நீள் வழியில்

Spread the love

சத்யானந்தன்

தேடிச் சென்றவன்
விருப்ப விடை உரிமையை
நிலை நாட்ட இயலும்

மடிக்கணினி கைபேசி
இங்கித விதிவிலக்குப்
பெற்றவை

வரவேற்பு அறை
பாதுகாப்பின் இறுதிக் கோடு

தலையசைப்புடன்
எழுந்தேன்

குழாயில் தண்ணீர்
வரவில்லை
என்றாள்
சமாதானமாய்

நின்ற இடம்
திகைத்த புள்ளி
நீள்வழியில்
தொலைந்து போகும்

இனி
தன் அறைக்குள்
அவள் புகலாகலாம்

பெருக்கு வறட்சி
இரண்டும் தண்ணீர்க்
குழாயின்
வீச்சுக்கு வெளியே

Series Navigation