தருணங்கள்

Spread the love

நேற்றைய தருணங்கள்

வர்ணம் மாற்றி பச்சோந்தியெ

விரியும் கடந்து போன நம்
வானவில் தருணங்கள்.

பாசாங்கு நிரம்பிச் செழியும்
பிழையில்லா சொற்பூவில்
தேன் பருகி மடிந்த
முன்னேற்பாடிராத சாவ

நேற்றைய கவசத்தை
கூர்கல் மண் மோதலில்
தொலைக்கச் செய்து
புத்தாடை தறித்த
பாம்பின் செதில்.

புரிதலில்லா பசப்பு மொழி
வாசத்தில் வெந்து சுருண்ட
விட்டில் பூச்சி உறவு.

இந்ததருணங்கள

காலத்தின் மூச்சைத் தின்று
பகிர்ந்து கொண்டநீண்ட
ஓர் முத்தத்தின் இறுதியில்
சொட்டு நஞ்சின் பாய்ச்சல்.

அகலவாய் திறந்து
சலனமில்லா நீர்நிலையில்
கண்ணயர்ந்திருக்கும் முதலையின்
கொடும்பற்களின் கரை அகற்றி
இரையாகும் நாரையின் ஊழியம்.

புங்கை நிழலில் கண்ணயர்ந்த
களிப்பின் வெறியில் வேர்களை
வெட்டத் தொடங்கும் கோடரிக்கரம்.

பகலில் அமைதி தறித்து இரவில்
மூர்க்கம் கொள்ளும் ஆந்தை
முகமூடி இழக்கும் வௌவால்.

இச்சகம் பேசி புணர்ந்தஇறுதி
கூரியநகத்தில் மார்பு கிழித்து
சங்கை நெறிக்கும் கரங்கள்.

இவையின்றி எண்ணிப்பார்க்க
ஒன்றுமில்லை நாமில்லாத
நம் இந்ததருணங்களில்.

-சோமா (9865390696)

Series Navigationசின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்