நிஜங்களுக்கான பயணிப்புக்கள்

உலகத்தின் உயிர்ப்புக்களில் எழுப்பப்

பட்டு விடுகின்ற போலிகளுக்கு

நிஜங்கள் தோற்றுப்

போகும் மனங்களெல்லாம் நிச்சயம்

பிணம்தான்.

புத்தி மந்தமாகிப் போய் சோகமே

உருவாகி எதுமேயின்றி

வெறுமைக்குள் வறுமைப் படுத்தப்

பட்டு கல்வியெல்லாம் அகற்றப்படும்

அநத நாள் வருமே

அது பற்றியதான பயம்

எனக்கிருக்கிறது.

“கொலைகள் மலிந்த காலம் வரும்”

அப்போது இவ்வுலகம் மாறும்.

வாழ்வியலின் பிணைப்புக்குள்

உருட்டப் பட்டு சின்னக் கைகளுக்குள்

சிக்கி விடுகின்ற பொழுதுகள்

பற்றியதான அச்சம் என்னை

மேலும் அச்சப்படுத்துகிறது.

அந்த நாள் வருடம்

தொட்டு நிமிடமாகிப் போகுமே

மாயைகளாலும் சூட்சுமங்களாலும்

சாகசம் புரியும் இந்த

இருபத்தோராம் நூற்றாண்டு

பற்றியதான பயம் அறியாமையின்

கீழ் எட்டிப் பார்க்கிறது.

அது மட்டுமன்றிய இன்னுமொரு

வன் செயலும் உள்ளதே.

தாய் தன் எஜமானியைப்

பெற்றெடுக்கும் நாட்கள் இற்றைகளில்

எம் இதயம் தொடுகிறதே.

செல்வம் பெருக எம்முள்

கஞ்சத்தனம் உள்வாங்கப்பட்டு

உள்ளங்கையை உருட்டிக் குழப்பம்

செய்யும் அந்த நாள் தாண்டிய

பொழுதுகளில்

பள்ளிவாயல்கள் வண்ணங்கள் பூசப்பட்டு

அலங்கரிப்புக்குள்ளாக்கப்படும்

வாழ்வியலில் தொடரும்

வாழ்வில் நாளைய வாழ்தலுக்காய்

சிந்தும் கண்ணீரின் அர்த்தம்

உன்னில் எழ வில்லையோ?

இறைவனின் கோபங்கள்

தாண்டிய பரிவுக்காய்த்தான்

எனதின் மனம் இற்றைகளில்

பயணித்துக் கொண்டிருக்கிறது.

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 9)எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கைவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2