நூலறுந்த சுதந்திரம்

 

 

சத்யானந்தன்

 

பிற பட்டங்களின் நூலை

அறுத்தெறிந்த காலம் முடிந்தது

மரத்தின் நெருங்கிய

கிளைகளில் அடைக்கலமானது

இந்தப் பட்டம்

 

நூலின் காற்றின்

இயக்குதலிலிருந்து

பெற்ற விடுதலை

இன்னொரு சிறை

எல்லாம் ஒன்றே

என்னும் ஞானம் சித்தித்தது

அதற்கு

 

கவனிப்புடன் சேர்ந்து

தானும் காலாவதியாகும்

நாட்காட்டியின் இதழ்களில்

ஒன்றாய் இருப்பதிலும்

இது மேல்

என்பதையும்

அது அறியும்

 

365 சிறகை

வெவ்வேறு திசையில்

வெவ்வேறு வீச்சில்

அசைக்கும் சுதந்திரம்

காலத்துக்கு

மட்டுந்தான்

 

காலவதியாகும்

கட்டாயமும்

இல்லை

 

 

Series Navigationஇலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹிசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு  உலை முழுத்திறனில் இயங்குகிறது