரிசுகள், 1000 ஏக்கர் நிலங்களை இனமாக கொடுத்துள்ளனர்.
இன்றுக்கூட, தஞ்சை மாவட்டங்களில், இந்து- மூஸ்ஸிம்கள் சாகோதர உணர்வுடன் வாழ்கின்றனர்.

நாகூர் தர்காவிற்கு, ஆண்டவரை வணங்கவரும் பக்கதர்கள், இன்று கூட, புறாக்களை வாங்கி, நன்றிக் கடனாக ,காணிக்கை செலுத்துகின்றனர்.

அவைகளுக்கு, தானியங்களை வாங்கி போட்டு மகிழ்கினறனர்.

14 நாட்கள் நடைபெறும், சந்தனக்கூடு , திருவிழா, முஸ்ஸிம்-இந்துக்கள் கூடித்தான் கொண்டாடி வருகின்றனர்.

Series Navigationகவிதைகள்நம்பிக்கை