May 24, 2026
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் எட்டு [தொடர்ச்சி] இன்னொரு வகை மனிதர் உண்டு. அவருக்கு சில நடப்புண்மைகளின் அடிப்படையில் உண்டான வருத்தங்கள், ஆதங்கங்கள் உண்டு.…
April 19, 2026
மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) அத்தியாயம் – 8 துன்புறுத்தப்படுவோமோ என்ற பேரச்சம் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன் துன்புறுத்தல் சார் உளவியல்ரீதியான பெரும்பீதி துன்புறுத்தல் சார் உளவியல்ரீதியான பெரும்பீதி அதன் ஆகத்தீவிர நிலைகளில்மனநோயாக அடையாளங்காணப்படும் ஒன்றாகும். சிலர், மற்றவர்கள் தங்களைக்கொல்லவோ, சிறையில் அடைக்கவோ, அல்லது தங்களுக்கு வேறு ஏதேனும் கடுமையானகாயத்தை ஏற்படுத்தவோ விரும்புவதாகக் கற்பனை செய்கிறார்கள். அவ்வாறு தம்மைத்துன்புறுத்துவதாய் அவர் கறபனை செய்துகொள்ளும் மனிதர்களிடமிருந்து தம்மைப்பாதுகாத்துக் கொள்ளும் விருப்பம் அவர்களை வன்முறைச் செயல்களில் ஈடுபடத்தூண்டுகிறது; இது அவர்களின் சுதந்திர இயக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டியஅவசியத்தை ஏற்படுத்துகிறது. மனநோயின் பல வடிவங்களைப் போலவே இதுவும்இயல்பானவர்கள் என்று கருதப்படும் மக்களிடையே வழக்கமாகக் காணப்படும் ஒருமனப்போக்கின் மிகைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். அதன் தீவிரமான வடிவங்களைப்பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை, ஏனெனில் அவை ஒரு மனநல மருத்துவர்கையாளவேண்டியவை. நான் அதன் மிதமான வடிவங்களைப் பற்றி மட்டுமே பேசவிரும்புகிறேன். ஏனெனில், அவையே மகிழ்ச்சியின்மைக்கான காரணங்களாகின்றன.மேலும், அவை திட்டவட்டமான மனநோயை உருவாக்கும் அளவிற்குச் செல்லாததால், அவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர் தனது பிரச்சனையைச் சரியாகக் கண்டறிந்து, அதன்ஆரம்பம் தனக்குள்ளேயே உள்ளது என்பதையும், மற்றவர்களிடம் இருப்பதாகத் தான்கருதும் கற்பனையான விரோதத்திலோ அல்லது ஈவு இரக்கமற்ற தன்மையிலோ இல்லைஎன்பதையும் கண்டறியும்படித் தூண்டப்பட்டால், அவற்றை அவராலேயேசரிசெய்துகொள்ள முடியும். மற்றவர்களிடம் இருப்பதாக அவர் கற்பனை செய்துகொள்ளும்நன்றிகெட்டத்தனம், இரக்கமின்மை மற்றும் துரோகம் ஆகியவற்றால் நிரந்தரமாகப்பாதிக்கப்பட்டவராகத் தம்மை பாவித்துக்கொள்ளும் ஆண்கள் அல்லது பெண்கள் போன்றநபர்களை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய நபர்கள் பெரும்பாலும் வியக்கத்தக்கவகையில் நம்பத்தகுந்தவர்களாக இருப்பார்கள், மேலும், அவர்களை நீண்ட காலம்அறியாதவர்களிடமிருந்தும் ஆழ்ந்த அனுதாபத்தைப் பெறுவார்கள். பொதுவாக, அவர்கள்கூறும் எந்தவொரு தனிப்பட்ட கதையிலும் உள்ளார்ந்த நம்பகத்தன்மையற்ற தன்மைஎதுவும் இருப்பதில்லை. அவர்கள் புகார் செய்யும் வகையான கொடுமைகள் சந்தேகத்திற்குஇடமின்றி சில சமயங்களில் நிகழ்கின்றன. முடிவில், தாம்எதிர்கொள்ளவேண்டியிருந்ததாக அவர்கள் சொல்லும் பலவகையான கெடுமதியாளர்களின், துரோகிகளின் எண்ணிக்கையே அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பவரிடம்சந்தேகங்களைத் தூண்டுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் வாழும் வெவ்வேறு நபர்கள், தங்கள் வாழ்நாளில் ஏறக்குறைய ஒரே அளவிலான கொடுமைகளைச் சந்திப்பதற்கானவாய்ப்புள்ளது என்று நிகழ்தகவுக் கோட்பாடு[doctrine of probability] சொல்கிறது. அப்படியான ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ள ஒருவர், தான் மற்ற அனைவராலும்துன்புறுத்தப்படுவதாகக் கூறினால், அதற்கான காரணம் அவரிடமே இருப்பதற்கானசாத்தியப்பாடே அதிகம். ஒன்று, அவர் உண்மையில் அனுபவிக்காத காயங்களைக்கற்பனை செய்துகொள்கிறார், அல்லது கட்டுப்படுத்த முடியாத எரிச்சலைத் தூண்டும்வகையில் தன்னையுமறியாமலேயே அவர் நடந்துகொள்கிறார். எனவே, அனுபவ சாலிகள்,உலகத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்படுபவதாகக் கூறுகிறவர்கள் மீது சந்தேகம்கொள்கிறார்கள்; அத்தகையோர் மீது இரக்கம் காட்டுவதில்லை. இதுவே அனைவரும்தங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று குறைசொல்வோர் எண்ணத்திற்கு வலுசேர்க்கிறது. இந்தப் பிரச்சனையைக் கையாள்வது உண்மையிலேயே கடினமானது.ஏனெனில் இது அனுதாபத்தாலும் அனுதாபமின்மையாலும் ஒரே மாதிரியாகத்தூண்டப்படுகிறது. துன்புறுத்தல்சார் பெரும்பீதிக்கு ஆளான ஒரு நபர், தான் முன்வைக்கும்ஒரு துன்பக் கதை நம்பப்படுவதைக் கண்டால், நம்பகத்தன்மையின் எல்லையை அடையும்வரை அதை மிகைப்படுத்திக்கொண்டே போவார். மறுபுறம், அது நம்பப்படவில்லைஎன்பதைக் கண்டால், அது மனிதகுலம் தன்னிடம் காட்டும் கல்நெஞ்சத்தனத்திற்குமற்றொரு உதாரணமாக மட்டுமே அமைகிறது. சரியான புரிதலின் மூலம் இந்தநோய்க்கூறைக் கையாள முடியும், மேலும் இந்தப் புரிதல் அதன் இலக்கைஎட்டவேண்டுமானால் அது நோயாளிக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். இந்தஅத்தியாயத்தில் எனது நோக்கம், இந்த கற்பனையான துன்புறுத்தல் தொடடர்பாய் சிலபொதுவான அவதானிப்புகளை முன்வைத்து அதன் மூலம் ஒவ்வொரு தனிநபரும், Persecution Mania எனப்படும் இந்த கற்பனைத் துன்புறுத்தல்சார் பெரும்பீதி மனநோயின்கூறுகளைத் (ஏறக்குறைய அனைவருமே இத்தகைய கற்பனையான பெரும்பீதியால்அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதிக்கப்படுகின்றனர்) தங்களுக்குள் கண்டறிந்து, அவற்றை அகற்ற முடியும். இது மகிழ்ச்சியைக் கையகப்படுத்துவதில் ஒரு முக்கியப்பகுதியாகும், ஏனெனில், எல்லோரும் நம்மைத் தவறாக நடத்துகிறார்கள் என்று நாம்உணர்ந்தால் நம்மால் மகிழ்ச்சியாக இருக்கவே இயலாது. உலகளாவிய அளவில் நிலவும் பகுத்தறிவின்மையின் பொதுவான வடிவங்களில் ஒன்று, வதந்திகள், வம்புகள் குறித்து ஏறக்குறைய எல்லோரும் கொண்டிருக்கும்மனப்பான்மையாகும். மிகச் சிலரால் மட்டுமே தங்களுக்கு அறிமுகமானவர்களைப் பற்றியும், சில சமயங்களில் தங்கள் நண்பர்களைப் பற்றியும் கூட அவதூறு செய்வதை, வன்மமானவம்புப்பேச்சில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடிகிறது; ஆனாலும், தங்களுக்கு எதிராக ஏதாவதுகூறப்பட்டதைக் கேட்கும்போது, மனிதர்கள் ஒரேயடியாக அதிர்ச்சியும் ஆத்திரமும்அடைகிறார்கள். அவர்கள் மற்றவர்களைப் பற்றி வதந்தி பரப்புவதைப் போலவே, மற்றவர்களும் அவர்களைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள் என்பது அவர்களுக்கு ஒருபோதும்தோன்றியதில்லை போலும். இது துன்புறுத்தல் சார் பெரும்பீதியின் ஒரு மிதமானவடிவமாகும். இந்த உணர்வுகள் அதீதமாகும்போதுதான் அது துன்புறுத்தல் சார்பெரும்பீதிக்கு வழிவகுக்கும். நாம் நம்மீது கொண்டிருக்கும் மென்மையான அன்பையும்ஆழ்ந்த மரியாதையையும் மற்ற அனைவரும் நம்மீது கொண்டிருக்க வேண்டும் என்று நாம்எதிர்பார்க்கிறோம். நாம் மற்றவர்களைப் பற்றி நினைப்பதை விட அவர்கள் நம்மைப் பற்றிஉயர்வாக நினைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்று நமக்குத்தோன்றுவதில்லை. அவ்வாறு தோன்றாததற்குக் காரணம், நமது சொந்த நற்பண்புகள்பெரியதாகவும் வெளிப்படையாகவும் நமக்குத் தெரிவதுதான். மற்றவர்களின் நற்பண்புகள்அவை இருந்தாலும் கூட, மிகவும் இரக்கமுள்ள கண்களுக்கு மட்டுமே புலப்படும். இன்னார்உங்களைப் பற்றி ஏதோ கடுமையான விஷயத்தைக் கூறிவிட்டார் என்று நீங்கள்கேள்விப்படும்போது,…
April 14, 2026
மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) அத்தியாயம் – 8 துன்புறுத்தப்படுவோமோ என்ற பேரச்சம் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL)துன்புறுத்தல் சார் உளவியல்ரீதியான பெரும்பீதி துன்புறுத்தல் சார் உளவியல்ரீதியான பெரும்பீதி அதன் ஆகத்தீவிர…
March 30, 2026
மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் அத்தியாயம் – 7 பாவ உணர்வு /…
March 30, 2026
லதா ராமகிருஷ்ணன் எந்தப் பிரச்சனை ஆனாலும் அதை அகல்விரிவாக பல்வேறு கோணங்களில் அலசி பார்க்க வேண்டியது அவசியம் ஆனால் பிரச்சினையின் கண்ணில் தெரியும் பகுதியை மட்டுமே பிடித்துக்கொண்டு…
March 1, 2026
ரங்கநாயகி (புதினம்) ஆசிரியர்: கே.பாரதி முதல் பதிப்பு: ஜனவரி, 20 21. வெளியீடு கவிதா பப்ளிகேஷன்ஸ் கே.பாரதி: கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாணவியாக இருந்த காலத்திலிருந்தே எழுத்துப்…
February 22, 2026
லதா ராமகிருஷ்ணன் .................................................................................................................................. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் குறித்து தோழர் பார்வையற்றவனின் காணொளிப் பதிவைக் காண நேர்ந்தது. https://www.facebook.com/reel/1180425227506969 மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அவர்களே குரல் கொடுக்க வேண்டும்…
January 5, 2026
மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம்…
December 29, 2025
மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம்…
December 8, 2025
THE CONQUEST OF HAPPINESS By BERTRAND RUSSEL தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் 5: சோர்வு (*சென்ற இதழ் தொடர்ச்சி) கவலையின் உளவியல் என்பது எந்த…