நூல்கள் வெளியீடு:

author
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 14 in the series 18 பெப்ருவரி 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * பிப்ரவரி மாதக்கூட்டம் .11 /2/18 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,நடைபெற்றது .

3 நூல்கள் வெளியீடப்பட்டன :

*. சுப்ரபாரதிமணியனின் ஆங்கில நூல் Migration 2.0

* எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘’ நாவல்

* ஆட்டனத்தியின் “ இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம் “

*. சுப்ரபாரதிமணியனின் ஆங்கில நூல் Migration 2.0 – சேவ் நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி வெளியிட வெண்மணி நடராசன் பெற்றார்.

* எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘’ நாவல் முடியரசு வெளியிட சசிகலா, இரத்தினமூர்த்தி பெற்றனர்

* ஆட்டனத்தியின் “ இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம் “- கட்டுரைத் தொகுப்பை பேரா. சுந்தரம் வெளியிட முனைவர் மனோகர் பெற்றார்.

* நூல்கள் அறிமுகம்..: *

“ உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் “ – பழ. நெடுமாறன் நூல் பற்றி தோழர் வடிவேல்* நூல் அறிமுகம் நிகழ்த்தினார் ..: *

– அந்தோனியா கிராம்சி – அறிமுகம் தோழர் ஓடை.துரையரசன் நிகழ்த்தினார் ..: *

* உரைகள் : படைப்பு அனுபவம்

– திசைகாட்டும் திருப்பூர் –பொதிகை சுந்தரேசன் பேசினார்

*இலக்கிய நூல்கள் அறிமுகம்: துருவன் பாலா

-அம்மாவின் கோலம் (ஜெயதேவன்)

-தொடர்ந்து படிகளில் ( சுப்ரா), கண்மறைத்துணி ( பிரதீபன் )

*இலக்கிய இதழ்கள் அறிமுகம் : பரிசோதனை, தொக்கம்

…பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வழங்கப்பட்டன.யோகி செந்தில், பாரதி இளந்தமிழர் சங்க நிர்வாகிகள் பாரதி வாசன், முத்து பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இடம் பெயர்ந்தவர்களின் அனுபவ்ங்களை நூலாக்கிய அனுபவத்தை ஆங்கில நூல் Migration 2.0 சுபரபாரதிமணீயன் பகிர்ந்து கொண்டு இவ்வாறு பேசினார்.

போர், கால நிலை மாற்றம், அகதி நிலையெல்லாம் மக்களை இடம் பெயர வைக்கும் என்ற வரையறை உடைந்து போய் காரல் மார்க்ஸ் வகைப்படுத்தாத, கண்டுபிடிக்காத தொழிலாளர்களாய் இடம் பெயர்ந்து வந்தத் தொழிலாளர்கள் இன்று பெருநகரங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் முக்கிய நகரம் திருப்பூர்

திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், அஸ்ஸாம் பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று 5 மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடும்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று… அங்கு வருமானம் குறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆதார் வைத்திருப்பார்கள். ரேசன் அட்டை என்று ஊரில் இருப்பதில்லை. நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன.

சாப்பாடு விசயத்தில் பெரிய அக்கறை கொள்வதில்லை. சப்பாத்தி( அதுவும் ஆட்டா மாவு போதும் ) , உருளைக்கிழங்கு சில கிலோக்கள் அவர்களுக்குப் போதும். தெருவோர வண்டிஉணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை. வெந்ததைத் தின்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கான கல்வியைப் பற்றி அக்கறை கொண்டு சேவ் என்ற தன்னார்வக்குழு திருப்பூரில் 15 இணைப்புப் பள்ளிகளை நடத்துகிறார்கள். அவற்றிலும் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் அமைப்பும் 9-14 வயதுக் குழந்தைகளையே இணைப்புப் பள்ளியில் ( ப்ரிட்ஜ் ஸ்கூல் ) சேர்க்கிறார்கள். மற்ற குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு அல்லது இச்சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டு ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தையைப்பார்க்க இன்னொரு குழந்தை இருக்கிறது வீட்டில் இருக்கும் 5-8 வயதுக்குழந்தைகளை அரசும் கைவிட்டு விட்டது. புலம்பெயர்ந்த மக்களின் இக்குழந்தைகளை இணைப்புப் பள்ளியில் சேர்த்து ஒரு வருடம் கழித்து அவர்களின் வயதிற்கு ஏற்ப அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தமிழ் தெரிவதில்லை. இந்தி பாடமும் அங்கில்லை. ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்.” என்றார்

. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

Series Navigationதூக்கமின்மைஇரண்டாவது கதவு !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *