அறியான்

Spread the love

எல்லாம் எல்லாம் என்னால் என்னால் என்றான்
எதற்கும் எதிலும் தானேதான் என்றான்
அடக்கிப்பார்ப்பதில் அளவிலாமல் போனான்
தானே தானே என்றவனை
தாக்கிபோட்டதுவோர் “தானே” புயல்
தேதி அறிந்தான் நேரம் அறிந்தான் இட எல்லை குறித்தான்
என்றாலும் தடுக்க இயலாமல் னான்
இப்போது அடங்கிக் கிடப்பான் இவன்
மின்சாரமும் வீடும் நிவாரணமும் உப்பும் சோறும் உறவும்
மீண்டும் கிட்டியதும்
மீண்டும் “தானே” என்பான்
தன்னை மீறிய இயற்கை அறியான்!

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி-28‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’