நீவிய பாதை

பிறர் நிர்ப்பந்தித்த பாதையில்
பலவீனமாய் பாதம் பதிக்கையில்
முளைத்தது முதல் கோணல்.

அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட நேர்கோடும்
தொடர்கின்றன மலை பாதை வளைவுகளாக…
முற்றும் கோணலாகும் துற்சம்பவம்
தடுக்க பட்டது, அக அகழ்வாராய்ச்சியினால்..

பயங்கள் மக்கியிருந்தது பலவீனங்களாக.
ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த படுத்த
நீவி நேராகிறது புதிய பாதைகள்..

-சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationமீண்டும் முத்தத்திலிருந்துதமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.