நிழல் பற்றிய சில குறிப்புகள்

 

 

 

குமரி எஸ். நீலகண்டன்

 

நிழல்களின் யுத்தம்

நேரிட்டப் பாதையில்…

எங்கோ புயலின் மையம்…

 

இருட்டில் நிழல்கள்

ஒன்றிணைந்தன.

வெளிச்சங்கள் கொஞ்சம்

விழித்த போது

விழுந்த இடமெல்லாம்

நிழல்களால் நீடித்தது

நித்தமும் போர்.

 

பணிவாய் நடக்கிற

போது முந்துவதும்

நிமிர்ந்து ஒளிப்பந்தை

வீரமாய் பார்த்தால்

பின்னால் பதுங்குவதும்

நிழலின் இயல்பு.

 

நிழல்கள் விழுந்தும்

காயப்படுவதில்லை.

மிதி பட்டும்

வலிப்பதில்லை.

 

punarthan@gmail.com

 

Series Navigationகுருட்ஷேத்திரம் மகாபாரத  தொடர் தொகுப்பாக அமேசானில்