நூறு கோடி மக்கள்

Spread the love

மதி

 

பேருந்திற்காய்க் காத்திருக்கிறேன்.

சட்டை போடாத ஒரு சிறுவன்

கையைச் சுரண்டி

காசு கேட்கிறான்.

வழமை போல் மறுக்கிறேன்

சில்லறை இல்லை என்று

பொய் சொல்கிறேன்.

கூச்சம்

கழிவிரக்கம்

வறுமை

வருத்தம்

ஏமாற்றம்

எள்ளல்

கோபம்

யாசகம்

இவை ஏதும் அற்ற

ஒரு வெற்றுப் பார்வையை

என் தட்டில் இட்டு நகர்கிறான் அவன்.

பயம் வருகிறது.

 

gomskgs@gmail.com

 

Series Navigationவா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!பிணம்