நிழல் 38 குறும்பட பயிற்சி பட்டறை

வணக்கம்,
கீழ் கண்ட செய்தியை உங்கள்  இணைய இதழில்  வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறோம்.
   நிழல் -பதியம் இணைந்து தமிழக்கத்தின் 32மாவட்டங்களில் குறும்பட ப் பயிற்சி பட்டறையை நடத்திஉள்ளது .இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் 4500பேர் பயனடைந்துள்ளனர் .இன்று திரைப்படம் ,தொலைக்காட்சி ,இதழ்களில் பணியாற்றி வருகின்றனர் .இம்முறை தொழில் முனைவு மேம்பாட்டு மையத்துடன்  இணைந்து 38வது குறும்பட பயிற்சி பட்டறையை மே மாதம் 20முதல் 26 வரை சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, ஆப்பக்கூடல், பவானியில் நடத்த உள்ளது .
கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும் திரைப்படக்கல்வியை கிராமப்புற மாணவர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா ,திரைக்கதை ,படத்தொகுப்பு ,புகைப்படம் ,ஒளியமைப்பு ,நடிப்பு ,ஒப்பனை முதலியவை தமிழிலே கற்றுத்தரப்படுகிறது .இறுதி நாள் மாணவர்களே குறும்படம் எடுக்க பயிற்சி தருகின்றனர் .உணவு ,உறைவிடம் ,பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு .
பட்டறையில் 50குறும்பட ஆவண ப்படங்களும் ,உலகப் புகழ் பெற்ற 4திரைப்படங்களும் திரையிட ப்படும் .பயிற்சி பெற விரும்புவோர் முன் பதிவு செய்து கொள்ளவும் .தொடர்புக்கு :ப.திருநாவுக்கரசு ,94444484868, 31/48ராணி அண்ணா நகர் ,கே.கே,நகர் ,சென்னை-78
-நன்றி
ப. திருநாவுக்கரசு
Series Navigationஏமாற்றம்வெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியின் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறது