நினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)

 

  • லதா ராமகிருஷ்ணன்

Dr.V.V.B. ராமாராவ்

S.R. தேவிகா

டாக்டர். வி. வி.பி ராமாராவ் எழுதிய 22 சிறுகதைகளடங்கிய தொகுப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் எஸ்.ஆர்.தேவிகா. சுமார் 300 பக்கங்கள். விலை: ரூ230. வெளியீடு அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்; விற்பனை உரிமை – புதுப்புனல் பதிப்பகம் – பாத்திமா டவர் முதல் மாடி(ரத்னா கபேக்கு எதிரில்), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை. சென்னை 600 005. தொலைபேசி : 9884427997 ; மின்னஞ்சல் pudhupunal@gmail.com

 

நூலாசிரியர் ராமாராவ்

தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் புதினங்கள், வாழ்க்கைச்சரிதைகள், சிறுகதைத் தொகுப்புகள், திறனாய்வுக் கட்டுரைகளடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலிருந்து தெலுங்குமொழியிலும் தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திலும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புநூல்களும் அடங்கும்.

 

மொழிபெயர்ப்பாளர் எஸ்.ஆர்.தேவிகா

சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர். பணி ஓய்வுக்குப் பின்னர் மொழிபெயர்ப்புப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுவரும் இவருடைய முதல் மொழிபெயர்ப்பு நூல் இது. புகழ்பெற்ற பாரசீகக்கவிஞரான மிர்ஸா காலிபின் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்து உருதுமொழியிலும் ஆங்கிலமொழியிலும் மொழியாக்கம் செய்திருக்கும் திரு ,மூஸா ராஜா அவர்களின் (இந்தக் கவிதைகள் இப்போது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு கவிதா பதிப்பகத்தால் தொகுப்பாக வெளியிடப் பட்டுள்ளன) குறிப்பிடத்தக்க இன்னொரு ஆங்கில நூலான IN SEARCH OF ONENESS என்ற தலைப்பில், மதங்களிடையேயான ஒருமைத்தன்மையை வலியுறுத்தும் குறிப்பிடத்தக்க, இன்றைய காலகட்டத்திற்கு மிகத்தேவையான  நூலும் தேவிகாவால் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது.

நூலுக்கான அய்யப்ப பணிக்கரின் முன்னுரையிலிருந்து

கதாசிரியர், தன்னை தன்னுடைய வாசகர்களிடையே ‘தான் வாழ்வின் வேறுபட்ட ஒளி மற்றும் இருட்டின் வண்ணங்களை சிந்தித்துப் பார்க்கும் மனிதன்’ என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘LOVE AMONG THE RUINS’ ஐ  LOVE IN THE RUINS’ என்று கதையின் தலைப்பை மாற்றியதிலிருந்து, கதாசிரியர் தனது இருவித நோக்கங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். இந்த வர்ணனை கதாசிரியருக்கும் ஏற்ற ஒன்றாகும்; ஏனென்றால், அவருடைய எல்லாக் கதைகளிலும் ஒளி மற்றும் இருட்டின் பலவித வண்ணங்களை நாம் காண்கிறோம்.

 

Series Navigationதனிமொழியின் உரையாடல்ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு