நிறை

© Copyright 2015 Corbis Corporation

மனம் நிறைந்து
வழிந்தது
நொடிகள் தாண்டி
நீளவில்லை என்பது
தவிர
நினைவில் எதுவுமில் லை

காந்தமாக ஒரு
தேவை
நினைவூட்டலாக ஒரு
அதிகார உரசல்
மனவெளியைத் தோண்டித்
தோண்டி
ஊற்று நீர் தேடும்

என் குறைகளை
நீக்க ஒண்ணாது
உள்ளே என்ன
குறை என்றே
அவரோகணம்

பொம்மலாட்டக்
கயிறு மட்டுமல்ல
பொம்மைகளும்
மாற்றிக் கொள்ளும்
மேடையில்
தன்வயமாயில்லாமல்
இருப்பை வடிவை கைகளை

நிறைவு தந்த
புனைவுக் கவிதையின்
கதையின்
மூலமாய் ஒரு
நிறைவின்மை

Series Navigation’மவுஸ்’பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீண்ட கடலடிக் கணவாய்