நிலம்நீர்விளைச்சல்

Spread the love

 

 

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

 

என்மேசையில்

எழுதாத சில

நாட்குறிப்புப் புத்தகங்கள்

 

எல்லா நாள்களும்

முழுப்பக்கமாய் அமைந்த

நாட்குரிப்பு ஏடுகள்

 

நடந்தாண்டாக இருந்தாலும்

நடப்பாண்டாக இருந்தாலும்

எழுதாத தாள்கள்மீது

தீராக்காதல்

 

இவற்றை

விரும்பிசேர்ப்பதும்

வேண்டிக்கேட்பதும்

என் அகலாநோய்

 

எப்போதும் என்பையில்

பலவண்ணமையில்

எழுதுகோல்கள்

 

எழுதித்தீர்க்கும்

பேராவலில்தான்

இந்தச்சேகரிப்பும் சிரத்தையும்

 

தீவிரமான வாசிப்பும் எழுத்தும்

நிகழ்ந்தால்

பரிமாணத்தைக் கூட்டலாம்

பரிணாமத்தைக் காட்டலாம்

 

நாட்குறிப்புத் தாள்கள்

தீரும்போதும்

எழுதுகோல்கள் மையை

இழக்கும்போதும்

இயல்பாய் மனதில்

வெளிச்சம்போடுகிறது மின்னல்

 

(27.01.2014 பகல் ஒருமணிக்கு)

Series Navigation