நான் தனிமையில் இருக்கிறேன்

author
0 minutes, 15 seconds Read
This entry is part 11 of 22 in the series 19 ஏப்ரல் 2020

சுரேஷ் சுப்பிரமணியன்

என்னைப்பற்றி…

கதைகளிலும் கேட்டதில்லை 

கற்பனையிலும் தோன்றியதில்லை  

கனவிலும் கண்டதில்லை!

அழையா விருந்தாளியாய் 

அகிலத்தில் நுழைந்தேன்

அனைவருக்கும் 

அறிவுரை சொல்ல!

நான் கடவுள் அல்ல 

கடவுளையும் கருவறைக்குள் 

தனிமைப்படுத்திவன்!

அசுர வல்லரசுகளையும்  

ஆட்டம் காணச் செய்தேன்

பயமுறுத்த அல்ல 

படிப்பினை தந்து 

பாடம் நடத்த!

ஆதவனும் அலைகடலும் 

அடிமை என 

அறைகூவியனும் 

அடங்கி கிடக்கிறான் 

அறையினுள் இன்று!

வானும் வானுக்கப்பலும்

நீளும் என் கையென 

வாழ முயன்றவும் 

ஒடுங்கி ஒளிந்து இருக்கிறான் 

ஓர் அறையில் இன்று!

பணம் பணமென 

பறந்தவனும் 

பயம் பயமென 

பாசத்தின் 

பிடிக்குள் இன்று!

உறவை மறந்தவனும் 

உறவைப் பிரிந்தவனும் 

ஒர் உணர்வுடன் இன்று!

இயற்கையை நேசியுங்கள் 

இயற்கையுடன் ஒன்றிடுங்கள் 

இயற்கையை இயற்கையாய் 

இருக்க விடுங்கள்

என்பதே என் அறிவுரை!

அண்டம் 

அனைவருக்கும் சமமென 

உணருங்கள்!

தனிமையில் இருக்கிறேன்

தயவு செய்து 

தொந்தரவு செய்யாதீர்

என்னை!

தொட முயலாதீர்

பற்றிக்கொள்வேன் உங்களை 

பின்னர் 

தொற்றிக் “கொல்வேன்”.

முகராதீர் என் மூச்சை 

உங்கள் மூச்சை 

நான் முற்றிலும் 

அகற்றுவேன்!

தொடராதீர் என்னை 

உங்கள் உறவுகளின் 

தொடர்புகள் துண்டிக்கப்படும்!

பின்னர்… நீங்களும் 

தொடர்பு எல்லைக்கு 

அப்பால் இருப்பீர்கள்!

தனிமையில் இருக்கிறேன்

தயவு செய்து 

தொந்தரவு செய்யாதீர் 

என்னை!

விலகியே இருங்கள் 

நானும் விலகிடுவேன்

கூடிய சீக்கிரம்!

            – சுரேஷ் சுப்பிரமணியன் 

      – சுரேஷ் சுப்பிரமணியன் 

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]எழுத்தாளனும் காய்கறியும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *